Tamil

நயன்தாராவுக்கு சிறுவனின் முத்தம். சிறுவர்கள் பாலியல்மயமாக்கப்படுதலை ஏன் கண்டுகொள்ளாமல் விடுகிறோம் ?

Written by : Sowmya Rajendran

நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கும்போதெல்லாம் பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அச்சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியடையச் செய்துவிடுகின்றன. நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக  சில புள்ளிவிவரங்கள் எடுத்துக் கூறுகின்றன. கடந்த 2007 இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் 13 மாநிலங்களில் நடத்திய ஆய்வில் 57.3% சிறுவர்களும், 42.7 % பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அதிக அபாயகரமானது என பெண்களின் கல்வி மற்றும் வளர்ச்சி ரீதியான வாய்ப்புகளை வழங்க பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், பெண் குழந்தைகளுக்கு, அவர்களின் உடல் ரீதியாக அதிக பாதுகாப்பினை வழங்குகிறோம். ஆனால், ஆண் குழந்தைகளை பாலியல்மயப்படுத்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுடன், அதனை நகைச்சுவை அம்சமாக ஏற்றுக்கொள்கிறோம். சமீபத்தில் வெளிவந்த ‘திருநாள்’ என்ற தமிழ் படத்தில் நடிகை நயன்தாராவை ஆறு வயது சிறுவன், அவரது உதட்டில் முத்தமிடும் காட்சி இதற்கு ஒரு உதாரணம்.

யூடியூபில் வெளியாகியுள்ள குறிப்பிட்ட இந்த கட்சியின்  ‘ ஊப்ஸ் ! நயந்தாராவுக்கு இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்த அதிர்ஷ்டக்கார சிறுவன் | திருநாள் படக் காட்சி | நயனின் வாய் முத்தம்(‘Oops !!! Lucky School Boy Liplock with Hot Nayanthara | Thirunaal Movie scene | Nayan Mouth kiss’,)  

தலைப்பு மட்டுமல்லாது உள்ளடக்கம் கூட கீழ்த்தரமான ஒன்றாகஉள்ளது.இந்த காட்சியில் இயக்குனர் சரியாக என்ன சொல்ல முயல்கிறார் அந்த குழந்தையை வைத்து இந்தகாட்சியை செய்ய வைப்பதில் அப்படி என்ன வகையான நோக்கம் இருந்திருக்கக் கூடும் ?

இது போன்ற கேள்விகளைநாம் எழுப்பியாக வேண்டும்.ஏனென்றால்,அந்த ஆறு வயது சிறுவன் நயன்தாராவால் கவரப்பட்டதால்,அவருக்குமுத்தம் கொடுத்து,அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்றவகையில் அந்தக் காட்சி,நகைச்சுவையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் இதில் எந்த தவறும் இல்லை என்று கூற முடியாது.மேலும் அந்த குழந்தை பாலினமயமாதலுக்கு, குறிப்பிட்ட இந்தக் காட்சி மூலம் பலிகடாவாக்கப்பட்டுள்ளான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் இந்த காட்சியை செய்ய வைத்துள்ளதுடன், இந்தக் காட்சியை செய்ததால் ஒரு ‘ஹீரோ’ என்ற மனநிலையையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த முத்தக் காட்சி, இங்கு குறிப்பிட்டுள்ளதைப் போன்ற மீம்ஸ்கள் உருவாகவும் காரணமாக இருந்துள்ளது.

நயன்தாராவாக வடிவேலுவையும், குழந்தையாக அர்ஜுனையும் சித்தரித்துள்ள இந்த மீம்ஸில் நயன்தாரா குழந்தையிடம் “என்னப் பத்தி வெளியே யாருக்கிட்டயாச்சும் விசாரிச்சியா ?

“ எனக் குழந்தையை பார்த்து கேட்பது போன்றும், அதற்கு குழந்தை ‘ம்ம்ம்’ என ஒப்புக் கொள்வது போலவும், “விசாரிச்சுட்ட அதான் இந்த சேட்டை “ என நயன்தாரா கூறுவது போலவும் அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

சரி. இந்த இடத்தில், ஒரு சிறு பெண் குழந்தை சற்று வயதான ஆண் நடிகருக்கு இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நாம் எத்தகைய உணர்வுடன் அதை ஏற்றுக் கொள்வோம் ? அந்த காட்சியையும் கூட நாம் ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்வோமா ? ஆண் குழந்தையின் பாலின அடையாளம் அதன் வயதுக்கேற்ற முறையற்ற பாலியல்படுத்தப்பட்ட செயலுக்கு மதிப்பீடாக அமையவில்லை.இந்தக் காட்சியின் மூலம்,ஒரு ஆண்,அவர் எந்த வயதுடையவராக இருப்பினும் அவரது பாலியல் உணர்வை பெற்றுவிட முடியும் என்றும்,அதுவே ஒரு பெண்ணென்றால், அவர் எந்த வயதினராக இருந்தாலும், பாலியல் உணர்வுக்காக அந்த பெண்ணின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்ற நமது சமூகத்தில் நிலவி வரும் பொதுவான நம்பிக்கையை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

உண்மையை சொன்னால், ஆண் குழந்தைகளை பாலியல்படுத்துவதற்கு இந்த காட்சி மட்டுமல்லாது வேறு பல உதாரணங்களும் உள்ளன. இன்றைய ரியாலிட்டி ஷோக்களில் பெண் தொகுப்பாளினிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இளம் ஆண்களிடம் எந்த பெண் நடுவருக்கு முத்தம் கொடுக்க விருப்பம் என்றும், இரு பொருள் தரும் பாடல்களை பாடுவதற்கு காரணம் என்ன என்று கேட்பதும் கூட அடிக்கடி நிகழ்ந்து வருபவை. அந்த பங்கேற்பாளரின் பெற்றோர் மற்றும் குடும்ப உறவினர்களும் உள்ளடக்கிய பார்வையாளர்கள் இப்படி கேட்கப்படுவது முறையற்றது என்பதை கூட புரியாமல் கைதட்டி அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர். அதே வேளை, இது போன்ற கேள்விகளை, ஒரு ஆண் தொகுப்பாளர் ஒரு பெண் பங்கேற்பாளரிடம் கேட்டால் நாம் அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தில் இருப்போமா ?

சன்னி லியோன் ஒரு பள்ளிக் கூடத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட படத்தை வைத்து உருவாக்கப்பட்ட மற்றொரு மீம்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்குவது பொருத்தமற்றது என நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே,  குழந்தைகளுக்கு இன்னும் சொல்ல போனால் சிறுவர்களின் பாலியல் உணர்வுகளை வழக்கமான ஒன்றாக  எடுத்துக் கொள்கிறோம். அதோடு, அதனை மிகவும் கீழ்த்தரமான முறையில் நகைச்சுவை விவகாரமாக கணக்கில் கொள்கிறோம்.

From ‘strong support’ to ‘let’s debate it’: The shifting stance of RSS on reservations

When mothers kill their newborns: The role of postpartum psychosis in infanticide

Political manifestos ignore the labour class

‘No democracy if media keeps sitting on the lap’: Congress ad targets ‘Godi media’

Was Chamkila the voice of Dalits and the working class? Movie vs reality