Lok Sabha 2019

Lok Sabha 2019

Lok Sabha 2019

Lok Sabha 2019

Lok Sabha 2019

Lok Sabha 2019

பாலின சிறுபான்மையினரை குறித்த ஒரு தெளிவான பார்வை மக்களுக்கு வேண்டும் என கூறுகிறார் கோபி சங்கர்.

25 வயதான  இன்டர்செக்ஸ் மனிதரான கோபிசங்கர் கடந்த 2011 முதல் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். 2016 சட்டமன்ற தேர்தல் ஊழலுக்கு எதிராகவும், சிறந்த நிர்வாகத்தை உருவாக்குவதற்குமான போராட்டம் மட்டுமில்லாமல், பாலின சிறுபான்மையினரை குறித்த ஒரு தெளிவான பார்வையை மக்களுக்கு கொடுக்க கூடிய தேர்தலாக அமைந்துள்ளது என நடைபெறும் சட்டமன்ற தேர்தலை பற்றி குறிப்பிடுகிறார்.

ஒரு சமூக செயற்பாட்டாளராக, தன்னால், இந்த சமூகத்திற்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என உறுதியாக கூறுகிறார் கோபி சங்கர்.அனைத்து மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் இவர், “ மக்கள் சேவையை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்துகிறார்கள். சமூக செயற்பாட்டாளர்கள் அரசியலில் நுழைந்து இன்னும் சிறப்பாக சமூக சேவையை செய்துவிட முடியும்.” என்றார் அவர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கோபிசங்கர் பாலின சிறுபான்மையினருக்காக போராடி வருகிறார்.

அரசியல் என்பது வணிகமயமாக்கப்பட்டுவிட்டதாக கோபி சங்கர் கருதுகிறார். “ அரசியல் தற்போது வணிகமாக்கப்பட்டுவிட்டது. சாதாரண மக்கள், அதனை அரசியலை பற்றி கனவிலும் நினைத்து பார்க்கவியலாத நிலை உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகளை அல்ல. மக்கள் மத்தியில் மாற்றம் உருவாக வேண்டிய தேவையில் இப்போது நாம் இருக்கிறோம்.” என்றார்.

கோபிசங்கரின் கட்சியான அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், எந்த முக்கிய அரசியல் கட்சியுடனும் இணையவில்லை. அக்கட்சி சார்பில் போட்டியிடுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். தங்கள் பிரச்சாரத்திற்கு தேவையான பணத்தை பகுதி நேர வேலைகள் செய்து திரட்டுவதாகவும், பிரச்சாரத்தை ஒரு குழுவாக இணைந்து நடத்தி கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.

கோபி கடந்த 2011 இல் ஸ்ருஷ்டி மதுரை என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். “ நாங்கள் அந்த அமைப்பை உருவாக்கி பாலின சிறுபான்மையினருக்காக செயல்பட்டு வருகிறோம்.பள்ளி மாணவர்கள், மருத்துவ சகோதரர்கள் போன்றவர்களுக்கு அதற்கான விழிப்புணர்வை இதன் மூலம் ஏற்படுத்துகிறோம்” என கூறினார் அவர், இது ஒரு கடினமான வேலை என்றும் கூறினார்.

“ பல பள்ளிகள், நாங்கள் இதுபோன்ற வகுப்புகளை உருவாக்குவதற்கு தடைவிதித்துள்ளன. 20 பேர் எங்களை ஆதரித்தால், 60 பேர் எங்களை இது போன்ற நிகழ்ச்சிக்காக எதிர்க்கின்றனர். பல இஸ்லாமிய அமைப்பினர் எங்கள் கல்லூரிக்கு வெளியே, எனது படத்தை சுவரொட்டியாக ஒட்டி, இவர்களை போன்றவர்களை தூக்கில் போடவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.” என்றார் கோபி சங்கர்.

ஆனால், இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சில சாதனைகளை செய்துள்ளதாக கூறுகிறார் கோபி.” இந்தியாவில் பாலின சிறுபான்மையினரை திரட்டி ஆசியாவிலேயே முதல் முறையாக பேரணி ஒன்றை நடத்தினோம். மேலும் பாலின அடையாளங்களுக்கான பெயர்களை தமிழில் பிரபலப்படுத்தினோம்.” என்றார் அவர்.

குழந்தை பருவத்தில், கோபி தொடர்ச்சியாக பாலியல் நெருக்கடிகளுக்கு ஆளானவர்.

எனது குழந்தைபருவத்தில் நான் ஒருபோதும், கவுன் அணிந்ததில்லை. பெண்களிடம் நான் நெருங்கி பழகியதும் இல்லை. ஆனால், இந்த பாலியல் தொந்தரவுகளுக்கு அப்பால், நான் எப்போதுமே ஒரு இன்டர்செக்ஸ் நபராகவே என்னை உணர்ந்தேன். ஒரு மனிதனாக, நான் இவ்வுலகில் உள்ள அனைத்து வடிவ உயிர்களையும் மரியாதை செலுத்துகிறேன்.” என்றார்.

அவரது பாட்டி, அவருக்கு நல்ல ஆதரவளித்து வருவதுடன், நன்கு கவனித்தும் வருகிறார். “ எனது பெற்றோருக்கு நான் வழக்கத்துக்கு மாறான, பிரச்சினைக்குரிய குழந்தையாகவே இருந்தேன். அதே நேரம் எனது பாட்டி, எனது மற்ற பேரன்களை போலவே நீயும் எனக்கு அழகான பேரன் தான் என கூறுவார்.” என கூறினார்.

அவரது 14 வது வயதில் அவர் ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து, இந்திய பாரம்பரியத்தையும், தத்துவத்தையும் கற்று கொண்டார். தொடர்ந்து மதுரையில் உள்ள கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற போது, அவரை கல்லூரி நிர்வாகம்  படிப்பின் இடையில் ஏற்க மறுத்ததால், படிப்பை இடை நிற்க வேண்டியது ஆயிற்று.

தேர்தலில் வென்றால் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என அவரிடம் கேட்ட போது” நான் இந்த தேர்தலை பாலின சிறுபான்மையினருக்கான பிரச்சனைகளை குறித்த விழிப்புணர்வை கொண்டு செல்ல விரும்புகிறேன். வெற்றியும், தோல்வியும் ஒரு பிரச்சினையே இல்லை.” என்றார் அவர்.

மேலும் அவர்.” நாம் திருநங்கையர் யார் என்பதை கூட புரியாமல் இருக்கிறோம். முதலில் அனைவரையும் மனிதர்களாக பார்க்கும் பக்குவம் நம்மிடையே உருவாக வேண்டும்.” என கூறினார்.