பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் மீதான இடைநீக்கம் ரத்து. கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை திருச்சபை மென்மையாக கையாளுவதாக சர்ச்சை எழுந்துள்ளது
பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் மீதான இடைநீக்கம் ரத்து. கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை
பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் மீதான இடைநீக்கம் ரத்து. கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை
Written by:

ஆகஸ்ட் 24, 2005 அன்று அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டாவில் இருக்கும் க்ரூக்டன் டையோசியசிற்கு மொட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், அதன் கீழுள்ள ஒரு சர்ச்சில் வேலை செய்யும் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால், அங்குள்ள மைனர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்ததாக பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண், இதே பாதிரியாருக்கு எதிராக குற்றச்சாட்டுகளுடன் வந்தார். துறவு வாழ்க்கைக்கு செல்ல விரும்பிய தன்னிடம் பாதிரியார் ஜோசப் பலனிவேலால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மின்னசோட்டா நீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஓராண்டு ஜெயில் தண்டனை முடிந்ததும் அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.

ஆனால், இந்தியா திரும்பிய பின்னர், குழந்தைகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில், அவருக்கு எதிரான இடைநீக்கத்தை தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை ரத்து செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுடன் எவ்வித தொடர்பை வைத்திருக்க கூடாது என்றும்,மீண்டும் திருச்சபை பணிகளுக்கு செல்ல கூடாது என்றும் இரு நிபந்தனைகளின் பேரில் தான் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு குறைந்த கால தண்டனையை வழங்கியுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் பாதிரியாரின் இடைநீக்கத்தை குறித்து செய்திகள் வெளியிட்ட நிலையில், அவருக்கு திருச்சபை பணிகளை ஒதுக்குவதில் எவ்வித தயக்குமும் இல்லை என உதகமண்டலம் டையோசியஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊட்டி டையோசியஸ் செய்தி தொடர்பாளர் செபாஸ்டின் செல்வநாதன் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில் “ அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு கோர்ட்டின் உத்தரவின் பேரில் தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரது வழக்கு ரோமில் உள்ள விசுவாசகோட்பாட்டு பிரிவிற்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து வந்த வழிகாட்டுதலின் படியே தற்போது அவருக்கு எதிரான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு அவருக்கு எவ்வித திருச்சபை பணிகளும் வழங்கப்படவில்லை. ஒருவேளை திருச்சபை பணி வழங்கப்படுமாயின், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்படும்”. என்றார்.

இந்திய கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாட்டின் செய்தி தொடர்பாளர் ஞானபிரகாஷ் டோப்னோவிடம் இது குறித்து கேட்டபோது, உதகமண்டல டையோசியஸின் முடிவு குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.” இதுகுறித்து நாங்கள் டெல்லியில் இருந்து கொண்டு கருத்து சொல்ல முடியாது. அந்த முடிவு உதகமண்டல டையோசியசால் எடுக்கப்பட்டது.சில காரணங்களை கொண்டு அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். அவற்றை நாங்கள் இப்போதைக்கு கேள்வி கேட்க முடியாது.எனக்கு தெரிந்து இதுவரை அவருக்கு எந்த பணியும் வழங்கபடவில்லை.” என்றார்.

அவரது இத்தகைய கருத்து, இந்திய கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு 2010 இல் எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து வேறுபடுகிறது. கத்தோலிக்க சபைகளின் மேல்முறையீட்டு அமைப்பான, இதன் பேரவை கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமும் செய்யகூடாது என முடிவு செய்யப்பட்டது.

மேலும்” பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுக்கு உள்ளான எந்த பாதிரியாரும், திருச்சபையின் எல்லாவித நடவடிக்கைகளிலும் இருந்து இடைநீக்கம் செய்யபட வேண்டும். சில அதிகப்படியான சூழலில் திருச்சபையிலிருந்து நீக்கம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் “ என குறிப்படப்பட்டுள்ளது.

திருச்சபையின் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து, ஞானபிரகாஷ் டோப்னோவிடம் கேட்டபோது அவர் மேற்கூறப்பட்டவற்றை மீண்டும் கூறினார். ஆனால், தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபையின் முடிவில் கருத்து எதுவும் இல்லை என கூறி மறுத்துவிட்டார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மையத்தின் வித்யா ரெட்டியிடம் இதுகுறித்து கேட்டபோது,” எண்ணற்ற கல்வி நிறுவனங்களை நடத்தும் கத்தோலிக்க திருச்சபை, குழந்தைகள் பாதுகாப்பை இவ்வளவு எளிதாக எடுத்து கொள்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜோசப் பழனிவேல் விவகாரத்தில் திருச்சபையின் அணுகுமுறை இவ்வாறு தான் இருக்குமெனில், இந்திய பாதிரியார்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இது போன்ற குற்றச்சாட்டுகளை திருச்சபை எவ்வாறு அணுகும்? இந்த அறிவிப்பு ஒரு கேலி கூத்தானதாக தெரிகிறது. திருச்சபை குழந்தைகள் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.” என்றார்.

இதனிடையே, மின்னசோட்டாவில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஜெப் ஆண்டர்சன், இடைநீக்க ரத்து முடிவை விமர்சித்துள்ளார். “ வாடிகன் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். போப் தான் இதற்கு பொறுப்பு “ என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது “ பாதிக்கப்பட்ட பெண் மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.மீண்டும் அந்த நபரை திருச்சபை பணிகளுக்கு எடுப்பதால் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணருகிறார்கள்” என்றார். தொடர்ந்து அவர் “ மேகனின் வார்த்தையில் கூறுவதெனில், அவர்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்” என்றார்.

2005 இல் மின்னசோட்டா திருச்சபையின் பிஷப் விக்டர் பால்கே, உதகமண்டல டையோசியசிற்கு ஜோசப் பழனிவேல் ஜெயபாலை குறித்து பல கடிதங்கள் எழுதியுள்ளார். அந்த கடிதத்தினை அடிப்படையாக கொண்டு, ஜெயபால் மீது உதகமண்டல டையோசியஸ் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பிஷப் விக்டர் பால்கே, எழுதிய கடிதத்தில், ஜெயபால் மீது குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு மட்டுமல்லாது, நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளது.அந்த கடிதங்களின் நகல்கள் நியூஸ் மினிட்டிடமும் உள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் இருந்த போதும், ஜெயபால் உதகமண்டல டையோசியசின் கல்வித்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டார். திருச்சபை வளர்ச்சி நிதி செயலாளர் ஏஞ்சலோ அமேதோ வலியுறுத்திய பின்னரே திருச்சபை நடவடிக்கைகளிலிருந்து ஜெயபால் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com