Vernacular

ஓரினசேர்க்கை துணையை தேடும் மைசூரு வாலிபர்

Written by : TNM Staff

43 வயதான ஸ்ரீகாந்த் ராவ், தன்னை போன்றே உயரம், எடை , தோலின் நிறம், தலைமுடியின் கலர் கொண்ட நபரை தனது வாழ்க்கை துணையாக தான் தேடுவதாக தனது திருமண சுயவிவரக்குறிப்புகளில் கூறியுள்ளார்.

இதில் விசேஷம் என்னவெனில், ஸ்ரீகாந்த் தேடுவது தனது பாலினத்தை சேர்ந்தவரை தான். அதாவது தன்னை போன்றே ஒரு ஆணை தான் வாழ்க்கை துணையாக தேடுகின்றார்.கேரளாவை மையமாக செயல்படும் Queerala என்ற இணைய தளத்தில் தான் தனது சுயவிவரக்குறிப்புகளை ஸ்ரீகாந்த் பதிந்துள்ளார்.

மைசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஒரு மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ட்டாக வேலை பார்த்து வருபவர்.

“இந்தியாவில் இப்படி ஒருவரை கண்டறிவது மிகவும் கடினம். ஓரினசேர்க்கையாளராக இருப்பது இன்னும் கடினமானது.யார் ஓரினசேர்க்கையாளர் என்பதனை கண்டுபிடிப்பதும் கடினமான காரியம்” என நியூஸ்மினிட்டிடம் கூறினார் ஸ்ரீகாந்த்.

தனிப்பட்ட குழுவில் இருக்கும் அவருக்கு தெரிந்தவர்கள், இந்த Queerala இணையதளத்தில் தகவல்களை போடும்படி கூறியுள்ளனர்.அதன்படியே ஸ்ரீகாந்தும் போட்டுள்ளார்.

சட்டங்கள், ஓரினசேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவிக்க நெருக்கடி ஏற்படுத்தினாலும் கூட, நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை படுமோசமாக நடத்தும் சூழலே நிலவுகிறது.

ஆனால் ஸ்ரீகாந்த்தை பொறுத்தவரை, தனது பாலியல் விருப்பங்களை தனது நண்பர்களும், குடும்பத்தினரும் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுகிறார்.

அடுத்ததாக தனது துணையை தேடுபோது, வயது பிரச்சினையும் ஏற்படுகிறது. தனது வயதுக்கு ஒத்த நபரை கண்டுபிடிப்பதுவும் கூட இயலாத காரியம் என்கிறார் ஸ்ரீகாந்த்.

இந்த சுயவிவர குறிப்புகளை அந்த இணையதளத்தில் பதிந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்துக்கு பல்வேறு மட்டங்களிலும் இருந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும், தான் அந்த சுயவிவர குறிப்பை நம்பிக்கையற்று எடுக்க போவதில்லை என்கிறார்.” பல்வேறு சமூகத்தினரிடையே தொடர்பை உருவாக்கும் Queerala இணையதளத்தில் நான் எனது தகவல்களை பதிந்துள்ளேன். ஒருவகையில் பார்த்தால் ஹரீஷ் ஐயரின் தாயார் செய்ததை தான் நானும் செய்துள்ளேன்” என என்றார்.

Screenshot/Queerala

எந்தவகையான துணை வேண்டும் ? ஸ்ரீகாந்த் தனது விவர குறிப்பில் கூறியுள்ளதாவது,” நான் திருமணமாகாத 35 வயதுக்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட நபரை தேடுகிறேன்.அவர் ஓரினசேர்க்கைக்கு தயாரானவராக இருக்க வேண்டும். பொருளாதார சுதந்திரமிக்கவராக இருக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

From ‘strong support’ to ‘let’s debate it’: The shifting stance of RSS on reservations

7 years after TN teen was raped and dumped in a well, only one convicted

If Prajwal Revanna isn’t punished, he will do this again: Rape survivor’s sister speaks up

How Chandrababu Naidu’s Singapore vision for Amaravati has got him in a legal tangle

Reporter’s diary: Assam is better off than 2014, but can’t say the same for its citizens