Tamil Nadu

தைரியசாலியான கௌசல்யா, சங்கரனிடம் காதல் கொண்டது எப்படி?

Written by : Divya Karthikeyan

வழக்கத்துக்கு மாறான வெயில் அடித்து கொண்டிருந்த காலை நேரம்.கோயம்பத்தூர் பொது மருத்துவமனையின் சிமென்ட் தள நடைபாதையில் ஒருவர் நிலைகுலைந்து போயிருந்தார். அவரை சுற்றி உறவினர்களும்,நண்பர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆறுதல் அளிப்பதும் குடிக்க தண்ணீரும் கொடுத்தபடி நின்றிருந்தனர். மனம் தளர்ந்த நிலையில் மிகவும் சோர்வுற்று காணப்பட்ட வேலுச்சாமியிடம், அவரது மகனை பற்றி கேட்டபோது, “ எந்த தொந்தரவும், எந்த வம்பும் இல்லாமல் அவன் அமைதியாக போய்விட்டான்.” என்று அழுகையை கட்டுப்படுத்த முடியாதவராக கூறினார்.

ஒரு தினக்கூலியான வேலுச்சாமி, ஏற்கனவே தனது மனைவியை இழந்தவர். அதன்பிறகு அவரது வாழ்க்கை, வேலை முடித்ததும் வீடு, இருக்கும் கஞ்சியை குடிப்பது, பின்னர் தூங்க செல்வது என்பதாக இருந்தது.

தனது பிள்ளைகள், அவர்களுக்கான இடத்தை தெரிந்து வைத்திருந்தார்கள் என கூறும் வேலுச்சாமி, அவர்களின் கனவை நிவிர்த்தி செய்ய வேகமாக ஓடினார். “சங்கரனுக்கு நாலு வயசு இருக்கும்ங்க. ஒரு டவுணில பறக்கிற ஹெலிகாப்டர் படத்த என்கிட்ட காட்டினான்.அவன் என்கிட்டே இத எனக்கு தருவியான்னு கேட்டான். அவனுக்கிட்ட நான் எப்படி முடியாதுன்னு சொல்றது ? அவன் ஒரு சொன்னா கேட்க கூடியவனா இருந்தான்.” என கூறிய வேலுச்சாமி, தான் உழைத்த காசில் 40 ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுத்ததாக கூறினார்.

அவனுக்க” சந்தோசம் தான் முக்கியம். அத அவனுக்கு வாங்கி கொடுத்துட்டு, அந்த பொம்மை ஹெலிகாப்டர் எங்களுக்கு அல்ல. நீ வேணும்னா உடைச்சிடலாம்னு “ கூறியதாக கூறினார்.

அமைதியாக பேசவும், கூச்ச சுபாவமும் உள்ளவராக சங்கரன் இருந்ததாக அவரது சகோதரரும், நண்பர்களும் கூறினர். “யாராவது அவனிடம் போய்  பிரச்சினை பண்ணினால் கூட, பழிக்கு பழி வாங்கும் குணம் அவனிடம் இல்லை. அப்படி ஒரு சாதுவாக அவன் இருந்தான் “ என சங்கரனின் நினைவை கூறிய அவரது நண்பர். “ அவன் பள்ளி கூடம் விட்டு கேரம் விளையாட வரும்போது, அவனது சாதுவான குணம் போய்விடும். அருமையாக விளையாடுவான்”. என்றார்.

Sankar's friend

பழனிக்கு செல்லும் ஒரு கல்லூரி பஸ்ஸில் கௌசல்யா, சங்கரனிடம் தனது மனதை கொடுத்தார். சங்கரனின் ஒன்றுவிட்ட சகோதரரான, கௌசல்யாவின் நண்பர்  ஒருவர் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். “ சங்கரன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.” என கூறும் நண்பர், தொடர்ந்து கௌசல்யாவின் மீதிருந்த பாசத்தால், கல்லூரி முடிந்ததும், யாருக்கும் தெரியாமல், அவரது வீட்டிற்கு கொண்டு போய் விடுவதை வழக்கமாக இருந்தார் என கூறினார்.” உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். வேலையும் காதலும் தான் இளைஞர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது. கடைசியில தான் ஜாதி நினைவுக்கு வரும்” என தெளிவுடன் கூறினார் அவர்.

அவர்கள் இருவரும் கல்லூரியில் அடிக்கடி சந்தித்தனர். வெளியில் சுற்றவும் செய்தனர். இருவரும் ஒருநாள் ஒன்றாக பஸ்ஸில் இருந்ததை பார்த்த, கௌசல்யாவின் குடும்ப நண்பர் ஒருவர், அதனை அவரது வீட்டில் சொல்லவும் செய்துள்ளார். அவர் தான் சங்கரனின் ஜாதி என்ன என்பதை விசாரித்து சொன்னதாகவும் கூறுகிறார் அவரது நண்பர்.

அதன்பிறகு மிரட்டல்கள் துவங்கியுள்ளது. தொடர்ந்து கௌசல்யா, தான் எவ்வளவு வேகமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியுமோ, அதனை செய்ய சங்கரனிடம் கூற, சங்கரன் அவரை அமைதியாக பொறுக்கும்படி கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து கௌசல்யாவின் தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்க மதுரை சென்றதோடு, பல வகையிலும் தொந்தரவும் கொடுத்துள்ளார்.

ஜூலை 2015 அன்று, சங்கரனை அழைத்த கௌசல்யா, சங்கரனை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சங்கரன் தனது நண்பர்களுடன் பழனிக்கு சென்றுள்ளார்.” அவ்வளவு தான். அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர்கள் சென்றார்கள். போலீசார் அவரது குடும்பத்தினரை வரவழைத்து எல்லாத்தையும் சொன்னார்கள்”

அவர்களை பொறுத்தவரை இருவருமே தைரியமான தம்பதிகள்.” இந்த மாதிரி சொந்த குடும்ப உறவினர்களே, மிரட்டும் போது, யார் தான் அமைதியாக வாழ்வார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் அவர்களை எப்போதுமே, பாதுகாக்க வேண்டும் என விரும்பினோம்.” கௌசல்யா தனது படிப்பை நிறுத்தி, ஒரு டைல்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல துவங்கினார்.

சங்கரனின் மற்றொரு நண்பர் கூறுகையில்” உங்களுக்கு தெரியுமா, கௌசல்யா முதலில் முன்வந்தார். சங்கரனை திருமணம் செய்ய கௌசல்யா முதலில் முன்வந்தார்.எனக்கு வேறு வழி தெரியவில்லை” என கூறிய அவரது முகத்தில் பதைபதைப்பு தெரிந்தது. மேலும் அவர் “ சங்கரனை விட கௌசல்யா மிகவும் தைரியமானவர். அது தான் எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது.” என்றார்.

The identity theft of Rohith Vemula’s Dalitness

Telangana police to reinvestigate Rohith Vemula case, says DGP

HD Revanna cites election rallies for not appearing before SIT probing sexual abuse case

A decade lost: How LGBTQIA+ rights fared under BJP govt and the way forward

In Holenarsipura, Deve Gowda family’s dominance ensures no one questions Prajwal