வேக்கிங் டெயில்ஸ் கேப், வாரத்தின் 7 நாட்களில் 24 மணி நேரமும், மற்ற வாடகை கார்களின் விலையில், நாய்களுக்கான போக்குவரத்திற்கு உதவுகிறது

 Image for representation/ pixabay.com
news Thursday, March 17, 2016 - 13:34

உங்கள் வளர்ப்பு பிராணியான நாய்களை, ஏதேனும் கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல சிரமப்படுகிறீர்களா? பொதுவாக வாயில் எச்சில் வடிந்து, முடிகள் உதிரும், பாதங்கள் அழுக்கான நாய்களை எந்த ஒரு வாடகை வண்டிக்காரர்களும், தங்கள் வண்டியில் ஏற்றி செல்ல விரும்பமாட்டார்கள்.

ஆனால், கமல் பங்கர் , ஜெயஸ்ரீ ரமேஸ் ஆகிய இரு பெண்கள், உங்கள் நாய்களை வெளியே கொண்டு செல்ல உதவ தயாராக இருக்கிறார்கள். கடந்த ஞாயிறு அன்று துவங்கப்பட்ட வேக்கிங் டெயில்ஸ் கேப் என்ற இவர்களது நிறுவனம், வாரத்தின் ஏழு நாட்களிலும், 24 மணிநேரமும் உங்கள் வீட்டு நாய்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர முன்வந்துள்ளது. இதுகுறித்து ஜெயஸ்ரீயிடம் கேட்ட போது, “ இந்த திட்டம் நீண்ட நாட்களாகவே எங்களிடம் இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு எங்கள் குழுவில் உள்ள ஒருவரது நாய், உடல்நலமில்லாமல் ஆன போது, கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல, வாகனம் இல்லாமல் கஷ்டப்பட்டார். அதனால் தான் தற்போது வேகமாக இதனை தொடங்கியுள்ளோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ 24 மணி நேரமும் செயல்படும் வகையில் எந்த தனியார் கால்நடை மருத்தமனையும் இருப்பதில்லை. ஒரே வழி தொலைவிலிருக்கும், அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியது தான். ஒரு நாயின் உரிமையாளர் உதவி தேவைப்பட்டு என்னையோ அல்லது கமலையோ அழைத்தால், எங்களில் ஒருவர், எங்கள் காரை எடுத்து சென்று உதவி செய்வோம் “என்றார்.

மக்களிடையே, இந்த புதிய முறைக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கேட்ட போது, “ஞாயிறு அன்று தான் நாங்கள் இதை தொடங்கினோம். எங்களுக்கு வாழ்த்து கூறிய பல அழைப்புகள் வருவதுடன், இது எப்படி செயல்படுகிறது என்றும் கேட்கிறார்கள்.வியாழக்கிழமை வரை 5 முன்பதிவுகள் வந்துள்ளன.” என்றார்.

காருக்கான வாடகையும் குறைவாகவே உள்ளது. மற்ற வண்டிகளை போலவே ஒரு ஏசி வசதி கொண்ட ஓட்டத்திற்கு கிலோமீட்டருக்கு 12 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

கமலும், ஜெயஸ்ரீயும், ஹார்டி பாவ்ஸ் என்ற நாய்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகின்றனர். வளர்ப்பு பிராணிகளின்  உரிமையாளர்கள் 9003055606 , 9841022214   என்ற எண்களில் இவர்களை தொடர்பு கொள்ள முடியும்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.