சென்னை மருத்துவமனைகளில் சுமார் 12 நடிகர்கள், குழந்தைகளை உற்சாகப்படுத்தி, அவர்களின் வலிகளை மறக்க செய்கின்றனர்.

Tamil Friday, April 29, 2016 - 12:28

அந்த சிறுவனுக்கு 12 வயது தான் ஆகிறது. கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்படும் அவனுக்கு எவரிடமும் பேச விருப்பமில்லை. முகம் முழுவதும் வண்ணம் பூசி, கோமாளி வேடம் அணிந்த பெண்ணொருவர் அவனிடம் வருகிறார். “ நாங்கள் உனக்காக ஒரு பாடலை பாடலாமா ? என அந்த சிறுவனிடம் கேட்க, அந்த சிறுவனோ தனக்கு எதுவுமே கேட்க விருப்பமில்லை என மறுக்கிறான். அதுமட்டுமல்லாது எதுவும் கேட்க விருப்பம் இல்லாதவனை போல் தனது காதையும் அடைத்து கொள்கிறான்.

ஆனால் அந்த பெண், அந்த சிறுவனிடம் ஒரு நகைச்சுவை கூற போவதாக மீண்டும் கூறுகிறார். அப்போதும் அச்சிறுவன் மறுத்தாலும், சில நிமிடங்களிலேயே மாறிவிடுகிறான்.” அந்த சிறுவன் எங்களுடன் விளையாட துவங்கினான். நாங்கள் அவனுக்காக பாடலை பாடினோம்” என்கிறார் கோமாளி வேடமிட்ட அந்த பெண். இவை அனைத்தும் நடைபெறுவது ஒரு மருத்துவமனையின் வார்டில் தான்.மருத்துவர் ரோகிணி ராவ் தான் தனது மருத்துவமனையில், சக ஊழியர்களுடன் இணைந்து கோமாளி வேடமிட்டு, இளம் நோயாளிகளை கலகலப்பாக வைத்துள்ளார்.

அவர் பாடலை பாடி, நகைச்சுவைகளை கேட்க துவங்கியதும்,அமைதியாக சிரிக்க துவங்கிவிடுகிறான்.இந்த நடவடிக்கை மூலம், தனது நோயால் ஏற்படும் வலியை அந்த சிறுவன் மறந்து, ஆசுவாசமாக இருக்க பயன்படுகிறது. சென்னையில் சில மருத்துவமனைகளில் கோமாளி வேடம் அணிந்த 12 பேர் இதனை தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இது வெறும் சில நிமிட பொழுதுபோக்கு அல்ல. குழந்தைகளுக்கான இந்த மகிழ்ச்சியும் எதோ தற்காலிகமானது அல்ல என கூறுகிறார் டாக்டர் ரோகிணி. இந்த குழந்தைகள், கோமாளிகளுடன் தங்களுக்கு ஏற்படும் உற்சாக அனுபவத்தை தங்கள் பெற்றோர்களிடமும், தங்களை காண வருபவர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். அதோடு, மறுவாரம் மீண்டும் அந்த கோமாளிகளின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்து விடுகின்றனர்.

மருத்துவமனைகளில் கோமாளிகள் என்ன தான் செய்கிறார்கள் ? “ நாங்கள் பாட்டு பாடுகிறோம், நடிக்கிறோம்,நடனம் ஆடுகிறோம் கூடவே சில மாயாஜாலங்களும் செய்கிறோம். எங்கள் சக்திக்குட்பட்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றை எல்லாம் செய்கிறோம். எங்களில் இருவர் நடன இயக்குனர்கள். ஒருவர் பாடகர். வேறு சிலர் நடிப்பவர்கள். எங்களிடம் இருக்கும் திறமைகளை பயன்படுத்தி குழந்தைகளை சந்தோஷப்படுத்துகிறோம்.” என கூறினார் அவர்.

இந்த 12 கோமாளி நடிகர்களும் லிட்டில் தியேட்டர் குரூப்பில் இணைந்து செயல்படுவதுடன், அமெரிக்காவை மையமாக கொண்ட ஒரு மருத்துவமனை கோமாளி நடிகரிடம் பயிற்சியும்  பெற்றவர்கள்.

இப்படி ஒரு யோசனை, லிட்டில் தியேட்டரின் நிறுவனர் ஆயிஷா ராவ் , அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனை கோமாளியை சந்தித்த போது உருவாகியுள்ளது.” இது ஒரு அருமையான ஆலோசனை. இந்திய மருத்துவமனைகளிலும் இவற்றை நடைமுறைப்படுத்த விரும்பினோம். இதனை இன்னும் பல மருத்துவமனைகளில் பரவலாக்க லிட்டில் தியேட்டரில் நடிகர்களின் எண்ணிக்கையை கூட்டலாம் என நினைக்கிறேன்.” என்றார் அவர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.