தமிழக சட்டமன்ற தேர்தல் 2016 - உடனடி செய்திகள்

தமிழக  சட்டமன்ற தேர்தல் 2016  - உடனடி செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2016 - உடனடி செய்திகள்
Written by:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன. மேய் 16 அன்று நடந்த இந்த தேர்தலில் 73.6% வாக்குகள் பதிவாகியிருந்தன. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்றே கூறுகின்றன.

நியூஸ் மினிட் சார்பில் தமிழ் வாசகர்களுக்காக உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை வெளியிடவுள்ளோம். ஒவ்வொரு நிமிடமும் சூடான தேர்தல் முடிவுகளை அறிய  இந்த பக்கத்திலேயே தொடர்ந்து பாருங்கள்.

11:19am: பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்  ஜெயலலிதா

11:17am: பிரதமர் நரேந்திர மோடி  ஜெயலலிதாவுக்கு போனில் வாழ்த்து

11:15am: விஜயகாந்த் , அன்பு மணி ராமதாஸ் பின்னடைவு

11:14am: அண்ணா நகரில் கோகுல இந்திரா பின்தங்குகிறார்

11:13am: பி.ஜெ.பி வேட்பாளர் எம் .ஆர் காந்தி நாகர்கோவிலில் முன்னிலை

11:07am: விஜயகாந்த் , அன்பு மணி ராமதாஸ் பின்னடைவு

10:55am: பெரியகுளம், போடி, கம்பத்தில் அதிமுக முன்னிலை

10:54am: ஆர்.கே. நகரில் ஜெயலலிதா 9000 வாக்குகள் முன்னிலை

10:32am: பெரியகுளம், போடி, கம்பத்தில் அதிமுக முன்னிலை

10:30am: போயஸ்கார்டனில் அதிமுகவினர்  கொண்டாட்டம்

10:19am: சைதாபேட்டையில் மா. சுப்ரமணியம் முன்னிலை

10:07am: திமுக பெண்ணாகரத்தில் முன்னிலை

9:12am: திருச்சி  வடக்கில் கே .என். நேரு  - திமுக  முன்னிலை

9:00am: திருவாரூரில் கருணாநிதி  முன்னிலை

8:30 திருமயத்தில்  திமுக  முன்னிலை

8:28am: உதகமண்டலத்தில் அதிமுக முன்னிலை

8:26am: திமுக + 1, அதிமுக - 1 மற்றவை - 0

8:20am: ஒரத்த நாட்டில் திமுக வேட்பாளர் 22 வாக்குகள் முன்னிலை

8:15: ஒரத்தநாடு  தொகுதியில்  திமுக முன்னிலை

8:14am: வேளச்சேரி தொகுதியில் 704 தபால்  வாக்குகள்  பதிவு

8:08am: கருணாநிதியின்  கோபாலபுர வீட்டிற்கு  ஆ.ராசா வருகை

8:05am: வாக்கு  எண்ணிக்கை  துவங்கியது

8:04am : வாக்கு வித்தியாசம் குறைவாக  இருந்தால், வாக்குகள்  மீண்டும்  எண்ணப்படும் - ராஜேஷ் லக்கானி

7:58am: ராமநாதபுரம் மாவட்டத்தில், 1300 தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட உள்ளன

7:50am: திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை உயர்நீதிமன்றம் பார்த்து கொள்ளும்  - முக ஸ்டாலின் பேச்சு

7:42am: ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன  - ராஜேஷ் லக்கானி  தகவல்

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com