மணமக்களை ஆசீர்வதிக்க விழாவில் அம்மா நேரடியாக கலந்துகொள்ளாவிட்டாலும், நிகழ்ச்சியில் அவரது இருப்பை உறுதிசெய்யும் வகையில் படங்கள் நிறைந்திருந்தன.

news Sunday, February 07, 2016 - 09:36

அதிமுக  தொண்டர்களும்,ஜெயலலிதா பக்தர்களும்  அவர்கள் அம்மா -  பெயரை வர்த்தகமயமாக்குவதில் இதுவரையுள்ள நிகழ்வுகளை பார்த்து, எல்லை கடந்து சென்றுவிட்டார்கள் என நீங்கள் நினைப்பீர்கள் எனில் அது தவறான எண்ணமாகவே இருக்கும். தற்போது அந்த எல்லையையும் கூட தாண்டி நம்பமுடியாத அளவில் அவர்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

அம்மா கேண்டீன் முதல் அம்மா சிமென்ட் வரை இன்னும், அதிகம் விமர்சிக்கப்பட்ட  தமிழ்நாடு வெள்ளநிவாரண பொருட்களில் வரை உள்ள ‘அம்மா’ பெயர் தாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நீண்ட பட்டியல்கள் அம்மா தமிழ்நாட்டில் எங்கும் நிறைந்துள்ளார் என்பதை உறுதிசெய்கிறது.

அந்த நிலைமை இப்போது திருமணங்களிலும் இடம் பிடித்துவிட்டது. ‘அம்மா’வின் படத்தை தலையில் தாங்கி புதுமண தம்பதிகள் திருமணம் செய்துள்ளனர்.

அதிமுக பொதுசெயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68 வது பிறந்த நாள் பிப்ரவரி 24 ஆம் தேதி வருகிறது. ஆனால் இப்போதே அதற்கான கொண்டாட்டங்களை அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் துவக்கி உள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் உடுமலைப்பேட்டையில் அதிமுக தொண்டர்களால் நடத்தப்பட்டது. அவரது 68 வது பிறந்த நாளையொட்டி 68 புதுமண தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்.

மணமக்களை ஆசீர்வதிக்க விழாவில் அம்மா  நேரடியாக கலந்துகொள்ளாவிட்டாலும், நிகழ்ச்சியில் அவரது இருப்பை உறுதிசெய்யும் வகையில் படங்கள் நிறைந்திருந்தன.

ஒரு பட்டையில் துளையிட்டு ‘அம்மா’வின் படத்தை தைத்து அதனை தலையில் மணமக்கள் அணிந்திருப்பதை அம்மா பார்ப்பார்கள் என அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கூறி கொண்டதை கேட்க முடிந்தது. அதுபோன்றே அம்மா படங்களை தாங்கிய பிளாக்ஸ் போர்டுகளும் பின்னணியில் இருந்தன.

All images source: PTI

Topic tags,