தயாரிப்பாளர் ரஞ்சித் விபத்தில் காயம்பட்டு ஓய்வில் இருந்த வின்சி ராஜுக்கு போஸ்டர் வடிவமைக்கும் வாய்ப்பை அளித்தார்.

Tamil Kabali Wednesday, June 22, 2016 - 12:31

ஒரு கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்த வின்ஸ் ராஜ் விளம்பர உலகில் எண்ணற்ற விருதுகளை வாங்கியவர் என்ற அளவில் மட்டுமல்லாது ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்றும் அறியப்பட்டவர். ஆனால், தனது வாழ்நாள் முழுவதும் தான் கொண்டாடிய நடிகரை காண்பது என்ற தனது வாழ்நாள் கனவு நனவாகும் என்றோ அல்லது அது எப்படி என்றோ அவர் சிந்தித்திருக்கமாட்டார்.

கபாலி போஸ்டரின் பின்னால் இருந்து கடினமாக உழைத்தவர் தான் இந்த  35 வயதான வின்சி ராஜ். ஆனாலும், தனது தலைவரை காண வேண்டும் என்ற அவரது ஆவல் எட்ட முடியாத தொலைவிலேயே இருந்தது. மணிப்பாலில் கடந்த வருடம் நிகழ்ந்த ஒரு விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் திடீர் நினைவிழப்பு நோய்க்கு ஆளாகியிருந்தார் அவர். “ எனது சில நண்பர்களை கூட நினைவில் வைத்து கொள்ள எனக்கு கடினமாக இருந்தது. நான் விபத்துக்குள்ளாகியிருந்தேன் என்பதையே என்னால் ஒரு மாதம் கடந்த பின்னர் தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.” என கூறுகிறார் வின்சி ராஜ்.

விளம்பரத்துறையில் உள்ள வேலையை விபத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் விட்டுவிட்ட வின்சி ராஜ், நிர்க்கதியற்றவராக ஆகியிருந்தார். இந்த சூழலில் தான் தயாரிப்பாளர் ரஞ்சித் வின்சி ராஜுக்கு புது வாழ்க்கையை கொடுத்தார்.

இவ்வாறு எதிர்பாரதவிதமாகவே வின்சி ராஜ் சினிமா உலகில் நுழைந்தார். ரஞ்சித்துடன் வேலை செய்யும் வின்சி ராஜின் நண்பர் மோசஸ் தான் சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனருக்கு சில ஆண்டுகளுக்கு முன் அவரை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தியின் போஸ்டரை வடிவமைக்கும் பணியினை வின்சி ராஜை வைத்தே செய்திருந்தார். அதன் பிறகு ரஞ்சித் அவரை திரும்பியே பார்க்கவில்லை. அதனை தொடர்ந்து, சி.வி குமாரின் சினிமாக்கள் உட்பட வேறு பல தயாரிப்பாளர்களின் சினிமாக்களின் போஸ்டர்களையும் வின்சி ராஜே வடிவமைத்தார்.

விபத்தில் தனக்கு ஏற்பட்ட காயங்கள் குணமடைய வசதியாக தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது தான் ரஞ்சித், கபாலி படத்தின் போஸ்டர் வடிவமைப்பிற்காக வின்சி ராஜை அணுகியது.” எல்லாவற்றையும் இழந்து போன சூழலில் இருந்த எனக்கு, வாழ்க்கையின் முக்கிய வாய்ப்பாக  அது இருந்தது.” ஆனால் அந்த வேலையை ஏற்றெடுக்க ராஜின் உள்ளுணர்வு முதலில் மறுத்தது. அதனாலேயே மற்றொரு வடிவமைப்பாளரை அணுகும்படி ராஜ், ரஞ்சித்திடம் கூறினார். “ நீதியுடன் அந்த சினிமாவில் என்னால் வேலை செய்ய முடியாது என்றே நான் நினைத்தேன். தலையில் பட்ட காயத்தால், வடிவமைப்பிற்காக கற்ற மென்பொருட்களை உபயோகிக்கும் முறைகள் அனைத்துமே மறந்து போய்விட்டதாக அவரிடம் கூறினேன்.” என கூறுகிறார் வின்சி ராஜ். ஆனால் படத்தயாரிப்பாளர் வின்சி ராஜின் இந்த கருத்தை ஏற்க மறுத்தார். மேலும், கார் விபத்தில் அவர் மறந்து போன பலவற்றையும் மீண்டும் கற்க அவருக்கு காலஅவகாசமும் கொடுத்தார்.  

‘கபாலி’ படப்பிடிப்பின் போது தான் ராஜின் கனவு நனவாகும் சூழல் உருவானது. தான் ஆராதிக்கும் நடிகர் ரஜினிகாந்தை முதன் முதலாக அங்கே தான் அவர் சந்தித்தார். “ சார் ! உங்களை பார்த்து நான் வளர்ந்தேன்.” இதை தான் ராஜ் தனது முதல் வார்த்தையாக ரஜினியிடம் கூறினார். அதற்கு ரஜினிகாந்த் புன்முறுவலுடன் “ நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றை எல்லாம் நாம் செய்யலாம்.” என்றார்.

பலரும் ரஜினிகாந்தை ‘ப்ரொபஷனல்’ என்றும் ‘எளிமையான மனிதர்’ என்றும் கூறுவது வழக்கம். ராஜ், தனது மொபைல் போனில் படப்படிப்பை படம் பிடித்த லே அவுட் காட்சிகளை ரஜினிக்கு காண்பித்தார். இரு ஷாட்டுகளில் சிறந்த பிரேம்களை எடுக்க போட்டோகிராபருக்கு ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுக்க வேண்டியதாயிருந்தது. “ ரசிகர்களுக்கு என்ன  விரும்புகிறார்கள் என்பதை அவர் அனுபவபூர்வமாக தெரிந்து வைத்திருந்தார். கூடுதலாக அவர் தந்த ஷாட்டுகள் எல்லாம் எங்களுக்கு போனஸாக கிடைத்தன” என கூறினார் ராஜ்.

ராஜ் கபாலிக்காக 10 போஸ்டர்களை வடிவமைத்தார். அவற்றில், நாற்காலியில் கோலாலம்பூரின் கட்டிட பின்னணியில் அழகுடன் அமர்ந்திருக்கும் காட்சி உட்பட இரு படங்கள் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பரில் கபாலி படத்தின் முதல் போஸ்டர் வெளியான போது, ராஜின் கடின உழைப்பும் அதில் இருந்தது.

கபாலி வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மற்ற ரசிகர்களை போலவே தானும் முதல் நாள் முதல் காட்சியிலேயே சினிமாவை காண ஆவலுடன் இருப்பதாக ராஜ் கூறுகிறார்.  மீண்டும் ரஜினியுடன் இணைந்து  வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டா ? என்ற கேள்விக்கு “ அதிர்ஷ்டம் இருந்தால் அவரை மீண்டும் சந்திப்பேன்” என்கிறார் வின்சி ராஜ்.

Topic tags,
Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.