விக்ரம் ரசிகர்கள் டிவிட்டரில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்

Vernacular Wednesday, April 06, 2016 - 19:33

இந்த ஆண்டுக்கான, 63 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, தமிழ் சினிமா உலகமான கோலிவுட் 6 விருதுகளை அள்ளி எடுத்துள்ளது. இப்படியிருக்க, “ஐ” படத்தில் நடிகர் விக்ரமின் சிறந்த நடிப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என சீறுகிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.

அந்த படத்தில் விக்ரம், விலங்கு உருவத்திலிருந்து அடோனிஸ் உருவமாக மாறுவது மிகவும் குறிப்பிடத்தக்க காட்சியாக பார்க்கப்பட்டது. இருப்பினும் கூட விக்ரமும் ஏன் எந்த விருதும் வழங்கப்படவில்லை என்ற கேள்வி  ரசிகர்களிடையே எழுந்தது.

இந்நிலையில், இசை இயக்குனரும், தேசிய விருது தேர்வுக்குழு உறுப்பினருமான கங்கை அமரன் , ‘ஐ’ படம் ஏன் விருதிற்கு தேர்வு செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, ஐ படமானது ஆரம்ப கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் இறுதி பட்டியலில் இடம்பெற முடியாமல் போனது. இறுதி பட்டியலில் ஒரு படம் இடம்பெற வேண்டுமானால், அந்த படமானது, நூறு படங்களில் டாப் 30 படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்பிறகே அந்த படம் மத்திய குழுவின் பரிசீலனைக்கு  அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

மேலும் அவர், நடிகர் சூரியாவின் “பசங்க 2” மற்றும் மணிரத்னத்தின் “ஓகே கண்மணி” போன்ற படங்களும் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை என கூறினார்

தேர்வுக்குழுவானது, அந்தந்த மண்டலங்களின் அடிப்படையில் 6 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்களை பொறுத்தவரை, தமிழ் மற்றும் மலையாளம் ஒரு குழுவிலும், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் மற்றொரு குழுவின் கீழும் வருகின்றன.

ஒரு தேர்வு குழு உறுப்பினராக, தான் ஐ மற்றும் பசங்க 2 படங்களை மறு தேர்வுக்குட்படுத்தி, இறுதி கட்ட பரிசீலனைக்கு கொண்டு வர முயற்சித்ததாக கங்கை அமரன் கூறினார். ஆனால் தேர்வு குழுவில் இருந்த பிற உறுப்பினர்கள், பதிலடியாக அவர்கள் மொழியிலுள்ள இரண்டு படங்களை மறுதேர்வு செய்ய கோரிக்கை வைத்தனர் என கங்கை அமரன் கூறினார்.

இறுதியாக, மறு தேர்வுக்கு எடுத்தக்கொள்ளப்பட்ட படங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து, முடிவுகளை அறிவிக்க நீண்ட காலதாமதம் ஏற்படும் நிலை தேர்வு குழுவினருக்கு உருவானது. இதனை தொடர்ந்து, தேர்வுக்குழுவினர், மறு தேர்வினை விட்டுவிட்டு ஏற்கனவே இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்களை பரிசீலிக்க வேண்டியதாயிற்று.

இந்த விளக்கமானது, விக்ரம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட  #RIPNationalAwards என்ற டிவிட்டர் ஹேஷ் டாக்கிற்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டரில் பதியப்பட்டது. விக்ரம் ரசிகர்கள் எண்ணற்ற மீம்ஸ்களையும் உருவாக்கி வெளியிட்டனர்.

ஐ படத்தில் பணியாற்றிய தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமும் ஐ படத்திற்கு விருது வழங்காததை டிவிட்டரில் கண்டித்துள்ளார். “ விக்ரமுக்கு விருது இல்லை. தேசிய விருது தேர்வுகுழு பல முறை இந்த தவறை செய்துள்ளது. இது விக்ரமின் இழப்பு அல்ல, மாறாக தேசிய விருதுகளின் இழப்பு.” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

(The content is provided by Digital Native)

Topic tags,

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.