கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் வைத்து சற்று முன் காலமானார்

news Sunday, March 06, 2016 - 20:17

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கலாபவன் மணி, சிகிச்சை பலனின்றி இன்று மாலை இறந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறு மதியத்திற்கு பின் தான் அவர் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமாக உள்ளார் என்ற தகவல்கள் வெளியாயின. கல்லீரல் சம்பந்தமான நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார்.

ஞாயிறு மாலை 7.15 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் அவரது மரணத்தை உறுதிபடுத்தியது.

கலாபவன் மணி, நடிகராகவும், பாடகராகவும் மலையாள திரை உலகில், தனது திரை வாழ்க்கையை துவங்கினார். திரை வாழ்க்கைக்கு முன் ஆட்டோ டிரைவராக இருந்தார்.

சமீபத்தில் காலமான நடிகை கல்பனா ஓஎன்வி குறுப்பு மற்றும் ராஜன் பிள்ளை போன்றோரின் தொடர் மரணத்தை தொடர்ந்து மணியின் இழப்பு மலையாள திரை உலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஜெயராம் உட்பட உள்ள பல மலையாள திரைத்துறையில் உள்ள அவரது நண்பர்கள், மணியின் உடல் நலம் மோசம் பற்றிய தகவலை அறிந்திருக்கவில்லை என கூறினர்.

வரும் தேர்தலில் மணியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருந்தது.ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்த அவர் சினிமாத்துறையிலும் அதில பிரபலமானார். 1999 இல் தேசிய விருதினையும், கேரளா மாநில விருதினையும் பெற்றார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நுழைந்து பல வில்லன் வேடங்களில் நடித்தார். ஜெமினி படத்தில் வில்லனாக நடித்த அவர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.