
ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில், பெரிய நிறுவனங்கள் திறமையான மாணவர்களை தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்வதற்கு வரிசையில் நிற்கும் காலம் இது.
ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் படித்தால் கூட,நல்ல வேலை கிடைப்பதான போராட்டமும் மிக கடினமாகவே உள்ளது.
அதில் சில மாணவர்கள் தாங்கள் வேலையில் தேர்ந்தெடுக்கப்பட புதுமையாகவும் விசித்திரமாகவும் தங்கள் வேலை தேடும் படலத்தை கையாளுகிறார்கள்.
அவர்களில் ஒருவர் தான் ஆகாஸ் நீரஜ் மிட்டல். ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான இவர் ‘இட் வாஸ் நாட் ஹர் பால்ட் ‘ ( அது அவளின் தவறில்லை) என்ற நூலின் ஆசிரியரும் கூட. ஆகாஸ் பிளிப்கார்ட்டின் ப்ராடக்ட் மேலாளராக ஆசைபட்டார். உடனடியாக அவருக்கு ஒரு ஆலோசனை தோன்றியது. இதனையடுத்து, தன்னை தானே விற்பனை பொருளாக அறிவித்து ஆன்லைன் வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டில் விளம்பரம் கொடுத்தார்.
Images source: Aakash Neeraj Mittal/Facebook
இதுகுறித்து பேஸ்புக்கில் ஆகாஸ் குறிப்பிட்டிருப்பதாவது. “ நாட்டிலுள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைக்காக போட்டிபோட்டு அதனை பெறுவது கொஞ்சம் கடினமானது தான். போட்டியாளர்களின் கூட்டத்திலிருந்து உங்களை தனித்து காட்ட நீங்கள் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும்.பிளிப்கார்ட்டில் நான் இப்படிப்பட்ட ஒரு ரெசியுமை போட்டுள்ளேன். இன்டர்வியுவிற்கு எனக்கு ஒரு அழைப்பும் வரவில்லை எனினும் யாரேனும் ஒருவர் முகத்தில் சிரிப்பை வரவழைக்க என்னால் முடியும் என நம்புகிறேன்”.
மேலும் அவர் கூறியிருப்பதாவது “ இந்த ரெசியுமை போட்டோஷாப் உதவி கொண்டு செய்வதற்கு எனக்கு 70 மணி நேரம் பிடித்தது. இதுவரைக்கும் அவர் வேலைக்கான அழைப்பு எதுவும் பெறாவிட்டாலும், பலரும் அவரை இதற்காக பாராட்டி வருகின்றனர்.
வாழ்த்துக்கள் ஆகாஷ்.