இலவசமாக இறுதி சடங்கு சேவை : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோவை மனிதரின் சேவை

இந்த சேவையை பெறும் பெரும்பாலான மக்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்
இலவசமாக இறுதி சடங்கு சேவை : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோவை மனிதரின் சேவை
இலவசமாக இறுதி சடங்கு சேவை : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோவை மனிதரின் சேவை
Written by:

கோயம்பத்தூரை சேர்ந்த செல்வராஜிற்கு,கடந்த 1995 ஆம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் முதுகு தண்டு வடம் பலத்த பாதிப்புக்குள்ளாகி போனது. அதோடு அவரது இரு கால்களும் பக்கவாதத்தால் செயலிழந்து போகும் நிலையும் உருவானது. சிகிச்சை முடிந்து வெளிவந்த செல்வராஜிடம் டாக்டர்கள், மருத்துவமனைக்கு வெளியே இயல்பான வாழ்க்கைக்கு சிறிய அளவிலான வாய்ப்புகளே உள்ளன என கூறியே அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் 53 வயதான செல்வராஜ், அவர்களின் எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

விபத்துக்கான சிகிச்சை முடிந்த பின்னர், செல்வராஜ் தனக்கு மட்டுமல்லாது, பிறருக்கு சேவை செய்வதிலும் தனது முழு நேரத்தை செலவழித்து வருகிறார். அதற்காக ஒரு சேவை செய்யும் குழு ஒன்றையும் செல்வராஜ் உருவாக்கி உள்ளார். குறிப்பாக, தான் தங்கியிருக்கும் வெள்ளங்குறிச்சியை சுற்றி 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எந்த மக்களின் வீடுகளில் மரணம் சம்பவித்தாலும், இலவசமாகவே இறுதி சடங்குகள் செய்வதை தனது வழக்கமாக கொண்டிருக்கிறார் செல்வராஜ்.

செல்வராஜ் முதன்முதலில் விபத்திற்கான சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வரும் டாக்டர்கள் அவருக்கு கூறிய மருத்துவ அறிவுரைகள் சற்று கடினமாகவே இருந்தன. ஆனால் அவரை சுற்றி இருந்த மக்களின் பேச்சு அவருக்கு இன்னும் ஏமாற்றமாகவே இருந்தது. “ என்னை சுற்றிலும் இருந்த மக்கள் என்னிடம் எப்போதுமே ‘ இனி உன்னால் வாழ்க்கையில் எதுவுமே செய்ய முடியாது’ என கூறி கொண்டிருந்தனர். அதுவே எனக்கு வாழ்க்கையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கியது.” என கூறுகிறார் அவர்.

ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ஆன பின்பு செல்வராஜ் பல்வேறு தொழில் துவங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். “ நான் ஒரு எஸ்.டி.டி பூத் ஒன்றை நடத்தினேன். அதனை தொடர்ந்து ஒரு துணிக்கடை ஒன்றை நடத்த முயற்சி செய்தேன். அதன்பிறகு ரியல் எஸ்டேட் முகவராகவும் செயல்பட்டேன்.” என கூறுகிறார் அவர்.

கடைசியாக, தனது குடும்ப வருமானத்திற்கு போதுமான வருமானத்தை அழிக்க ரியல் எஸ்டேட் உதவிகரமாக இருக்கவே அதனையே தொடர்ந்தார்.

கடந்த 2013 இல் அந்த தொழிலில் குறிப்பிட்ட வெற்றியை பெற்றதை தொடர்ந்து, செல்வராஜ் தனது வீட்டை சுற்றிலும் உள்ள மக்களுக்கு இலவசமாக இறுதி சடங்கு செய்வதை துவங்கினார். இப்படிப்பட்ட சேவையை துவங்குவதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு செல்வராஜால் பதில் கூற முடியவில்லை என்றாலும், இத்தகைய சேவை நிச்சயம் தேவை என கூறுகிறார். “ ஒரு வாட்ச்மேனால் 1500 ரூபாய் வீட்டு வாடகையை கூட கொடுக்க பணமில்லாத சூழலில், அவரால் எப்படி 10000 ரூபாய் செலவு செய்து இறுதி சடங்கை நடத்த முடியும்.?” என கேட்கிறார் அவர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் செல்வராஜ் 2700 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த சேவையை செய்துள்ளார். “ நாங்கள், மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்டவற்றுடன் குளிர் பதன பெட்டியையும் கூடவே அதற்கான வாகனத்தையும் கொடுத்து விடுவோம்.” என கூறுகிறார் செல்வராஜ். செல்வராஜ் 2000 க்கும் மேற்பட்ட மரண வீடுகளில் தானாகவே நின்று, இறுதி சடங்குகளுக்கான தேவைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா ? எல்லாமே வெற்றிகரமாக அமைந்ததா ? என்று மேற்பார்வையிட்டுள்ளார்.

இந்த சேவையை பெறும் பெரும்பாலான வீடுகள் எல்லாமே, ஏழை குடும்பத்தினர் தான். அவர்கள், இறுதி சடங்கை நிறைவேற்றுவதற்கு போதிய பணம் இல்லாமல் இருப்பவர்கள். செல்வராஜின் இந்த சேவையை பிரபலமடைய துவங்கியதும் அதற்கான தேவைகளும் பெருக துவங்கியது. “ இந்த சேவை 200 சேர்களும், 20 மேஜைகளுமாக துவங்கியது. தற்போது, 1500 சேர்களும், 160 டேபிள்களும் 5 குளிர்பதன பெட்டிகள், ஒரு ஆம்புலன்ஸ் உட்பட 3 வாகனங்கள் என விரிவடைந்துள்ளது.” என்றார்.

இந்த சேவை பிரபலமடைந்தாலும், இது அவ்வளவு எளிதான பயணம் இல்லை. “ என்னிடம் 10 முழு நேர ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எல்லோருக்குமே மாத சம்பளமாக மாதம் 3 லட்சம் ரூபாய் நான் கொடுக்க வேண்டும். இதை சமாளிக்க சில மாதங்கள் எங்களால் முடியாமல் போனாலும் இந்த சேவையை நாங்கள் நிறுத்த முடியாது” என்றார் செல்வராஜ்.

செல்வராஜ் தனது இந்த சேவைக்கு தேவையான செலவினை நன்கொடைகள் வழியாகவே ஈடுகட்டி வருகிறார். “ ஒரு குடும்பத்தினர் எங்களுக்கு 10 ரூபாய் தர முன்வந்தால் அதனையும் நாங்கள் வாங்கி கொள்கிறோம். 2000 ரூபாய் தந்தால் அதனையும் பெற்றுக் கொள்கிறோம். ஒரு குடும்பத்தினாரால் எதுவுமே தர இல்லை என்றால் கூட நாங்கள் அதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது.” என்கிறார் செல்வராஜ். ஆனால் ரூபாய் 50000 வரை நன்கொடைஅழிக்கும் நபர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சேவை மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கோயம்பத்தூரில் 5 கிளைகள் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் செல்வராஜிற்கு உள்ளது. ஆனாலும் அதற்கு தேவையான செலவை சமாளிக்க தற்போது, தன்னிடம் பணம் இல்லையென்று கூறுகிறார் செல்வராஜ்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com