விளையாட்டு, சுகாதாரம், மரக்கன்று நடுதல், இலவசங்கள் கொடுத்தல் என அனைத்திலும் 68 வரும் வகையிலான நிகழ்ச்சிகளை பட்டியலிட்டுள்ளது.

 68
Vernacular பிறந்த நாள் Thursday, February 18, 2016 - 09:35

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாளுக்கு நாள், அதிகரித்த வண்ணம் உள்ளன. இலவசங்களை அள்ளி கொடுப்பதும், திருமணமாகாத இளைஞர்களுக்கு கூட்டமாக திருமணம் நடத்தி வைப்பதும் என கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பிறந்த நாளன்று இனியும் பேனர்கள் வைப்பதற்கு இடம் இல்லாத அளவு, ஏற்கனவே பேனர்கள் வைத்தாகிவிட்டது.இதனிடையே சென்னை மாநகராட்சி ஜெயலாலிதாவின் 68 வது பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று விதவிதமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பிரமாண்ட திட்டங்கள் அனைத்துமே 68என்ற எண் வரும்படியும் பார்த்து கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள் பெரும்பாலும், இலவசங்கள் கொடுப்பது, சுகாதாரம், சுற்றுசூழல், மற்றும் கலாச்சார நடவடிக்கைகள், ஆகியவற்றை ஒட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.” முதல் நடவடிக்கையாக, பொதுமக்களிடையே விளையாட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.கிரிக்கெட், பாஸ்கட் பால், கால்பந்து,ஹாக்கி, கபடி, கோகோ,ஜூடோ,கராத்தே,குத்துச்சண்டை,டேபிள் டென்னிஸ்,பேட்மிண்டன், பளுதூக்குதல்,கேரம், செஸ்,அத்லெடிக்ஸ் போன்ற விளையாட்டு போட்டிகள் இவற்றில் அடங்கும்.” என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.இந்த போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கம், ராஜரெத்னம் ஸ்டேடியம்,நுங்கம்பாக்கம் பப்ளிக் கிரௌண்ட் மற்றும் மாநகராட்சி நீச்சல் குளம் ஆகிய பகுதிகளில் வைத்து நடைபெறும்.

அன்றைய தினம் 282 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான சுற்றுசூழல் நடவடிக்கையாக கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் நீர் தொட்டிகளில் , கொசுக்களின் லார்வாக்களை தின்னும் மீன்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்காக 68 பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகள், 68000 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவை ஒவ்வொரு வார்டுக்கும் 68 என்ற வீதம் நடப்படும்.

68 நீர்நிலைகளில் மிதக்கும் குப்பைகள் அகற்றப்படும். அதோடு, மாநகராட்சியின் ஒவ்வொரு கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்படும். மொட்டை மாடிகளில் செடிகள் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 68 கட்டிடங்களை தேர்வு செய்து, அவற்றிற்கான கிட்களை வழங்கி, அவற்றில் மாடி தோட்டங்கள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்றே, மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மாநகரில் உள்ள 68  பார்க்குகளில், மருத்துவ பரிசோதனை, இரத்த தானம் உள்ளிட்ட மருத்துவ முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதோடு, நடமாடும் மருத்துவ முகாம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை,இரத்த அழுத்த சோதனை ஆகியவற்றை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அம்மா பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷடம் உள்ளவர்கள். மாநகரில் அன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.10000 நிரந்தர வைப்புநிதியாக கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கோலப்போட்டியில் கலந்து கொள்ளும் 68 பேருக்கு பரிசளிக்கவும், 68  மூன்றாம் பாலினத்தவரை கௌரவபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் மணல் சிற்பங்களை உருவாக்குவதற்கான போட்டியும் நடைபெற உள்ளது.

இவையனைத்துமே ஒரே நாளில் நடத்த முடியுமா என்ற கேள்விக்கு “நாங்கள் இந்த திட்டங்களை பிறந்த நாள் அன்று துவங்க திட்டமிட்டுள்ளோம். அதனை தொடர்ந்து தேவையான கால அளவில், மாநகர வார்டு கவுன்சில் இதனை தொடர்ந்து நடத்தும் “ என்றார் மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி பழனியப்பன்.

கடந்த வருடம், விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சொத்துகுவிப்புக்காக வழங்கப்பட்ட தண்டனையை அடுத்து, கர்நாடாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதனையொட்டி சென்னை நவசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக பூஜைகளும் விடுதலையாக வேண்டி நடந்தன. பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்தவித நடவடிக்கைகளும் கடந்த பிறந்த நாளன்று எடுக்கப்படவில்லை. ஆனால் 2014 க்கு முன்னர், புகழை விரும்பிய அதிமுக தொண்டர்கள் பாராளுமன்ற வடிவிலான கேக்குகளை வெட்டி கொண்டாடினர். அவை அனைத்துமே பிரதமர் கனவை ஒட்டி செய்யப்பட்டவை.

“ இது அனைத்துமே அவரது கவனத்தை ஈர்த்து, புகழ் பெறுவதற்காக நடத்தபடுபவை அல்லாமல் வேறெதுவும் இல்லை.ஆனால் இந்த முறை தேர்தலும் வந்துள்ளது. அதனால்,அனைத்திலும் 68 என்பது, மக்களிடம் நலத்திட்டங்கள் மூலம் அவரது பெயரை நினைவுபடுத்துவதே.” என கூறினார் சென்னை பல்கலைகழக பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.