தேமுதிகவின் தனித்து போட்டி அறிவிப்பால் யாருக்கு நன்மை ? யாருக்கு நஷ்டம் ?

விஜயகாந்தின் மனநிலை இன்னும் மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்
தேமுதிகவின் தனித்து போட்டி அறிவிப்பால் யாருக்கு நன்மை ? யாருக்கு நஷ்டம் ?
தேமுதிகவின் தனித்து போட்டி அறிவிப்பால் யாருக்கு நன்மை ? யாருக்கு நஷ்டம் ?
Written by :

தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் இத்தகைய முடிவு அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது, மாறுபட்ட கருத்துக்களை ஒவ்வொருவரும் கூறி கொண்டாலும், திமுகவுக்கு இந்த முடிவு பின்னடைவை ஏற்படுத்தும் என அனைவருமே கூறினர்.

நியூஸ் மினிட் சார்பில் நான்கு அரசியல் விமர்சகர்களிடம் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் இதோ:
 

ராமு மணிவண்ணன். ( சென்னை பல்கலைகழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் )

விஜயகாந்தின் இந்த அறிவிப்பு, இப்போதும் இரட்டை மனநிலையில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். தனித்து போட்டி என்ற அவரது முடிவு, அதிமுகவிற்கே சாதகமாக அமையும்.

ஆனால், பிஜெபி அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் பட்சத்தில், விஜயகாந்தின் மனது மாறி பிஜெபியுடன் கூட்டணி வைக்க கூடும். அதே வேளை, திமுக அடுத்த இரண்டு நாட்களில், இதற்கு எதிர்வினையாற்றுவதை பொறுத்து முடிவுகள் மாறலாம். தேமுதிகவை குறித்து திமுக, மோசமான விமர்சனம் ஏதேனும் வைக்கவில்லை என்றால், திமுகவை பற்றி தேமுதிக சிந்திக்க கூடும்.

கடைசியில், அவர் அதிமுகவிலிருந்து பணத்தை பெறுவதையும், தனது முன்னேற்றத்தை பாரதீய ஜனதாவுடனும் வைத்து கொள்ள கூடும். அடுத்த இரண்டு நாட்களில் திமுக என்ன சொல்கிறது, என்பது மிகவும் முக்கியமாக அமையும்.

கோபாலன், மூத்த பத்திரிக்கையாளர்

இது தான் விஜயகாந்தின் இறுதி நிலைப்பாடா என உறுதியாக நம்மால் சொல்ல முடியாது. கடைசியில், பிஜெபி அல்லது திமுகவுடன், இறுதியில் கூட்டணி வைத்தால் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அதே நேரம், இதற்கு முன்னர் செய்தது போன்று, தனித்து போட்டியிடவும் வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த முறை அவர் அவ்வாறு எடுக்கும் முடிவு, அதிமுகவிற்கே சாதகமாக அமையும்.

விஜயகாந்தை, தனித்து போட்டியிட பிஜெபியின் தூண்டுதல் கூட காரணமாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. 

பிஜெபியும்,அதிமுகவும் எப்போதுமே தங்களுக்குள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள். அவர்களுக்கிடையே நல்ல ஒரு புரிதல் உண்டு. ஜாவேட்கர், சென்னை வந்து விஜயகாந்தை, அதிமுகவிற்கு சாதகமாக அமைய தனித்து போட்டியிட சொல்லி வற்புறுத்தி இருக்க கூடும். திரைமறைவு வேலைகள் நிறைய நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விஜயகாந்த், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

திமுக, ஆரம்பத்திலிருந்தே வெளிப்படையான தொடர்புக்கு காய் நகர்த்தி வந்தது. ஆனால் விஜயகாந்த் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது என்னமோ, மற்றொரு வகை பேரம் பேசும் உத்தியாகவே தெரிந்தது. இப்போதும், விஜயகாந்தின் கூட்டணிக்கான கட்சிகளை தேர்வு செய்யும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. ஆனால், இதே முடிவில் தொடர்ந்தால், திமுகவிற்கே அதிக இழப்பு ஏற்பட கூடும்.

ஞானி சங்கரன் ( அரசியல் விமர்சகர் )

“நாம் வெளிப்படையான தேர்தல் கூட்டணியை பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் ரகசிய கூட்டணிக்கான வாய்ப்பு என்ன ?” ரகசிய கூட்டணிக்கான ஒரே வாய்ப்பு பிஜெபியுடன் மட்டுமே இருக்க முடியும்.

விஜயகாந்த், பிஜெபியுடன் வெளிப்படையாக கூட்டணி வைத்து கொள்வது, அதிக பலனை தராது என அக்கட்சி கணக்கிட்டிருக்க கூடும். அதே நேரம், அவர்கள் தேமுதிக, திமுகவுடன் சேர்ந்து, அக்கூட்டணி வலுவாக மாற விரும்பவில்லை. தனித்து போட்டியிடுவதன் மூலம், பிஜெபிக்கு பாதிப்போ அல்லது திமுகவுக்கு உதவியாகவோ மாறிவிடபோவதில்லை. திமுகவுடன் கூட்டணி வைத்து, திமுக அதிகாரத்தில் வந்தால், திமுக, தேமுதிகவை அழித்து விடக்கூடும் என்பது விஜயகாந்துக்கு தெரியும். இது அதிமுகவிற்கு ஆதரவான முடிவா, இல்லையா என்பதல்ல கேள்வி. வாக்காளர்களுக்கு பயனுள்ள முடிவா இல்லையா என்பது தான் முதல் கேள்வி. இப்போது கிட்டத்தட்ட எல்லோரும், தனித்து போடுவது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தனித்தனி பலம் என்ன என்பது விரைவில் இதன் மூலம் தெரிந்துவிடும். இது, தேர்தல் முறையை கொஞ்சம் மாற்ற கூடும்.
 

மணி மூத்த பத்திரிக்கையாளர்

ஆறு முனை போட்டி ஏற்பட கூடும் என தெரிகிறது, இது நிச்சயமாக அம்மாவுக்கே சாதகமாக அமைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எப்போதுமே 36% முதல் 40% வாக்குகளை பெற்றுள்ளது. அதேவேளை திமுக 25% முதல் 30% வாக்குகளையே பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது ஏற்படும் ஆறுமுனை போட்டியால், ஜெயலலிதாவிற்கே சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Elections 2023

No stories found.
The News Minute
www.thenewsminute.com