பணியிலிருந்து ஓய்வு பெறும்போது 40% பென்ஷன் தொகையை திரும்ப எடுப்பதற்கு வரி விலக்கு

 2016
news பட்ஜெட் 2016 Monday, February 29, 2016 - 18:01

விமானப் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் 

பொருட்களுக்கான எடை உச்ச வரம்பு அதிகரிக்க வாய்ப்பு.

நிர்பயா திட்டத்தின் கீழ் பொதுகாப்பீட்டு திட்டத்தில் சேவை வரிக்கு விலக்கு.

60 சதுர மீட்டர் பரப்பிலான வீடுகளை கட்டுவதற்கு விதிக்கப்படும் சேவை வரிக்கு விலக்கு.

பணியிலிருந்து ஓய்வு பெறும்போது 40% பென்ஷன் தொகையை திரும்ப எடுப்பதற்கு வரி விலக்கு.

வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரி செலுத்துபவருக்கான வரி விலக்கு ரூபாய் 20000  லிருந்து ரூ.60000 ஆக அதிகரிப்பு.

முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு 35 லட்சம் ரூபாய் வரையிலுள்ள கடனில் கூடுதலாக ரூபாய் 50000 வரை வட்டியில் தள்ளுபடி. குறிப்பிட்ட அந்த வீட்டின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வருமான வரிக்கான உச்சவரம்பில் மாற்றம் ஏதும் இல்லை.

புதிய தொழிலாளர்களுக்கு, அவர்களது வருங்கால வைப்பு நிதிக்கு 8.33%  தொகையை  முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசு செலுத்தும்.

5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் உள்ள வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி சலுகை வரம்பு ரூ. 3000 லிருந்து ரூ.5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் வகையிலான புதிய சுகாதார பாதுகாப்பு திட்டம் அறிமுகபடுத்தபட்டுள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக ரூ.30000 வரை கிடைக்கும்.

குளிரூட்டப்பட்ட கொள்கலன்களுக்கான சுங்க வரி குறைப்பு

பிரயிலி காகிதங்களுக்கான வரிக்கு விலக்கு

விலை அதிகரிக்க வாய்ப்புள்ளவை

பீடியை தவிர அனைத்து புகையிலை பொருட்களுக்கும் கலால் வரி 10 முதல் 15% உயர்வு

பிராண்டட் ரெடிமேட் ஆடைகளுக்கு கலால் வரி விதிப்பு

அதிக திறனுள்ள வாகனங்களுக்கு  4 சதவீதம் வரை  வரி உயர்த்தப்படுகிறது.

10 லட்சத்திற்கும் அதிகமான சொகுசு கார்களுக்கும், 2 லட்சம் வரை பணம் கொடுத்து வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் கூடுதலாக 1% சேவை வரி.

0.5 % கிரிஷி கல்யான் வரி என்ற பெயரில் அரசு அனைத்து வரி செலுத்தும் சேவைகளுக்கு குறிப்பாக விமான நிலையம், வங்கி, கேபிள் ஆப்பரேட்டர், கிளப் உறுப்பினர் பதிவு, அழகு நிலையம், கட்டுமானம், விளம்பரம்,தொலைதொடர்பு போன்ற துறைகளில் உள்ள சேவைகளுக்கு புதிதாக வரி விதிக்கப்படும்.

ஒரு வருடத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான லாப தொகைக்கு 10% கூடுதலாக வரி விதிப்பு

விலை கூடிய நகைகளுக்கு கூடுதலாக 1% வரி விதிப்பு

மாசுக்கட்டுப்பாட்டு வரி என்ற பெயரில் சிறிய ரக பெட்ரோல், கியாஸ் கார்களுக்கு 1% வரியும், டீசல் கார்களுக்கு 2.5 % வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.