தீர்ப்பில் மகிழ்ச்சி.மீண்டும் எழுத்துப்பணியை தொடர பெருமாள் முருகன் முடிவு.

news Wednesday, July 06, 2016 - 12:08

தீர்ப்பில் மகிழ்ச்சி.மீண்டும் எழுத்துப்பணியை தொடர பெருமாள் முருகன் முடிவு.

'பெருவெடிப்புக்கு பின் பூ மலர்கிறது.' எனக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாதொருபாகன் நாவல் விவகாரத்தில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்ததை தொடர்ந்து தனது எழுத்துப் பணியை தொடர பெருமாள் முருகன் தொடர முடிவு செய்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

நண்பர்களே,

வணக்கம்.

தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது.

‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன். ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறது மனம்.

துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி. எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி.

பூ

பெருவெடிப்புக்குப் பின்
ஒரு பூ மலர்கிறது

கூர்மணம்
நறுந்தோற்றம்
மின்பொலிவு

எல்லாவற்றையும்
எடுத்து நிறுத்துவிடும்

பூ.

எனக் கூறியுள்ளார்

Show us some love! Support our journalism by becoming a TNM Member - Click here.