கலாஷேத்ரத்தை அளித்த ருக்மினி தேவி அருண்டேலின் நினைவுகள்

நான் கலாஷேத்ரத்தின் வடிவில் வாழ்வேன்
கலாஷேத்ரத்தை அளித்த ருக்மினி தேவி அருண்டேலின் நினைவுகள்
கலாஷேத்ரத்தை அளித்த ருக்மினி தேவி அருண்டேலின் நினைவுகள்

7 ஆண்டுகளுக்கு பின் இந்த கலாஷேத்ரத்தின் வழி நான் நடந்து செல்லுகையில், அத்தையுடன் நான் இணைந்திருப்பதாகவே உணர்கிறேன், இந்த கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு செயலாக்கங்களிலும், ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் அவர் இருக்கிறார். அதனால் தான் அவர் இந்த இடத்தில் நிரந்திரமாகவே இருப்பதாக உணர்கிறேன்.” என பேராசிரியர் ஜனார்த்தனன்,ருக்மினி  தேவியை குறித்த பெருமைகளை மீண்டும் அசைபோட்டார்.

பேராசிரியர் ஜனார்த்தனன், கலாஷேத்ரத்தின் புகழ்பெற்ற மாணவர்களில் ஒருவர். அருண்டேல் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வரான அவர் முக்கியமான நாடகங்களுக்கான நடனங்களை வடிவமைத்து வருகிறார்.

தற்போது கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் ஸ்கூல் செயல்பட்டு வரும் பகுதியிலிருந்த  வளாகத்தில் தான் அவரது இளமை வாழ்க்கை, கலாஷேத்திரத்தில் துவங்கியது. இவரது தந்தையான புகழ்பெற்ற கதகளி ஆசான் பணிக்கரிடம் இவர், கதகளி கற்று வருவதை கவனித்த ருக்மினி, ஜனார்த்தனனுக்கு தான் கதகளி கற்று கொடுக்கட்டுமா என கேட்டு, கற்று கொடுத்தார்.

“ அவரது காலத்திலிருந்த மாணவர்களை போன்றே, எனக்கும் வாழ்வதற்குரிய நேரமும் தந்து, என்னை முழுவதுமாக கவனித்து,போதிய அக்கறை செலுத்தியவர்.” என அவர் தனது நினைவுகளை தொடர்ந்து கூறினார்.

ருக்மினி தேவி அருண்டேலின் பிறந்த நாள் நிகழ்வு அன்று, காற்றோட்டமான அந்த வளாகம் சிறிது சலசலப்பாக இருந்தது. விழாவிற்கான கலைநிகழ்ச்சிகள் அணிவகுப்பு, கைவினைபொருட்களின் கண்காட்சி, மாணவர்களின் ஒத்திகை என களைகட்டியிருந்தது. ஆனால் அருண்டேலின்  இடம் அங்கு அலங்கரித்து கொண்டே இருந்தது.

கலாஷேத்ராவில் உள்ள மாணவர்களும், ஊழியர்களும் அவரை அத்தை என விருப்பத்தோடு அழைத்தாலும், ஜனார்த்தனன்,தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவை போல் கருதுகிறார். “அவர் ஒரு போதும் கோபம் கொண்ட ஆசிரியையாக இல்லாமல்,கருணை உள்ளம் கொண்டவராகவே இருந்தார். ஒவ்வொருவரையும், அவர்களுடைய பெயரை கூட தெரிந்து வைத்திருந்தார் என உங்களுக்கு தெரியுமா ? நிறுவனராகவோ அல்லது தலைவராகவோ அல்லது பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் என்ற நிலையையோ தாண்டி நாங்களும் அவரிடம் நெருக்கமாகவே இருந்தோம்”

நடன கலைஞர்கள், அத்தையிடமிருந்து பாராட்டு பெற ஏங்கி நின்றனர்.” அவர் நன்றாக உள்ளது என கூறினால் அது எங்களுக்கு திருப்தியாக இருக்கும். அவரது விமர்சனம் அச்சத்தை உண்டாக்கினாலும், அவர் எப்போதுமே அதை சரி செய்ய சொல்லிதருபவர்.”

ஜனார்த்தனன் தொடர்ந்து கூறுகையில், அவரை பொறுத்தவரை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் அனுபவமும், அர்த்தமும் உள்ளதாகவும், பாராட்டபடத்தக்கதாகவும் இருக்க வேண்டும். விலங்குகளுக்கு கூட இதை மறுக்க கூடாது என்ற நிலைப்பாட்டை உடையவர்.” அவர் எப்போதுமே இளம் மாணவர்களிடம், விலங்குகளை இரக்கத்துடன் பார்க்காதீர்கள். மாறாக அவற்றை நல்ல முறையில், தகுதியுடையதாய் அணுகுங்கள்” என்பார்.

“ஏதேனும் ஒன்று ஒழுங்கற்று இருந்தால், அதனை அவர் கண்டுபிடித்துவிடுவார். அதுபோன்றே தவறாக ஏதேனும் இருந்தால் கூட என்னிடம் பணமில்லை அல்லது அதற்கான செலவை ஈடுகட்டும் நிலையில் இல்லை என சொல்லிவிடுவார். நான் சொல்லாமலேயே அந்த தவறுகளை தெரிந்து கொண்டு, அதை சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு கூறுவார்.”

நல்ல உணவையே அவர் விரும்பினார். இதுகுறித்து ஜனார்த்தனன் தனது நினைவுகளை அசைபோட்ட போது “ அவர் மதிய உணவிற்கு முன் சமையலறைக்கு செல்வது வழக்கம். அங்கு சமையல்காரர், சமையல் பற்றி ஏதேனும் கூறுகிறாரா என எதிர்பார்ப்பார்.மசாலா சம்பந்தமான அல்லது  உப்பு குறைவாக இருத்தல் போன்றவை அவரது மாணவர்களுக்கு எதிரான ஆற்றலை கொடுப்பவை என உணர்ந்தார்.”

கலாஷேத்ரா துவங்கப்பட்டு ஓராண்டு கழிந்து துவங்கப்பட்டது கைவினை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். 1937 இல் நடன கலைஞரான ருக்மினி தேவி இந்தியாவின் பாரம்பரியமான சேலை வடிவங்களையும், கைத்தறியையும் பாதுகாக்கும் நோக்கில் துவங்கினார்.

ருக்மினி தேவி அருண்டேலுடன்  இணைந்து கைவினை கல்வி மற்றும் ஆய்வு மையம் செயல்பட உதவிய சாந்தா குகன், 70 களில் அவருடன் இருந்து அவரது வடிவமைப்புகளை தினந்தோறும் கவனித்து வந்தவர். “ஒருமுறை நான் சேலை நெய்யும் மையத்திற்கு சென்றேன். அப்போது அவர் அங்கு வருகை தந்து ஆர்டர் புத்தகங்களை பார்த்து கொண்டிருந்தார். ஒரு சேலை வெளிர் நீலத்திலும்,பிங்க் நிறத்திலும் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதை கவனித்தார். உடனே அவர் ஒரு பேனாவை கேட்டு வாங்கி அதனை அந்த பக்கத்திலிருந்து அடித்து விட்டார். அழகியல் விவகாரங்களில் அவர் சமரசம் செய்து கொள்ளுவதில்லை” என்றார்.

“ கலரை பொறுத்தவரை அவருக்கு ஒரு பார்வை இருந்தது. உண்மையில் அவருக்கு ஒவ்வொன்றை பற்றியும் தெளிவான பார்வை இருந்தது என்றே கூற வேண்டும்.” என கூறும் குகன், மேடை அலங்காரத்தை பொறுத்தவரை ஒரு சிறிய ஸ்டூலை கொண்டே அவர் ஒரு சிம்மாசனத்தை மிகவும் நேர்த்தியாகவும், எளிமையாகவும் செய்பவர்.” அங்கிகம், வச்சிகம்,அஹர்யம் , அபிநயம் என தினசரி வாழ்க்கையில் எப்படி பேசுதல், நடந்து கொள்ளுதல் ஆகியன செய்கிறோமோ அதனையே மேடையிலும் செய்பவர்” என கூறுகிறார் குகன்.

“ அவரை பொறுத்தவரை தனிப்பட்ட வாழ்க்கையில் தினந்தோறும் கற்று கொள்வதை மெருகேற்றி அவற்றை மேடைகளில் அரங்கேற்றுவதை வழக்கமாக கொண்டவர். உங்களை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களை மாற்றி கொள்ளுங்கள் என்ற நிலைப்பாட்டை உடையவர். அவர் ஒவ்வொருவரும் கலாஷேத்ராவின் தூதர்களாக மாற வேண்டும் எனவும்,நல்ல குடிமக்களாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.” என ஜனார்த்தனன் கூறினார்.

அருண்டேலின் நினைவுகள், ஜனார்த்தனனுக்கு கனவுகளை போன்றதாகிவிட்டது. அவர் இறந்து போவதற்கு முன் என்னிடம் கூறியதை என்னால் மறுக்கவியலாது. “ நான் உன்னை திடீரென விட்டு செல்ல போவதில்லை. நான் கலாஷேத்ரா வடிவில் வாழ்வேன் “ என புன்னகையுடன் கூறுகிறார் ஜனார்த்தனன்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com