எதிர்ப்புகளில் சிக்கி தவிக்கும் இந்திய நியுட்ரினோ ஆய்வு கூடம்

2019 க்குள் தனது நியுட்ரினோ குறித்த தனது ஆராய்ச்சியை சியான்மென்னில் உள்ள ஆய்வுகூடத்தில் முடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் சீனா உள்ளது.
எதிர்ப்புகளில் சிக்கி தவிக்கும் இந்திய நியுட்ரினோ ஆய்வு கூடம்
எதிர்ப்புகளில் சிக்கி தவிக்கும் இந்திய நியுட்ரினோ ஆய்வு கூடம்
Written by:

நியுட்ரினோ ஆராய்ச்சியில் இந்தியா சீனாவை விட பின்தங்கியுள்ளது என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்ற குரல் சுற்றுசூழல் ஆர்வலர்களிடமிருந்து ஒலித்து வருகிறது. இதனால், இப்போது திரிசங்கு நிலைக்கு இந்திய நியுட்ரினோ ஆய்வு கூடம் தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கிடைக்க வேண்டிய தடை இல்லா சான்றிதழ் இந்த அமைப்பிற்கு இதுவரை கிடைக்காததே காரணம்.

தேனீ மாவட்டத்தின் போடியில் உள்ள மேற்கு மலை தொடர்ச்சியின் ஒரு பகுதியை தான் இந்திய நியுட்ரினோ ஆய்வுகூடம், தனது ஆய்வுக்காக  தேர்வு செய்தது.

இதுகுறித்து இந்திய நியுட்ரினோ ஆய்வு கூடத்தின் இந்துமதி கூறுகையில், “ நாங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற இதுவரை காத்து கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு அரசில் எதுவுமே நகரவில்லை. அவர்கள் உதவியில்லாமல் எங்களால் இந்த திட்டத்தை துவங்கிவிட முடியாது” என்றார்.

இந்திய நியுட்ரினோ ஆய்வுகூடத்திற்கு, மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் பெறுவதும் கூட அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை குறித்த திட்ட அறிக்கை அணு சக்தி துறைக்கு சமர்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2009 இல் சுற்றுப்புறசூழல் அமைச்சகம் இந்த திட்டம், முதுமலை புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் வருவதாக கூறி அனுமதியளிக்க மறுத்துவிட்டது.கடைசியாக ஆகஸ்ட் 2010 இல் இந்த திட்டம், தேனீ மாவட்டத்தின் போடி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் துவங்கியிட, சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.

அதனை தொடர்ந்து, இந்த திட்டத்திற்கான நிலம் பிப்ரவரி 2012 இல் ஒதுக்கப்பட்டது.ஆனால், கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் மற்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ போன்றவர்கள், இத்திட்டத்தினால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு மற்றும் கதிர்வீச்சு அபாயங்கள் இருப்பதாக கூறி எதிர்த்தனர்.

ஜனவரி 2015 இல் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நியுட்ரினோ ஆய்வுகூடத்தை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்ததுடன், 1500 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இந்த திட்டம் தரையின் அடியில் செயல்படும் ஆய்வு கூடத்துடன், நியுட்ரினோவின் பண்புகளை கண்டறிய வசதியாக இரும்பு கலோரிமானியும் கூட இணைக்கப்படும் என கூறப்பட்டது.

எப்படியிருப்பினும், அதிகம் அறியப்படாத இந்த துணை அணு மூலக்கூறு குறித்த ஆய்வுக்காக முன்மொழியப்பட்ட இந்த திட்டம், சுற்றுசூழல் பாதிப்புகளை காரணம் காட்டி கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

நேச்சர் என்ற அறிவியல் வார பத்திரிக்கையின் படி, நியுட்ரினோ அதிக அளவில் நிறைந்துள்ள, அதே நேரம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு துணை அணு மூலக்கூறு.பில்லியன் கணக்கிலான நியுட்ரினோக்கள் ஒவ்வொரு வினாடியும் பூமியின் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பில் கடந்து செல்கின்றன.ஆனால் அவை மிகவும் அரிதாகவே தங்கள் தடத்தினை விட்டு செல்கின்றன. காஸ்மிக் கதிர்கள் வளிமண்டலத்தை தாக்கும் போது நியுட்ரினோ உருவாகுவதை பற்றியும்,  நியுட்ரினோவின் அறியப்பட்ட மூன்றுவகையான நியுட்ரினோக்களின் நிறைகளை வெளிப்படுத்தும் முயற்சியிலும் இந்திய நியுட்ரினோ ஆய்வு கூடம்  ஈடுபடும்.” என கூறுகிறது.

பிரண்ட்லைன் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், நியுட்ரினோக்கள் புரோட்டன் மற்றும் எலக்ட்ரான்களை போன்றே அணுக்களின் துணை அணு மூலக்கூறுகள் என்றும், அவை கதிரியக்க சிதைவுகளினால் உருவாகுபவை என்றும், தங்களுக்குள்ளே அவை கதிரியக்கத்தில்  ஈடுபடுவதில்லை என்றும் கூறுகிறது.

2015 இல் பூவுலகின் நண்பர்கள் எனப்படும், சுற்றுசூழல் பாதுகாப்புக்கான தன்னார்வ நிறுவனம்,இந்திய நியுட்ரினோ ஆய்வு கூடத்தை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

சுற்றுப்புற சூழலில் ஏற்படும் தாக்கத்தை குறித்து ஆய்வு செய்யப்பட்ட மதிப்பீடுகள், முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. நியுட்ரினோக்கள் குறைந்த ஆற்றல் உடையவை. அவை குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட பாதை வழி பயணிக்க இயலாதவை. 90 சதவீத நியுட்ரினோக்களும் குறைந்த ஆற்றல் மற்றும் குறைந்த வீரியத்தை கொண்டவை. மீதமுள்ள 10 சதவீத நியுட்ரினோக்கள் அதிக ஆற்றல் கொண்டவை என வாதிடுகின்றனர்.

அத்துடன், இந்த திட்டம் 5 லட்சம் கிலோ வெடிபொருட்களை, 8 லட்சம் டன் கடின பாறைகளை உடைக்க பயன்படுத்த போவதாகவும், 3000 அலகு மின்சாரத்தையும், முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீரையும் பயன்படுத்தபோவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்தியாவை விட சீனா இந்த ஆய்வில் முன்னேறி சென்றாலும், இந்த திட்டம், உறுதிபடுத்தபடாத பலவற்றை டிடெக்டர்களை கொண்டு கண்டுபிடிக்க உதவும் என நியுட்ரினோ இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, 2019 க்குள் தனது நியுட்ரினோ குறித்த தனது ஆராய்ச்சியை சியான்மென்னில் உள்ள ஆய்வுகூடத்தில் முடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com