தமிழகம் உச்சரிக்கும் பிரபலமான வார்த்தை “அம்மா” வும் அதனையொட்டி வந்த பிராண்டட் பொருட்களும்

தமிழகம் முழுவதும் குறைந்த விலையில் கிடைக்கும் அம்மா பொருட்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன
தமிழகம் உச்சரிக்கும் பிரபலமான வார்த்தை “அம்மா” வும் அதனையொட்டி வந்த பிராண்டட் பொருட்களும்
தமிழகம் உச்சரிக்கும் பிரபலமான வார்த்தை “அம்மா” வும் அதனையொட்டி வந்த பிராண்டட் பொருட்களும்

தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் இலவசங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை மக்கள் எப்போதும் நினைவில் வைக்கும் வகையில் உள்ளது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஏழைகளுக்கு உதவும் வகையில், அம்மா பிராண்ட் தயாரிப்புகளை அதிமுக அரசு பிரபலபடுத்தி வருகிறது.

அம்மா உணவகம்

Image : Thamizhpparithi/ Wikipedia Commons

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அம்மா உணவகங்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு ஏழைகள் மற்றும் தினக்கூலிகள் பயன்பெறும் வகையில் சுவைமிகு உணவு மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

இட்லி 1 ரூபாய், தயிர் சாதம் 3 , சாம்பார் சாதம் 5 ரூபாய் என அடித்தட்டு மக்களை மகிழ்ச்சியடைய செய்துவருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அம்மா குடிநீர்

பசியை போக்க அம்மா உணவகம்; அப்படியானால் தாகம் தணிக்க ? 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது அம்மா குடிநீர். ஒரு லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில் 10 ரூபாய்க்கு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பஸ் ஸ்டாண்டுகளில் விற்கப்படுகிறது.மேலும் தொலை தூர அரசு பஸ்களிலும் விற்கப்படுகிறது

அம்மா லேப்டாப்

மாணவ மாணவியர் புதிய தொழில்நுட்பத்தை பெறும் பொருட்டு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் 11 லட்சம் மாணவ மாணவியரை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஜிபி ரேம் உடன் கூடிய டியுவல் கோர் பிராசசர், 120 ஜிபி ஹார்ட் டிஸ்க், மற்றும் வை –பை வசதியுடன் இந்த லேப்டாப்புகள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 26000 ரூபாய் மதிப்புள்ள இந்த லேப்டாப்புகளை பெற்றுகொள்பவர்களில் பலர் 8000  முதல்  10000 வரை உள்ள விலையில் வெளியில் விற்று விடுகின்றனர்.

அம்மா குழந்தைகள் பொருட்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் , அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா சிறப்பு பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். டவ்வல், துணி,மெத்தை ,கொசுவலை, பேபி ஆயில் ,ஷாம்பு , சோப்பு, நகம் வெட்டி ,பொம்மை உட்பட குழந்தைகளுக்கான 16 பொருட்களும் இவற்றில் அடங்கியுள்ளன.

அம்மா உப்பு

தமிழ்நாடு உப்பு கழகம் சார்பில் அம்மா உப்பு கடந்த 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சோடியம் குறைவாக உள்ள அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இருமுறை தூய்மைபடுத்தப்பட்டு கிலோ 14 ரூபாய்க்கு கிடைக்கிறது, இதன் சந்தை விலை 21 ரூபாய். இது போன்ற திட்டங்கள் வெற்றி பெற்ற பின் சிமென்ட் அறிமுகபடுத்தப்பட்டது

அம்மா சிமென்ட்

ஒரு மூட்டை சிமென்ட் 190 ரூபாய்க்கு தமிழகம் முழுவதும் உள்ள 220 தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து விரிவாக்கம் மூலம் 250 குடவுன்களில் வழங்கப்படுகிறது.100  சதுர அடிக்கு 50 மூட்டைகள் வழங்கபடுகிறது. இது போன்றே 1500 சதுர அடிக்கு அதிகபட்சமாக 750 மூடை சிமென்றுகள் வழங்கப்படுகின்றன.

அம்மா விதைகள்

விவசாயிகளுக்கு நல்ல தரமுள்ள விதைகளை வழங்கி விவசாயத்தில் அதிக அளவில் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதே அம்மா விதை திட்டம். இவைகள் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா சேவை மையங்களில் நியாயமான விலையில் கிடைக்கின்றன.

அம்மா கிரைண்டர் மற்றும் மின்விசிறி

இவை தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள இலவசமாக வழங்கும் திட்டமாக அரசியல்வாதிகள் அறிமுகபடுத்தினர். அதனடிப்படையிலேயே  ஜெயலலிதாவால் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை தொடர்ந்து மிக்சி,கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டு வருகின்றன.இத்துடன் இலவச ஆடுகள் மற்றும் பசுக்களும் பெரும்பாலும் விநியோகிக்கப்பட்டுவிட்டன.

அம்மா மருந்தகம்

உயிர்காக்கும் மருந்து பொருட்கள் விண்ணை முட்டும் வகையில் உயரே செல்லும்போது அம்மா மருந்தகங்கள் அவற்றின் வேகத்தை தணிக்கின்றன.2014 ஆம் ஆண்டு அம்மா மருந்தகங்கள் துவங்கப்பட்டு, சென்னை, ஈரோடு, மதுரை,சேலம்,விருதுநகர்,சிவகங்கை,கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது. ஒரு கோடி ரூபாய் மதிப்புமிக்க மருந்துகளை குறைந்த விலையில் குறிப்பாக சந்தை விலையை விட 10 சதவீதம் குறைந்த விலையில் இங்கு விற்கப்படுகின்றன.

அம்மா மொபைல்ஸ்

அதிக பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அம்மா மொபைல்ஸ் திட்டம் கடந்த செப்டம்பர் 2015 இல் அறிமுகமானது. இதில் மொபைல் போன்களில் சிறப்பு தமிழ் மென்பொருட்கள் புகுத்தப்பட்டு 20000 மகளிர் சுய உதவிகுழுக்களின் பயிற்சியாளர்களுக்கு ரூபாய் 15 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 6 லட்சம் சுய உதவி குழுக்களில் 92 லட்சம் பெண்கள் உறுப்பினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா அழைப்பு மையம்

இந்த நலத்திட்டங்களின் வரிசையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அம்மா மக்கள் சேவை மையம். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது. குறிப்பிட்ட மாநகராட்சி அல்லது நகராட்சிகளில் வசிக்கும் மக்கள் மண்டல அலுவலகங்களுக்கு சென்று இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள், புது வீடு கட்ட அனுமதி, வியாபார உரிமங்கள், தண்ணீர் இணைப்பு, சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை சார்ந்த சான்றிதழ்கள் எளிதில் பெற அழைப்பு மையம் உதவுகிறது.

அம்மா சினிமா தியேட்டர்

இது போன்றே “அம்மா” சினிமா தியேட்டர்களும் சென்னையில் அமைக்க மாநகராட்சியினர் மிக தீவிரமாக உள்ளனர். டி.நகர், பேசின்பிரிட்ஜ், கொட்டுர்புரம்,ராமாபுரம்,புளியந்தோப்பு,கோடம்பாக்கம்,வால்டாக்ஸ் ரோடு என மொத்தம் 7 இடங்களை முதற்கட்டமாக தேர்வு செய்து மாநில அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.2014 இல் நியாயமான விலையில் படம் பார்த்து பொழுதுபோக்கி கொள்ள அம்மா தியேட்டர் அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது. 

முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தியேட்டர்கள் யூ தர சான்றிதழ் பெற்ற படங்களை 25 ரூபாய்க்கும் குறைவான டிக்கட் விலையில் திரையிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அம்மா காய்கறி கடை

அதுபோன்றே நீங்கள் காய்கறிகடைக்காரரிடம் சண்டையிட வேண்டாம் என அவர் முடிவு செய்துவிட்டார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விலையை கட்டுபடுத்த குறைந்த விலை காய்கறி கடைகள் துவங்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து  நேரடியாக குறைந்த விலைக்கு காய்கறிகளை பெற்று அவற்றை கடைகளில் கொண்டு வந்து விற்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் காய்கறி விலை கட்டுக்குள் வைத்திருக்க முடிவதுடன், நடுத்தர குடும்பத்தினர் குறைந்த விலையில் வாங்கி கொள்ளவும் முடியும். இந்த காய்கறி கடை துவங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 13000 கிலோ காய்கறிகள் விற்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com