ஆச்சரியத்தக்க வகையில் பாகுபலி சினிமா காட்சியை போன்றே இருக்கும் சிவபெருமானின் சிற்பங்கள்

சிவபெருமான் சிவலிங்கத்தை தூக்கி கொண்டு நிற்பதை போன்ற ஒரே போன்ற இரு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆச்சரியத்தக்க வகையில் பாகுபலி சினிமா காட்சியை போன்றே இருக்கும் சிவபெருமானின் சிற்பங்கள்
ஆச்சரியத்தக்க வகையில் பாகுபலி சினிமா காட்சியை போன்றே இருக்கும் சிவபெருமானின் சிற்பங்கள்
Written by:

கடந்த ஆண்டு பல மொழிகளில் வெளியான பாகுபலி சினிமாவை நீங்கள் பார்த்திருப்பீர்களோ இல்லையோ, நிச்சயம் நடிகர் பிரபாஸ், சிவலிங்கம் ஒன்றினை தூக்கி பிடித்து நிற்கும் காட்சியை போஸ்டர்களிலேனும் பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில், அவர் ஒரு சிவலிங்கத்தை ஒரு நீர்வீழ்ச்சியின் அடியில் நின்று, தனது தோளில் சுமந்து பிடித்து கொண்டிருப்பார்.

அந்த காட்சி, யாரும் எதிர்பாராத விதத்தில் வரலாற்று ரீதியாக மாறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் , பாகுபலி சினிமாவில் உள்ளதை போன்றே சிவலிங்கத்தை தூக்கி கொண்டு சிவபெருமான் இருப்பதை போல் சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பங்களை கண்டுபிடித்துள்ளார்.

இந்த இரு சிற்பங்களும், புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பளூரிலும், அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரிலும் அமைந்துள்ளன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில் “ இந்த சிற்பங்கள் மிகவும் அபூர்வமான முறையில் ஒரே போன்று அமைந்துள்ளன. இதனை போன்று வேறு எங்கும் காண முடியாது. இந்த இரு சிற்பங்களும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்தை சேர்ந்தவை.” என்றார்.

முதல் சிற்பத்தை பற்றி அவர் மேலும் விளக்குகையில், “ சிவபெருமான் ஒரு காளையின் அருகில் சாய்ந்த வண்ணம் இருக்கிறார். அவரது ஒரு கால் செங்குத்தாகவும், மற்றொரு கால் கிடைமட்டமாகவும் உள்ளது. நான்கு கைகளில், முன் வலது கை, காளையின் மீது வைக்கப்பட்டுள்ளது.  முன்பாகத்திலிருக்கும் இடது கை, கருணையை காட்டும் வகையில்  ‘வரத்முத்ரா’ வை காட்டிய வண்ணம் உள்ளது. பின்பாகம் உள்ள இடது கை மான் ஒன்றை தாங்கி நிற்கிறது. பின்பாக வலது கை, வலது பக்க தோளில் சிவலிங்கத்தை தூக்கி பிடித்த வண்ணம் உள்ளது “ என்றார்.

கொடும்பளூரில் உள்ள மூவர்கோவில், இருக்கு வேளிர் ராஜவம்சத்தை சேர்ந்த பூதி விக்கிரமகேசரி என்ற சோழ பேரரசின் கீழிருந்த குறுநில மன்னனால் உருவாக்கப்பட்டது. இந்த மன்னன், தனது பெயரிலும், தனது மனைவிகளான கத்ராளி மற்றும் வருகுணாவின் பெயர்களிலும் மூன்று கோயில்களை கட்டினான். குறிப்பிட்ட இந்த சிவபெருமானின் சிலை கோயிலின் நடுப்பாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலப்பழுவூரில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது சிலையில், அடுத்தடுத்து, சிவபெருமானின் இரு சன்னதிகள் உள்ளன. “தெற்கு சன்னதியின் மேல்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலையானது, கிட்டத்தட்ட கொடும்பாளூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிலையை போன்றே உள்ளது. ஆனால் மற்றொரு சிலையில், சிவபெருமான் தனது இடது பின்கையில் மானுக்கு பதில் ருத்ராட்ச மாலையை கையில் வைத்துள்ளார். கொடும்பாளூரில் கண்டுபிடிக்கப்பட்டதை போலவே, இங்கும் வலது தோளில் சிவலிங்கத்தை ஏந்தி பிடித்துள்ளார். இந்த சிலை சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த பழுவேட்டரையர் என்ற சிற்றரசர்களின் காலத்தில் உருவாக்கப்பட்டவை.”  என்றார் பாலசுப்ரமணியம் 

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com