உண்மையில் ஜெயலலிதா மின் தட்டுப்பாட்டை சரி செய்தாரா ?

கோவை மாவட்டத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்த மின்வெட்டால், பல தொழில்கள் முடங்கி போயின.
உண்மையில் ஜெயலலிதா மின் தட்டுப்பாட்டை சரி செய்தாரா ?
உண்மையில் ஜெயலலிதா மின் தட்டுப்பாட்டை சரி செய்தாரா ?

மீண்டும் ஒரு முறை கூட சென்னை வெப்பத்தின் தாக்கத்தை உணர துவங்கிவிட்டது. ஞாயிறு மாலையில், கீழ்பாக்கம், புரசைவாக்கம்,வேப்பேரி, சௌக்கார்பேட்டை, சூளை, பிராட்வே  மற்றும் பூங்கா நகர் உட்பட உள்ள வட சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஒழுங்கற்ற மின் தடை இப்போது வழக்கமாகிவிட்டது. மின்வாரிய அதிகாரிகள், இந்த மின்தடை கேபிள்கள் அதிக அளவில் சூடாவதால் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதிக லோடுகள் காரணமாக டிரான்ஸ்பாமர்களும் சிக்கலை சந்திக்கின்றன. கோடைகாலங்களில் ஏர் கண்டிஷன் மற்றும் ஏர் கூலர்களின் அதிக பயன்பாடு காரணமாக இது பிரச்சினைகள் வருவது வழக்கமானதாகிவிட்டது. இந்த பின்னணியில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோயம்பத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தான் ஆட்சிக்கு வந்த பின்னர் மின் தடையை முழுவதுமாக இல்லாமல் ஆக்கிவிட்டதாக அறிவித்துள்ளார். “ கடந்த வருடத்தில் தமிழ்நாடு 7,485மெகாவாட் மின்சாரத்தை பெற்றுள்ளது. அதன்பின்னர் கடந்த ஜூன் முதல் மாநிலம் முழுவதும் எங்கேயுமே மின்தடை இல்லை.” என அவர் அறிவித்துள்ளார். கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது, பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது ட்ரான்ஸ்பர்மார்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் எதிர்க்கட்சிகளின் சதி தான் என கூறியிருந்தார்.

மின் தடை பிரச்சினை தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக அரசியல் கட்சிகளால் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் இரு திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மின்தடை பிரச்சினைக்கு மாறி மாறி பழி போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

உண்மையில் அம்மா கூறுவது சரி தானா ? “ அதிமுக அரசு, தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கியதுடன் மின்பற்றாக்குறை தீர்ந்துவிட்டது என நம்புகிறது.” என கூறுகிறார் மின் பொறியாளர் சங்கத்தை சேர்ந்த காந்தி. கடந்த 2014 இல் பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், மத்திய அரசு மின் தொகுப்பு நிலையங்களிலிருந்து குறைந்த அளவு மின்சாரம் வழங்குவதே பற்றாக்குறைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெல் நிறுவனம் கைமாற வேண்டிய நிலையில் உள்ள, தேசிய அனல் மின் நிலையத்தில் சோதனை உற்பத்தியில் புதிய மின் உற்பத்தி திட்டத்திலிருந்து கிடைக்கும் மின்சாரமும் இந்த கணக்கில் தான் சேரும்.

ஆனால், மின்சாரத்தை தொடர்ந்து வாங்குவதால் பிரச்சினையை தீர்த்துவிடுமா ? “ “மின்சாரத்திற்கான செலவு கூடப்போகிறது. அதற்கான சுமை நுகர்வோர்கள் மீது தான் விழப்போகிறது. இதை மின் தொகுப்பு இயக்கம் எப்படி கையாள போகிறது என தெரியவில்லை” என்றார் காந்தி. கடந்த 2014 இல் தேசிய மின் தொகுப்பு, தென்னக தொகுப்புடன், ஒற்றை இணைப்பாக இணைக்கப்பட்டது. இந்த ஒற்றை இணைப்பானது 2500 மெகாவாட் மின்சாரத்தை சுமந்து செல்லும் என ஆவணங்களில் கூறப்பட்டாலும், 800  மெகாவாட் மின்சாரத்தையே கடத்தி செல்லத்தக்க வகையில் உள்ளது. இந்த அளவை காட்டிலும் கூடுதலாக மின்சாரம் அதில் கொண்டு செல்லப்பட்டால், அழுத்தத்தால் ட்ரிப் ஆவதற்கான சூழல் ஏற்படும். “ இந்த லோடுகளை எதிர்கொள்ள போதிய அளவு துணை மின் நிலைய கட்டமைப்புகள் இல்லை. எனவே அடுத்து புதிதாக அமையவிருக்கும் அரசு தான் இதனை எதிர்கொண்டாக வேண்டும்.” என அவர் மேலும் கூறினார். மேலும் தமிழ்நாடு மின்வாரியம் 74000 ரூபாய் அளவுக்கு கடனிலும் தத்தளிக்கிறது.

ஆனால், ஜெயலலிதா மின் மிகை மாநிலம் என பேசிய, தொழிற்சாலைகள் அதிகம் மிகுந்த கோயம்பத்தூரின் நிலை தான் என்ன ?

கடந்த மார்ச் 2015 ஐ ஒப்பிடுகையில் கோவை மாவட்டம் 12 சதவீதம் கூடுதலாக மின்சாரத்தை நுகர்ந்துள்ளது  என தி இந்து நாளிதழ் கூறுகிறது.இந்த ஒட்டுமொத்த மின் நுகர்வில் 10 சதவீத விரிவாக்கம் இந்த மண்டலத்தில் தொழிற்சாலைகளில் உருவாகியுள்ளது. கோயம்பத்தூரில், 5.3 மில்லியன் மக்களுக்கு வேலை அளிக்க கூடிய 7,60,000 சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக தொடரும் மின்தடையால் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

“ மின்கட்டண டாரிப்பில் நாங்கள் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறோம். குறு தொழில் நிறுவனங்களில் மின்விநியோகம் 3பி பிரிவின் கீழ் விநியோகிக்கப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களில் இந்த டாரிப்பானது 100 சதவீத கட்டண உயர்வை எதிர்கொண்டுள்ளது. இந்த மின்கட்டணத்தை அவர்களால் குறைக்க முடியவில்லையெனில், நாங்கள் இந்த டாரிப்பை 3ஏ1 பிரிவுக்கு மாற்றம் செய்ய அரசுக்கு கோரிக்கை வைப்போம்” என்றார் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சிறு குறு தொழில்முனைவோர் சங்க தலைவர் ரவிகுமார்.

நிறுவனங்களின் உற்பத்தியிலும் பெருமளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.” பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மின்சார பயன்பாடும் வெகுவாக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 20,000 சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 2011 – 2013 ஆம் ஆண்டு காலங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பலரும் தங்கள் தொழில் நிறுவனங்களை மூடிவிட்டனர். அந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் அனைத்தும் பெரிய நிறுவனங்கள் பக்கம் சென்றது. இதனால், இயற்கையாகவே மின் பயன்பாடு 2015 இல் குறைந்து போனது.” என்கிறார் தமிழ்நாடு குடிசை மற்றும் குறு தொழில்முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறினார். கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த அமைப்பில் 4000 உறுப்பினர்கள் உள்ளனர்.

“2011 -2014 க்கு உட்பட்ட காலகட்டங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்த மின்தடையால், கிடைத்து வந்த ஆர்டர்கள் எல்லாம் வடஇந்திய மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. ஆனால், 2014 இல் இருந்த மின்பற்றாக்குறை நிலைமைகள் ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 2013 காலகட்டங்களில் தற்போது இருக்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதனால், என்ன நடக்கபோகிறது என தெரியவில்லை.” என்றார் ஜேம்ஸ்.

கடந்த 2015 இல் அரசு, ராமநாதபுரம் மாவட்டத்தில்  4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை அறிவித்தது. அது போன்றே கோவை மாவட்டத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய 1600 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை உப்பூரில் துவங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

எனவே பலரும் மின்பற்றாக்குறையை அம்மா சரி செய்ததாக கூறிகொண்டாலும், மின்கட்டண உயர்வு நுகர்வோர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் விரைவிலேயே பெரிய தலைவலியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com