ஹரீஷின் உடல் லாரி மோதியதில் இரு துண்டுகளானது.

news Thursday, February 18, 2016 - 08:21

பெங்களூரை அடுத்த வைட்பீல்ட் எஸ்எஸ்எம்எஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் வேலை பார்த்து வருபவர் ஹரிஷ் நஞ்சப்பா ( வயது 24 ) . இவர் செவ்வாயன்று காலை தனது பைக்கில் பெங்களூரு நோக்கி போய் கொண்டிருந்தார்.

அப்போது, திப்பஹண்டனஹள்ளி அருகே எதிரே வந்த லாரி, ஹரீஷின் பைக்கின் மீது மோதியது. இதில் ஹரீஷின் உடல் இரண்டு துண்டானது. ஹரீஷின் உடலின் தலை மற்றும் மேல்பாகம், நடுரோட்டிலும், கால் மற்றும் கீழ்பாகம் ரோட்டோரத்திலும் விழுந்தது.
 
தொடர்ந்து, ஹரீஷ் உதவி கேட்ட பின்னரும், மனதை உறைய வைக்கும் இந்த கொடூர நிகழ்வை, அப்பகுதியில் நின்ற மக்கள் கூடி வேடிக்கை பார்த்ததுடன் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தும், படம் எடுத்தும் நின்று கொண்டிருந்தனர். எவருமே உதவ முன்வரவில்லை. 
 
பின்னர், ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து வந்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளது. போகும் வழியில் உயிருக்கு போராடிய ஹரீஷ் , ஆம்புலன்சில் இருந்த உதவியாளரிடம் தனது உறுப்புக்களை தானம் செய்யும்படி கூறியுள்ளார்.
 
சம்பவம் குறித்து, டிஎஸ்பி ராஜேந்திர குமார் கூறியதாவது" விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு கொண்டு செல்லும் வழியில் தானே அவர் உயிர் பிரிந்தது " என்றார்.
 
தனது உடலை தானம் செய்யுமாறு கூறிய ஹரீஷின், உடனடி செயலாற்றலை கண்டு டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர்.
 
இதுகுறித்து, நாராயணா நேத்ராலயாவின் டாக்டர் புஜாங் ஷெட்டி கூறுகையில் " அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால், அதிர்ஷடவசமாக தலைக்கு பாதிப்பில்லாமல் போனது. அதனால் அவரது கண்களை தானம் செய்ய முடியும். ஆனால் அவரது உடலின் மற்ற உறுப்புகளை தானத்திற்காக எடுக்க இயலாது" என கூறினார்.
 
போலீசார், லாரி டிரைவர் மீது அலட்சியமாக வாகனம் ஒட்டி சென்றதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.