ஓரினசேர்க்கை தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றம்

ஓரினசேர்க்கை தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றம்
ஓரினசேர்க்கை தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றம்
Written by:

ஓரினசேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய கோரிய வழக்கினை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 செல்லத்தக்கதா என்பதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் இந்த முடிவினை எடுத்துள்ளது. இதன்படி   குறிப்பிட்ட அந்த சட்டபிரிவை நீக்க கோரிய சட்டபோராட்டம் இன்னும் முடிவடையவில்லை. மேலும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து சீராய்வு மனுக்களையும் ஒன்றாக உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

முன்னதாக, ஓரினசேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய கோரி ஓரினசேர்க்கை ஆதரவாளர்களும், நாஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம், பட தயாரிப்பாளர் ஷ்யாம் பெனிகல் உட்பட பலர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

2009 இல் இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினசேர்க்கைக்கு  தண்டனைக்குரிய குற்றத்திலிருந்து விலக்கு அளித்து தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுகிறது என கூறியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓரினசேர்க்கை சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றத்திலிருந்து விலக்கு அளித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு டிசம்பர் 2013 இல் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ஓரினசேர்க்கை குற்றமா ? இல்லையா ? என தீர்மானிப்பது பாராளுமன்றத்தின் வேலை எனவும், நீதித்துறை இதில் தலையிடக்கூடாது எனவும் கூறியது.

இதற்கு முன்னர், 2014 இல் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய கோரிய மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் பிரிவு 377 ன் மீதான சட்டபூர்வ அங்கீகாரத்தை உறுதி செய்தது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1860 இல் கொண்டுவரப்பட்ட இச்சட்டம், ஒருவர் சுயவிருப்படியோ அல்லது கட்டாயப்படுத்தியோ இயற்கை மாறாக ஆண், பெண் மற்றும் விலங்கினங்களுடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 கூறுகிறது. அத்தகைய குற்றத்தை செய்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க இந்த பிரிவு வழிவகை செய்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 136, நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் உரிமையை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மறுசீராய்வு மனுக்கள் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ அல்லது பிற சட்டங்களிலோ குறிப்பிடப்படவில்லை. அசோக் ஹர்ரா எதிர் ரூபா அசோக் ஹர்ரா வழக்கில் உச்சநீதிமன்றம், தீர்ப்பை பரிசீலனை செய்ய கோரும் மனுக்களில் இயற்கையான நீதி மறுக்கப்பட்டாலோ அல்லது வெளிப்படைத்தன்மையுடன் தீர்ப்பு வழங்கபடாவிட்டாலோ மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என கூறியுள்ளது.இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யும் போது சீனியர் வழக்கறிஞர் ஒருவர் சான்றளித்திருக்க வேண்டும்.

இதுகுறித்து வழக்கறிஞர் லாரன்ஸ் லியாங் நியூஸ் மினிட்டிடம் கூறியதாவது” மறு சீராய்வு மனு இந்திய நீதி துறையின் புதுவித கண்டுபிடிப்பு.இந்திய நீதி துறையில் நீதிக்கான இறுதி வாய்ப்பை இது தருகிறது” என கூறினார்.

வழக்கின் பின்னணி :

கடந்த 2001 ஆம் ஆண்டு வயது வந்தவர்கள் சம்மதத்துடன் ஓரினசேர்க்கை செய்துகொள்ளுவதற்கு, சட்டபூர்வ அங்கிகாரத்தை பெறும் நோக்கில் நாஸ் பவுண்டேஷன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.

செப், 2 – 2004 இல் உயர் நீதிமன்றம் ஓரினசேர்க்கையை தண்டனைக்குரிய குற்றத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய அந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது.

செப் 18 இல் ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் சார்பில் தீர்ப்பை பரிசீலனை செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நவம்பர் 3 இல் அந்த மனுவையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகினர்.

ஏப்ரல் 3, 2006 இல் உச்சநீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் அந்த வழக்கை மீண்டும் கவனமுடன் விசாரிக்கும்படி உயர்நீதிமன்றத்தை அறிவுறுத்தியது.

அக்டோபர் 4 இல் உயர்நீதிமன்றம் மூத்த பாரதீய ஜனதா தலைவர் சின்ஹாவின் ஓரினசேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதக்கூடாது என்பதனை எதிர்த்த மனுவை அனுமதித்தது.

செப்டம்பர் 18 ,2008 இல் மத்திய அரசு, உள்துறை அமைச்சகத்துக்கும், சுகாதார அமைச்சகத்துக்கும் இடையே இந்த விவகாரம் குறித்து ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கி சரியான முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் கேட்டது. இதனை உயர்நீதிமன்றம் மறுத்து, இறுதி வாதத்தை துவங்கியது.

செப்டம்பர் 25 : ஓரினசேர்க்கையாளர்கள், அரசு ஒழுக்கத்தை காரணம் காட்டி தங்கள் அடிப்படை உரிமையின் மீது தலையிட முடியாது என வாதிட்டனர்.

செப்டம்பர் 26 உயர்நீதிமன்றம், மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார துறை தாக்கல் செய்திருந்த முரண்பாடான முடிவுகளை கண்டித்தது.

செப்டம்பர் 26 ஓரின சேர்க்கை ஒழுக்கங்கெட்டது எனவும், விபரீதமான மனநிலையை உருவாக்குகிறது எனவும் குற்றமற்ற செயலாக அறிவிப்பது சமூக ஒழுக்கத்தை பாதிக்கும் எனவும் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.

அக்டோபர் 15,2008  உயர்நீதிமன்றம், மத்திய அரசு மத நூல்களில் உள்ள நம்பிக்கையை கொண்டு பேசாமல் அறிவியல் ஆய்வு அறிக்கைகளை  கொண்டு முடிவு செய்யும்படி அறிவுறுத்தியது.

நவம்பர்: ஓரினசேர்க்கை விவகாரத்தில் நீதி துறை முடிவெடுப்பதிலிருந்து விலகி இருத்தல் வேண்டும் என்றும், பாராளுமன்றம் இவ்விவகாரம் குறித்து முடிவு செய்யும் எனவும் எழுத்து பூர்வமாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

நவம்பர் 7 : உயர்நீதிமன்றம் இது தொடர்பான தனது முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

ஜூலை 2, 2009 : வயது வந்தோர் சம்மதத்துடன் ஓரினசேர்க்கை செய்து கொள்ளுவது தவறில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

ஜூலை 9 : இதனை எதிர்த்து டெல்லியை சேர்ந்த ஜோதிடர் ஒருவர், வலதுசாரிகள், பாரதீய ஜனதா தலைவர் சின்கா,பாபா ராம்தேவின் சீடர்கள் என பலர் உச்சநீதிமன்றம் சென்றனர்.

பிப்ரவரி 15,2012 : உச்சநீதிமன்றம் இதுகுறித்த இறுதி விசாரணையை துவங்கியது.

மேய் 17, 2012 : உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

டிசம்பர் 11, 2013 உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து ஓரினசேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என தீர்ப்பு கூறியது.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com