சாதிக்பாட்சா கொலை குறித்த தகவலை மதிமுக தலைவர் வைகோவிடம் தான் கூறியதாகவும், தேர்தல் முடிந்த பின் இந்த பிரச்சினையை வெளி கொண்டு வருவதாக அவர் கூறியதாகவும் பிரபாகரன் கூறியுள்ளார்.

Tamil Wednesday, May 18, 2016 - 13:43

மேலும் அவர், முன்னாள் உளவுத்துறை போலீஸ் அதிகாரி ஜாபர்சேட் மற்றும் ராசாவின் நெருங்கிய உறவினர் பரமேஸ்குமார் ஆகியோரும் அந்த கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த வாலிபர் பிரபாகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ மார்ச் 16, 2011 அன்று இரவில், நாங்கள் தி.நகரில் உள்ள க்ரீன்ஹவுஸ் புரொமோட்டர்ஸ் நிறுவன அலுவலகத்தில் வைத்து கொன்றோம். நான், சாதிக் பாட்சாவின் காலை பிடித்திருக்க, பரமேஸ்குமார் தனது முழங்கால் மூட்டினை கொண்டு சாதிக்கின் கழுத்தை அழுத்தினர். கூடவே, ஜாபர்சேட், ஒரு டவ்வலை கொண்டு, சாதிக் பாஷாவின் கழுத்தை இறுக்கி நெரித்தார். அதன் பின்னர், பரமேஸ்குமார் சாதிக் பாட்சாவின் உடலை தனது உதவியாளர்கள் உதவியுடன், அவரது வீட்டில் கொண்டு போய், தற்கொலை என காட்டுவதற்காக, கட்டி தொங்கவிட்டார்.” என கூறினார்.

மேலும் அவர், சாதிக் பாட்சா கொல்லப்பட்டதாகவும், 2ஜி வழக்கில், ஆ.ராசாவுக்கு எதிரான முக்கிய தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், இந்த கொலையில் ராசா சம்பந்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தனக்கு பெருமளவில் பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதால், தான் இந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக பிரபாகரன் கூறுகிறார்.” ஒரு ஏழையின் மகனாக இருந்ததால், வேகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். எனக்கு 19 வயதாக இருந்த போது, எனது மாமா சுப இளவரசன் உதவியுடன் பரமேஸ் குமாரிடம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்களுடனான எனது நட்பு, எனது வாழ்க்கையில் பயன்படும் என நினைத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டனர்.” என அவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.

சாதிக்பாட்சா கொலை குறித்த தகவலை மதிமுக தலைவர் வைகோவிடம் தான் கூறியதாகவும், தேர்தல் முடிந்த பின் இந்த பிரச்சினையை வெளி கொண்டு வருவதாக அவர் கூறியதாகவும் பிரபாகரன் கூறியுள்ளார்.

பரமேஸ்வரிடமிருந்து பணத்தை பெறும் முயற்சிக்காக, தான் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்ததாக கூறும் அவர், இந்த வழக்கின் பின்னணியை வெளியிட முடிவு செய்ததாகவும் கூறினார். மேலும், தான் இனி நீண்ட நாள் வாழ முடியாத சூழல் உருவாகலாம் எனவும், தனக்கு ஏதும் சம்பவிக்கும் முன் இந்த வழக்கில் உள்ள அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, மாநில மற்றும் மத்திய உளவுத்துறையினர், பிரபாகரனின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரும், அவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.