வாக்காளர்களை ஊக்குவிக்க பஞ்ச் டயலாக்குகளுடன் போஸ்டர் : தேர்தல் கமிஷனின் புதிய உத்தி

வாக்காளர்களை ஊக்குவிக்க பஞ்ச் டயலாக்குகளுடன் போஸ்டர் : தேர்தல் கமிஷனின் புதிய உத்தி
வாக்காளர்களை ஊக்குவிக்க பஞ்ச் டயலாக்குகளுடன் போஸ்டர் : தேர்தல் கமிஷனின் புதிய உத்தி
Written by:

“ உங்கள் வயதிற்கேற்ப செயல்படுங்கள் ” . தமிழக தேர்தலையொட்டி வாக்காளர்களை தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள், வீடியோ கேம்ஸ், சக்திமான், பக்ஸ் பன்னி, கார்டூன் நெட்வொர்க் இவற்றின் படங்களை போட்டு “ இவற்றை எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா ? எனில் நீங்கள் வாக்களிக்க போதுமான வயதிற்கு வந்துவிட்டீர்கள்” என கூறுகிறது.

இதுபோன்றே தமிழிலும் சில வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன “ நடுவுல கொஞ்சம் பேர காணோம்”, “கண்ணா நீ எங்க எப்போ எப்படி ஓட்டு போடுறன்னு யாருக்கும் தெரியாது.ஆனா ஓட்டு பண்ற நேரத்தில வோட்டேர்ஸ் லிஸ்ட்ல பேரு கரக்டா இருக்கணும்” போன்ற சினிமா ஸ்டைலிலான பஞ்ச் டயலாகுகளும் இடம்பெற்றுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com