பணத்துடன், முதலமைச்சர் பதவிக்கான வாக்குறுதியையும் பி.ஜெ.பி தந்ததாகவும் ஆனால் தான் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து கொண்டதாகவும் விஜயகாந்த் நியூஸ் மினிட்டிடம் கூறினார்

 -
Tamil TN 2016 Friday, May 13, 2016 - 15:20

“பி.ஜெ.பி, அதிமுக மற்றும் திமுக கட்சிகள் எனக்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் நான் மக்கள் நல கூட்டணியை தேர்வு செய்தேன்” என விஜயகாந்த் கூறியுள்ளார்.

 

நியூஸ் மினிட்டுடனான சிறப்பு நேர்காணல் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தனது கட்சியின் கொள்கை குறித்தும், திமுக மற்றும் அதிமுகவின் ஏகபோக போக்கை குறித்தும் பேசினார்.

தனது கொள்கையை பற்றி அவர் குறிப்பிடுகையில், “எல்லாருக்கும் வேலை வாய்ப்பு, ஊழலை முற்றிலும் ஒழித்தல், உணவு, தண்ணீர் , தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொடுத்து, வறுமையை முழுவதுமாக ஒழித்தல். இது தான் எங்கள் கொள்கை” . ஆனால், தங்குமிடம் வசதி செய்து தரும்போது, இலஞ்ச ஊழலுக்கான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விருத்தாச்சலத்திலிருந்து, ரிஷிவந்தியம், அதன்பின்னர் உளுந்தூர்பேட்டை என தொகுதி மாறி போட்டியிடுவது குறித்து கேட்டபோது, “ எந்த தொகுதிகளில் எல்லாம் அதிக அளவில் கிராமங்கள் உள்ளனவோ, அந்த தொகுதிகளில் போட்டியிட முயற்சி செய்கிறேன். நான் வெற்றி பெறமாட்டேனா ? கடந்த முறை நான் வெற்றி பெற்றேன். நான் சிறிதளவு கூட மக்களை ஏமாற்றவில்லை. “

 

மக்கள் நல கூட்டணியுடனான கூட்டணி ஊழல் இல்லா அரசை உருவாக்குவதற்கான பாதையை உருவாக்கியுள்ளது என விஜயகாந்த் கூறினார். கூட்டணிக்காக பண வாக்குறுதிகள் அவருக்கு அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறித்து அவரிடம் கேட்ட போது, “ பி.ஜெ.பி, அதிமுக மற்றும் திமுக கட்சிகள் பணம் தருவதாக வாக்குறுதியளித்தன. பி.ஜெ.பி, பணத்துடன், முதலமைச்சர் பதவிக்கான வாக்குறுதியையும் தந்தது. ஆனால் நான் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து கொண்டேன். “ என்றார்.

 

கருத்துக்கணிப்புகள் வெளியாவது குறித்து கேட்டபோது, தங்கள் பலத்தை காட்டி, ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ வெற்றி பெறுவார்கள் என சொல்லிகொள்கிறார்கள். ஆனால் தீர்ப்பை மேய் 19 இல் அறிய விட்டுவிடுவது தான் நல்லது என்றார். திமுக, அதிமுக பற்றி அவர் குறிப்பிடுகையில் “ நீங்கள் இந்த இரு கட்சிகளுக்கும் வாக்களிப்பது, மணல் குதிரையில் ஏறி ஆற்றில் குதிப்பதற்கு சமமானது” என கூறினார்.

 

தனது உடல்நிலை குறித்து எழும் பேச்சுக்கள் பற்றியும், தன்னை பற்றி எழும் மீம்ஸ்களை குறித்தும் தள்ளி பேசிய விஜயகாந்த், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் ஆரோக்கியத்தை குறித்து முதலில் அவர்கள் கேட்க வேண்டும் என்றார்.

 

நியூஸ் மினிட்டுடனான தனது பேட்டியை முடிக்கும் நிலையில், விஜயகாந்த் ஜெயலலிதா அரசை ஒரு “ மோசமான அரசு” என குறிப்பிட்டு பேசினார். எளிதில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் தான் இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன என கூறினார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.