நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை எதிர்த்து ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும், ஒத்திவைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என விளக்கம்

Vernacular Wednesday, April 06, 2016 - 21:18

கடந்த மாதம் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஏப்ரல் 23 அன்று கொழும்புவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளபோவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த அறிவிப்பை எதிர்த்து சில சிங்கள எதிர்ப்பு குழுவினர் ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டை சுற்றிலும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஓட்டியதுடன், போராட்டங்களையும் நடத்தினர். இதனால் அவர் காலவரையின்றி அந்த நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் 3 இசை நிகழ்ச்சிகளையும், முதல் முறையாக மதுரை மற்றும் கோயம்பத்தூரில் தலா ஒரு இசை நிகழ்ச்சியும் ரஹ்மான் நடத்தியிருந்தார்.

கொழும்புவில், ஏஆர் ரஹ்மானுடன், இந்தியாவின் தலைசிறந்த ஆண் மற்றும் பெண் இசை கலைஞர்கள் 19 பேர் மேடையேறுவதற்கு பிரமாண்ட முறையில் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ் மக்களை கொன்ற இலங்கை அரசுடன் கைகோர்ப்பது நியாயமா ? என்பதை போன்ற வாசகங்களை கொண்ட போஸ்டர்கள் ரஹ்மானின் சென்னை வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து, நியூஸ் மினிட் சார்பில், நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும்  எச்ஏஎல்எஸ் ஸ்டுடியோவினரிடம் கேட்ட போது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுகள் விடுமுறை வருவதால், சில நிர்வாக பணிகளையும் முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு சிரமம் ஏற்படும். அதனாலேயே நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி இதற்காக கூறப்படும் காரணங்கள் எல்லாம் வெறும் புரளியே என்று கூறினர்.

இதற்கிடையே தனது அடுத்த நிகழ்ச்சி மலேசியாவில் மேய் 4, 2016 அன்று நடைபெறும் என ஏஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.