கடந்த கால வரலாற்றை சொல்லும் மதுரையின் தெருப்பெயர்கள் – ஓர் அலசல்

கடந்த கால வரலாற்றை சொல்லும் மதுரையின் தெருப்பெயர்கள் – ஓர் அலசல்
கடந்த கால வரலாற்றை சொல்லும் மதுரையின் தெருப்பெயர்கள் – ஓர் அலசல்
Written by:

இந்தியாவில் காணப்படும் விதவிதமான தெருக்களின் பெயர்களையும் அவற்றின் வரலாறுகளையும் தெரிந்து கொள்வது இந்தியாவிற்கு பயணம் செய்யும் எவரையும் ஆனந்தத்தை ஏற்படுத்தும், குறிப்பாக தமிழகத்தில் இத்தகைய ஆனந்தம் சற்று கூடுதலாகவே கிடைக்கும் எனலாம். ஒவ்வொரு தெருவின் பெயரின் பின்னணியில் ஒரு கடந்த கால கதையொன்று அடங்கியிருக்கும். அந்த கதை, அந்த தெரு அமைந்திருக்கும் நகரின் உயிரோட்டமான வரலாற்றை எடுத்து கூறும்.

அப்படிப்பட்ட சில வரலாறுகள், நிலங்களை பற்றிய பதிவுகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் பெரும்பாலான வரலாற்று தகவல்கள் தெரு வரலாற்றாசிரியர்களின் தயவின் மூலமும், அவர்களின் ஊகங்களின் வழியும் தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற போது, அந்த அற்புதமான கட்டிடகலையை சுற்றிலும் இருந்த தெருக்களின் பெயர்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றில் சில, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளதை போன்றே நாயக்கர், பிள்ளை போன்ற பெயர்களில் முடிவடைந்தன. ஆனால் சில தெருப்பெயர்கள் தனித்தன்மைமிக்கவையாகவும், ஆர்வத்தை தூண்டுபவையாகவும் இருந்தன. இந்த தெருப்பெயர்கள் வரலாற்றுரீதியாக நன்கு ஆய்வு செய்யப்பட வேண்டியவை. ஆனால் நாம் அதனை உள்ளூர்வாசிகளின் கருத்துக்களையும், பொதுவாக அறியப்படும் கதைகளையும் அடிப்படையாக கொண்டு அவற்றின் வரலாற்றை உருவாக்குகிறோம்.

மீனாட்சி அம்மன் கோயிலை பொறுத்தவரை அதனை சுற்றிலும் சதுர வடிவிலான மதில் சுவர் அமைந்துள்ளது. இந்த மதில் சுவரின் எல்லையை ஒட்டி நான்கு தெருக்கள் உள்ளன. வடக்கு சித்திரை தெரு, தெற்கு சித்திரை தெரு, கிழக்கு சித்திரை தெரு, மேற்கு சித்திரை தெரு. அதன் அடுத்த வெளிப்புற சுற்றாக வடக்கு ஆவணி மூலை தெரு ,தெற்கு ஆவணி மூலை தெரு, கிழக்கு ஆவணி மூலை தெரு மற்றும் மேற்கு ஆவணி மூலை தெரு. இதன் அடுத்த கட்டமாக அமைந்திருப்பது மாசி தெருக்கள். இது போன்றே அங்கு ஆடி வீதி என ஆடி தெருக்களும் அமைந்துள்ளன. பொதுவாக ஒரு தெரு கோயிலை சுற்றி அமைந்திருந்தாலும் அவை கோயில் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.

ஆடி,சித்திரை,மாசி, ஆவணி ஆகிய மூன்றுமே மங்களகரமான  தமிழ் மாதங்கள். ஒவ்வொரு ஆண்டும் இம்மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. (நீங்கள் விழாக்களின் பட்டியலை இங்கு தெரிந்து கொள்ளலாம்) சித்திரை திருவிழா,ஆடி விழா, ஆவணி மூலம், மாசி மண்டல உத்சவம் என அந்தந்த மாதத்திற்கான விழாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இது தவிர, அம்மன் சன்னதி அல்லது கோயில் கருவறைக்கு நேராக ஒரு சாலை செல்லுகிறது. இது அம்மன் சன்னதி தெரு என அழைக்கப்படுகிறது. வடக்கு கோபுர தெருவும், தெற்கு கோபுர தெருவும் கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களை நோக்கி செல்கின்றன. மாத பெயர்களையும் ,திசைகளின் பெயர்களையும் உள்ளடக்கிய குறிப்பிட்ட இந்த தெருக்களின் இடையில் இருக்கும் வேறு சில தெருக்கள் சில புதிரான பெயர்களை தாங்கி நிற்கின்றன.

உதாரணத்திற்கு ஏழுகடல் தெரு. அம்மன் சன்னதிக்கு இணையாக செல்லும் இந்த தெரு ஏழு கடல்கள் என பொருள்படுகிறது. இது சொக்கநாதர் சன்னதிக்கு முன்பாக செல்கிறது. இங்கே மிகப்பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று இருந்தது. அந்த தொட்டியில் ஏழு கடல்களிலிருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு நிரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்று அந்த தொட்டி வணிக நோக்கிற்காக கட்டப்பட்ட கட்டிடங்களால் முழுவதும் மறைக்கப்பட்டுவிட்டது.

இதை பற்றி ஒரு ஐதீகம் உண்டு. மீனாட்சியின் தாயான காஞ்சனமாலா ஒருமுறை ஏழு கடல்களில் புனித நீராட விரும்பினார். தனது மாமியாரை திருப்திபடுத்த சிவபெருமான் ஏழுகடல்களில் உள்ள தண்ணீரை மதுரைக்கு கொண்டு வந்து ஒரு தொட்டியை உருவாக்கி அதில் அந்த தண்ணீரை சேகரித்தார். இதனையடுத்து சிவபெருமானின் மாமியாரான காஞ்சனமாலா மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த தண்ணீர் தொட்டியில்  புனித நீராடினார்.

அந்த தொட்டியில் உள்ள தண்ணீரை அபிஷேகத்திற்காக கோயிலுக்குள் பயன்படுத்தபடுகிறது என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக, மேற்கு சித்திரை தெருவின் உள்ளே அமைந்திருந்த  அன்னகுளி மண்டபம் சந்து என்னை வெகுவாக கவர்ந்தது. உள்ளூர்காரர்களிடம் விசாரித்த போது, சில நூற்றாண்டுகளுக்கு முன் மன்னர் ஆட்சியின் போது ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் பகுதியாக இது இருந்தது என்றனர்.

இது போன்றே நேதாஜி சாலையை ஒட்டி , வடக்கு கோபுர தெருவுக்கு இணையாக மதர்கான் டபேதார் சந்து அமைந்துள்ளது. மதர்கான் டபேதாரை  பற்றி அதிக அளவிலான தகவல்கள் எதுவும் இல்லையெனினும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த ஒரு டபேதார். மேலும் இந்த நபர் குதிரை வீரனாகவும் இருந்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த தெருவுக்கு அந்த நபரின் பெயர் சூட்டப்பட்டதாக உள்ளூர்காரர்கள் கூறுகின்றனர்.

தெற்கு காவல் கூட தெரு என அழைக்கப்படும் மற்றொரு தெரு மர்மங்களை தாங்கி நிற்பது போலவே தோன்றுகிறது. அதற்கு ஏற்றாற்போல் இந்த தெருவினுள் மற்றும் தெருவினை சுற்றி இருக்கும் சிஆர்பிஎப், மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட காவல்துறை கட்டிடங்கள் அந்த மர்மங்களை அவிழ்ப்பதாக உள்ளன.இந்த தெரு கோயிலின் தெற்கு பகுதியில் காவல் துறையினரின் அலுவலகங்கள் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மதுரையை மையமாக கொண்ட ஆய்வாளர் மதுரையின் தெருப்பெயர்களை பற்றி ஆய்வு செய்து ஏ ஸ்டடி ஆன் ஸ்ட்ரீட் நேம்ஸ் ஆப் மதுரை என்ற நூலை எழுதியுள்ளார். 

Translation by John Moses.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com