நோட்டா தேர்வை மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் சேர்ப்பதன் மூலம், அரசியல் கட்சிகளை நல்ல வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்க தூண்டும் என்ற நோக்கத்திலேயே சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்த உத்தரவிட்டது

 PTI
Tamil Sunday, May 15, 2016 - 11:58

வருகிற மேய் 16 அன்று (நாளையதினம்)  தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க போகிறார்கள். அவ்வாறு வாக்களிக்க செல்லும் போது, வாக்குச் சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில், குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களுடன், கூடுதலாக ஒரு சின்னமும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த சின்னத்துடன் ‘இவர்களில் எவரும் இல்லை’ என்ற பொருள் தரும் வகையிலான நோட்டா (NOTA – None Of The Above )  என்ற சொல்லும் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த சின்னமானது, அகமதாபாத் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மின்னணு வாக்கு பதிவின், கடைசி சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டபேரவை தேர்தல்களை முன்னிட்டு கடந்த 2013 அக்டோபரில், நோட்டாவையும் ஒரு தேர்வாக அறிமுகப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வாக்காளர்களுக்கு, போட்டியிடும் வேட்பாளர்களை பிடிக்கவில்லையெனில், நோட்டா தேர்வை மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் சேர்ப்பதன் மூலம், அரசியல் கட்சிகளை நல்ல வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்க தூண்டும் தனது எதிர்மறை கருத்தினை பதிவு செய்யும் உரிமையை நோட்டா அளிக்கிறது. இதற்கான உத்தரவை தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சனா தேசாய், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பிக்கும் போது, இந்த என கூறியது. மேலும், ஒரு வாக்காளரை, நோட்டா தேர்வை பயன்படுத்தி வாக்களிக்கும் வாய்ப்பினை வழங்காமலிருப்பது, கருத்துரிமைக்கு எதிரான ஒன்று என நீதிபதிகள் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இருப்பினும், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவிப்பதை போன்று, நோட்டா வெற்றி பெறும் அளவிலான அதிக சதவீத வாக்குகள் பதிவாயிருப்பின், அந்த தேர்தல் செல்லாது என அறிவிப்பதற்கான சூழல் எதுவும் இல்லை. தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேல் தனது அதிருப்தியை வெளிக்காட்டி கொள்ளவே, இந்த நோட்டா பயன்படுகிறது.

அதுபோன்றே, வாக்களிக்க விருப்பம் இல்லாமலிருக்கும் வாக்காளர்களை, வாக்களிக்க தூண்டும் நோக்கத்திலும் இந்த நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் கள்ள ஓட்டு போடுவது வெகுவாக குறையும். ஆனாலும், இந்த நோட்டா வாக்குகள், தேர்தல் முடிவுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. அந்த வகையில், இந்த நோட்டா வாக்குகள் செல்லாத வாக்குகளாகவே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

நோட்டா முறையின், முக்கிய குறையே, அது அதிக வாக்குகள் பெற்றால், அந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்படும் வாய்ப்பு இல்லாமல் இருப்பது தான். இந்த பிரச்சினையை முன் வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தரங்கம்பாடி துரைசாமி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட, நோட்டா அதிக வாக்குகள் பெறுமாயின், அந்த தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று கேட்டிருந்தார். அது போன்றே, நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியடைந்த அந்த வேட்பாளர்களை குறிப்பிட்ட காலத்திற்கு, தேர்தலில் நிற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மனு மீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் முரளிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்சின் மீது வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மறு தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரம், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் (நோட்டவை தவிர்த்து) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என கூறினர். இந்த வழக்கை, உயர்நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்காமல் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

இருந்த போதிலும் நோட்டா ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சட்டமன்ற தேர்தல்களில் உருவெடுத்து வருகிறது. 2014 பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் பெற்ற வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட நோட்டாவுக்கு கிடைத்த அதிகம். இதே போன்ற நிலை தான் அதன், அடுத்த தொகுதியான வடகரை தொகுதியிலும் நிலவியது. அத்தொகுதியில் 6,107 நோட்டா வாக்குகள் பதிவாகியிருந்தன. நோட்டா வாக்குகள் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக பதிவாகியிருந்தால், அத்தொகுதியில்  சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News, views and interviews- Follow our election coverage.

Click TN Election Special

Click Kerala Election Special

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.