எங்குமே ஒளித்து ஓடவில்லை. மல்லையா ட்வீட்

ஊடகங்கள் இது பற்றி விசாரணை நடத்த தேவையில்லை. அர்னாப் கோஸ்வாமி பொய்களை பரப்புவதற்காக ஜெயிலுக்கு செல்ல வேண்டும்
எங்குமே ஒளித்து ஓடவில்லை. மல்லையா ட்வீட்
எங்குமே ஒளித்து ஓடவில்லை. மல்லையா ட்வீட்
Written by:

வங்கியில் வாங்கிய கடனை திரும்ப அடைக்காததால், வங்கிகளால் கண்காணிக்கப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய்மல்லையா, ஊடகங்களில் கூறியது போன்று, நான் இந்தியாவை விட்டு ஒளித்து ஓடவில்லை என ட்வீட் செய்துள்ளார்.

நான்,சர்வதேச அளவில் தொழில் செய்பவன். அதனால்,இந்தியாவை விட்டு அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவன். நான் இந்தியாவை விட்டு ஒளித்து ஓடவோ அல்லது தலைமறைவாகி விடவோ செய்யவில்லை.” என வெள்ளியன்று காலையில் டிவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும், டிவிட்டரில் மல்லையா குறிப்பிடுகையில், தான் சட்டத்தை மதித்து அதற்கு ஒத்துழைப்பதாகவும், ஊடகங்கள் தான் உண்மையை திசை திருப்புவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஒரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், தான் இன்னும் சட்டத்தையும், நீதித்துறையையும் மதிப்பதாகவும், ஆனால் ஊடகங்களால் விசாரிக்கபடுவதை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். அதோடு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியை குறிப்பிட்டுள்ள அவர், அர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

டைம்ஸ் நவ்வின் ஆசிரியர், அவதூறு பிரச்சாரங்களை உணர்ச்சி கலந்த பொய்யாக சொல்வதற்காக, ஜெயிலுக்கு சென்று ஜெயில் உடையை உடுத்து, அங்குள்ள உணவையும் சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையே, வியாழனன்று அமலாக்க துறையினர் ஆறுக்கும் மேற்பட்ட ஐடிபிஐ வங்கி அதிகாரிகளுக்கு, மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்திற்கு 900 கோடி கடன் வழங்கியதை விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பியுள்ளது.

அமலாக்க துறையினர், சிபிஐ விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட விஜய் மல்லையா மற்றும் பலர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்றே விதிமுறைகளை மீறி ஐடிபிஐ வங்கியிலிருந்து கடன் கொடுக்கல் வாங்கல் நடத்தியதாக விஜய் மல்லையா மற்றும் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் மீது சிபிஐயும் வழக்கு பதிந்துள்ளது.

அத்துடன், இந்த நிதிகள், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா எனவும் விசாரித்து வருவதாக அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

ஏர்லைன் நிறுவனத்தை மூடிய பின், ஏப்ரல் 2013 முதல் வங்கிகள் 1244 கோடி ரூபாயை கடன் பத்திரங்களை விற்றதன் மூலம் திரும்ப பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மல்லையா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com