
கோயம்பத்தூரில், போலீசார் முன்னிலையில் ஆஜரான பின் நடிகர் சிம்பு, பீப் பாடல் சம்பந்தமான சர்ச்சையை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
“ நான் அதிகம் பேச கூடிய மனநிலையில் இல்லை. போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. இதை தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும்.” என ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஆஜரான பின் கூறினார்.
இதற்கு முன்னர், அனிருத் கோயம்பத்தூர் போலீசார் முன் ஆஜராகி, தான் அந்த பாடலுக்கு இசை அமைக்கவில்லை என இருபக்க அறிக்கை ஒன்றை கொடுத்தார்.
பீப் பாடல், பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோயம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததும், அதனை குறித்த சர்ச்சை பெரிதானது. அதனை தொடர்ந்து போலீசார் சிம்புவை கடந்த டிசம்பர் மாதம் நேரில் ஆஜராக கூறியிருந்தனர். ஆனால் சிம்பு ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.