Tamil

இன்சுலின் எடுக்காத டீன் ஏஜ் வாலிபர் பலி. தமிழகத்தில் தலைதூக்கும் போலி மருத்துவர்கள்

Written by : Divya Karthikeyan

திருப்பூரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது டீன் ஏஜ் வாலிபர் அக்கு பஞ்சர் மருத்துவர் ஒருவர் அறிவுரைப்படி இன்சுலின் எடுப்பதை நிறுத்தி கொண்டதால் சமீபத்தில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து, அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் நோயாளிகளை ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றிவருவது  வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.

தினசரி இரண்டு முறை இன்சுலின் ஊசியை குத்த வேண்டிய நிலையை தொந்தரவாக நினைத்த அந்த டீன் ஏஜ் வாலிபருக்கு கோயம்பத்தூர் அருகே ராம்நகரில் கிளினிக் நடத்தும் அந்த அக்குபஞ்சர் மருத்துவர் அறிமுகமாகியுள்ளார். டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அந்த டீன் ஏஜ் வாலிபர் இவரை சந்திக்கும் முன் தினசரி 4 தடவை அதற்கான இன்சுலின் ஊசியை எடுத்து வந்தார். அதனை தொடர்ந்து, பொதுவான பயிற்சியின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக இன்சுலின் அளவை படிப்படியாக குறைக்க துவங்கினார். இந்நிலையில், இரு நாட்களாக, அறவே ஊசி செலுத்தப்படாத நிலையில், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து விரைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதுகுறித்து அக்குபஞ்சர் முறையில் சிகிச்சையளிக்கும் பாலமுருகன், தனது சிகிச்சை முறை இதுவரை தவறி போனதில்லை என்றும், இது மட்டும் வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக அமைந்துவிட்டது எனவும் நியூஸ்மினிட்டிடம் கூறினார். “ இன்சுலின் மருந்தை படிப்படியாக குறைக்க நான் கூறவில்லை. அவர்கள் ஒரேயடியாக இன்சுலின் எடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் என நினைக்கிறேன். அக்குபஞ்சர் ஒரு நிரூபிக்கப்பட்ட மருத்துவ முறை. இதே வயதில் உள்ள எண்ணற்ற நோயாளிகள் எங்களிடம்  சிகிச்சை பெற்று நல்ல முறையில் உள்ளனர்.” என்றார் அவர். ஆனால் தனது இந்த கருத்துக்கு எந்த அனுபவ நிரூபணங்களும் இல்லை என ஒத்து கொள்கிறார் அவர்.

பாலமுருகனை நீங்கள்  ஒரு சிறிய போலி மருத்துவர் என கருதினால், ஒரு கல்வி நிறுவனமே, அக்கு பஞ்சர் பயிற்சி அளித்து அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்திய அக்குபஞ்சர் கல்வி நிறுவனம் “மருந்தில்லாமல் தொடு சிகிச்சை முறையை ‘ சொல்லி நோயாளிகளுக்கு அனைத்து வியாதிகளுக்கும் தீர்வாக இருக்கும் என கூறுகிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனரான மாகி ராமலிங்கம் செயற்கையாக உருவாக்கப்படும் இன்சுலின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பது என நம்புகிறார். “ பிரச்சினை என்னவென்றால், அது உங்கள் உள்ளுறுப்புகளை பாதிக்க செய்துவதுடன், கணையத்தையும் செயலிழக்க செய்யும். நாங்கள் செயற்கையான இன்சுலின் இல்லாமலேயே சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இன்சுலின் ஒரு விஷம்” என்றார் அவர்.

கோயம்பத்தூர், மேட்டுப்பாளையம்,சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இன்சுலின் எடுப்பதை நிறுத்தி கொண்ட நூற்றுக்கணக்கான நோயாளிகளை அவர் பார்த்துள்ளதாக கூறி கொண்டார்.

டாக்டர் பாலாஜி சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மாதுரி பாலாஜி கூறும் போது “ ஒரு சில உயிர்காக்கும் மருந்துகளில் முக்கியமான ஒன்றாக இன்சுலினும் உள்ளது. கடந்த பல வருடங்களாக, இது  மேம்படுத்தப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. பசுவின் கணையத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்சுலினிலிருந்து நாம் நீண்ட தூரம் வந்துவிட்டோம். இப்போது உடலின் இயற்கையான இன்சுலினுக்கு நிகரான புதுவகையான, தாவரங்களை அடிப்படையாக கொண்ட இன்சுலின்கள் வந்துவிட்டன. “ என்றார்.

உடல் உள்ளுறுப்புகளை அது பாதிக்க செய்யுமா என கேட்டபோது, அதனை அவர் மறுத்து பேசினார்.

அக்கு பஞ்சர் முறையில் சிகிச்சையளிப்பவர்கள் டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கும், டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மிக குறைந்த அளவிலே தெரிந்து வைத்துள்ளனர். “ அவர்கள் சிகிச்சையளித்து குணமடைந்ததாக கூறும் டீன் ஏஜ் வயதினர் டைப் 2 சர்க்கரை நோயாளிகளாக இருக்க கூடும். இன்சுலின் ஊசி இல்லாமலே டைப் 2 சர்க்கரை நோயாளிகள் பிழைத்திருக்க முடியும். ஆனால் அவர்களது சர்க்கரை அளவு அதிகமாகும்.” என விளக்கி கூறினார் மாதுரி பாலாஜி. ஆனால், இறந்து போன டைப் 1 வகை சர்க்கரை நோயாளியான அந்த டீன் ஏஜ் வாலிபர் இன்சுலின் எடுப்பதை நிறுத்தி கொண்டதால் தான், இறந்து போகும் அளவு அவருடைய நிலைமை சென்றுள்ளது.

இளம் நோயாளிகள், இன்சுலின் ஊசியை எடுப்பதை தவிர்த்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. “ நீண்டகாலமாக இன்சுலின் எடுக்கும் நோயாளிகள், தங்கள் டீன் ஏஜ் பருவத்தில் துரிதமாக இன்சுலினை நிறுத்துவதற்காக பிரச்சனை செய்கிறார்கள். இது அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் நெருக்கடியாக அமைந்து விடுகிறது. இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.” என்றார் பாலாஜி.

ஒரு வலுவான கட்டுப்படுத்தும் அமைப்பு  இல்லாமையால் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவர்கள் போடும் தூண்டிலில் எளிதில் சிக்கி மக்கள் ஏமாந்துவிடுகின்றனர்.

Being KC Venugopal: Rahul Gandhi's trusted lieutenant

SC rejects pleas for 100% verification of VVPAT slips

Mallikarjun Kharge’s Ism: An Ambedkarite manifesto for the Modi years

Political battles and opportunism: The trajectory of Shobha Karandlaje

Rajeev Chandrasekhar's affidavits: The riddle of wealth disclosure