என்னால் வெற்றி பெற முடியும் என எனக்கு தெரியும். கலைஞர் கருணாநிதியும், ஸ்டாலினும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

Tamil Friday, April 15, 2016 - 18:53

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளராக சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.

 நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட, சிம்லா முத்துசோழன், 25 ஆண்டுகாலமாக திமுகவின் நிழலில் வாழ்ந்து வருபவர். சட்டம் மற்றும் மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்ற இவர் வட சென்னை வழக்கறிஞர் அணி தலைவராகவும், மகளிர் அணி கொள்கை பரப்பு செயலாளராகவும் இருப்பவர். ஏற்கனவே திமுக ஆட்சியில், மாநில அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சற்குண பாண்டியனின் மருமகள் தான் இவர்.

 தீவிர அரசியலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தான் களமிறங்க துவங்கினார் சிம்லா.” டிரைவர் இல்லாத நேரங்களில், நான் எனது மாமியார் சற்குண பாண்டியனுக்கு டிரைவராக இருந்து கட்சி கூட்டங்களுக்கு அவரை அழைத்து செல்வது வழக்கம். அப்போது அங்கு நடக்கும் விவாதங்களும், அந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுடன் உள்ள தொடர்பும், என்னை அரசியலில் முழுவதுமாக இறங்க செய்தது. “ என தனது அரசியல் பிரவேசத்தை குறித்து புன்முறுவலுடன் கூறுகிறார் சிம்லா முத்துசோழன்.

 “எனக்கு இந்த தொகுதி நன்கு அறிமுகம் என்பதால் தான் நான் களமிறக்கப்பட்டுள்ளேன். கூடவே, நான் ஒரு பெண் “. என கூறும் அவர். “ என்னால் வெற்றி பெற முடியும் என எனக்கு தெரியும். கலைஞர் கருணாநிதியும், ஸ்டாலினும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். “ என கூறினார்.

 தனது மாமியாரால் திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பல வளர்ச்சி பணிகளும் தூசு படிந்த நிலையில் முடங்கிபோயுள்ளதாக கூறுகிறார் சிம்லா. “ திமுக அரசால் துவக்கப்பட்ட பல வளர்ச்சி பணிகளும் தற்போது நிறைவேற்றப்படாமல் உள்ளன.கொருக்குப்பேட்டை மேம்பாலம், எண்ணூர் மணலி ரோடு ஆகிய பணிகள் இப்போதும் எந்த அசைவும் இன்றி கிடப்பிலேயே உள்ளன. கழிவு நீர் பிரச்சினை இப்போதும் தீர்க்கபடாமலேயே உள்ளது. எனது மாமியார் என்ன வளர்ச்சிக்கான மாற்றங்கள் எல்லாம் கொண்டு வர விரும்பினாரோ, அதனை நான் நிறைவேற்றுவேன். “ என கூறினார்.

 சென்னை வெள்ளப்பெருக்கு காலக்கட்டத்தில், இவரது செயல்பாடு குறிப்பிடும் வகையில் இருந்ததாக திமுகவினர் கூறுகின்றனர். “ வெள்ளபெருக்கு ஏற்பட்ட காலத்தில் ஜெயலலிதா எதுவுமே செய்யவில்லை.தரமற்ற ரோடுகளால், ரோடுகள் சிதிலமடைந்து, வெள்ள நீர் எதிர்பார்த்ததைவிட வேகமாக வந்து வீடுகளில் புகுந்தது “ என்ற சிம்லா, தொடர்ந்து கூறுகையில் “ நாங்கள் அதன்பிறகு மக்களை தினசரி சந்தித்து, அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா ? என்பதை விசாரித்து வந்தோம். அவர்கள் மறுவாழ்வுக்கு தேவையான, எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்து கொடுத்தோம். அதிமுகவிலிருந்து ஒரு நபர் கூட, அந்த பகுதிக்கு வருகை தரவோ, அவர்கள் பிரச்சினையை கேட்கவோ செய்யவில்லை. “ என்றார்.

 தொடர்ந்து பேசிய அவர், மக்களிடம் அவருக்கு உள்ள நெருக்கத்தை விளக்கி கூறினார். “ அம்மாவிடம் எது இல்லையோ, அது என்னிடம் இருக்கிறது. மக்கள் எந்த நேரத்திலும், என்னுடைய வீட்டிற்கு வந்து, என்னை சந்தித்து அவர்கள் குறையை சொல்ல முடிகிறது. ஆனால் ஜெயலலிதாவை அவ்வாறு பார்க்க முடியுமா ? “ என தன்னம்பிக்கை நிறைந்த தொனியில் கூறினார் சிம்லா. 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.