Tamil

அலங்கார மீன்கள் வியாபாரம் அமோகமானாலும், வெள்ளபெருக்கு வேதனைகளை மறக்காத கொளத்தூர் மக்கள்

Written by : Divya Karthikeyan

கொளத்தூரின் பெரும்பாலான கடைக்காரர்கள் சற்று ஒய்வெடுக்க சென்ற நேரம். 50 வயதான தீன்தயாள் தனது கடையின் முன் வேகமாக தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். “ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் மாணவர்களிடம், ஆசியாவில் கலர் மீன் அதிகம் உற்பத்தியாகும் பகுதி எது ? என்ற பொதுஅறிவு கேள்வியை கேட்பர். வழக்கமாக மாணவர்களும் கொளத்தூர் என்ற பதிலை எழுதிவிடுவர். ஆனால் அது எங்கிருக்கிறது என அவர்களுக்கு தெரியாது. “என சோர்வடைந்தவராக கூறினார் அவர்.

திமுக பொருளாளர், ஸ்டாலினின் சொந்த தொகுதியாக இருக்கும் கொளத்தூர், பல வகை அலங்கார மீன்களையும், அவற்றை இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்து வரும் தொழிலை செய்துவரும் மக்கள் நிறைந்த பகுதி. மூர் மார்க்கெட் மூடப்பட்டதை தொடர்ந்தும், சில இறக்குமதி மீன் வகைகளை இனப்பெருக்கம் செய்து விற்கலாம் என்ற செய்தி முன்பு விவசாயம் செய்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் பரவியதை தொடர்ந்தும் இந்த வியாபாரம் அமோகமாக கொடிக்கட்டி பறக்க துவங்கியது.

பள்ளிக்கூட  சாலையில், அடுத்தடுத்து கடைகள் நீண்டு காணப்பட்டன. அவற்றில் சில வெற்றிகரமாக தொழில்கள் செய்யும் கடைகளாகவும், சில தற்காலிக டீக்கடைகளும், சில இழுத்து மூடப்பட்ட கடைகளாகவும் இருந்தன. “ சந்தை மாதிரியான வியாபாரத்தை தான் நாங்கள் உண்மையிலேயே விரும்புகிறோம். கொளத்தூரின் வளர்ச்சிக்கு அது முக்கிய தூணாக கருதப்படுகிறது. நாங்கள் இதை ஒரு பிரச்சினையாக விரைவிலேயே கொண்டு வருவோம். சந்தை வியாபாரத்தை அமல்படுத்துவது சம்பந்தமாக ஸ்டாலின் ஏதாவது எங்களுக்கு செய்ய வேண்டும்.” என்றார் தீன்தயாள்.

முன்னாள் புரசைவாக்கம், வில்லிவாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் கொளத்தூர் என்ற புதிய சட்டமன்ற தொகுதியாக ஆக்கப்பட்டு தனது முதல் தேர்தலை 2011 இல்  சந்தித்தது. அந்த தேர்தலில் அதிமுகவின் சைதை துரைசாமியை, திமுகவின் ஸ்டாலின் தோற்கடித்தார். ஸ்டாலின் வருடத்திற்கு 5 முதல் 7 முறை தனது தொகுதி பக்கம் வந்து செல்வதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் துரைசாமி இங்கு எட்டி கூட பார்ப்பதில்லை என்கிறார்கள்.

வியாபாரிகளுடையே அதிக அளவில் அதிமுக ஆதரவு மனநிலை காணப்படுகிறது. அரசின் பல திட்டங்களே அதற்கு காரணம். இதுகுறித்து உள்ளூர் மீன்வளர்ப்பு வல்லுனரும், இத்தொழில் பயிற்சியாளருமான ராஜராஜன் கூறுகையில் “ உண்மையில் மீன்வளர்ப்பு தொழில்களுக்கு பல நல்ல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். பல குடும்பங்களுக்கு  இந்த தொழில்  தங்கள் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. லோன்கள், உதவிகள் என முதல்வர் இந்த தொழிலை இன்னும் ஊக்குவிக்க முடியும்.” என்றார்.

கல்லூரி படிப்பை தற்போதே, முடித்து வெளிவந்திருக்கும் 23 வயதான மாணிக்கம், தனது நண்பர்களுடன் சற்று முன்தான்  தேர்தல் குறித்து விவாதித்ததாக கூறினார். “ எங்களுக்கு என்ன தேவை ? உள்ளூரில் வியாபாரங்களை நடத்தி செல்ல சில பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் அவற்றை அடிப்படையாக கொண்டு எங்கள் வாக்குகளை செலுத்துவோம்.” என கூறிய அவர், வேகமாகவே “ அதற்காக நான் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்க போகிறேன் என்பதல்ல இதன் பொருள். நாங்களே சுயமாக ஒரு முடிவு எடுப்போம் என்பது உங்களுக்கு தெரியும்.” என்றார்.

அதேவேளை, குடும்ப தலைவர் வீட்டில் உள்ள வாக்குகளே பிரிந்துவிட கூடும் என்பதற்காக ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்குகளை போட சொல்வார். அல்லது தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களித்து கொண்டிருப்பார்கள் என எங்கும் வியாபித்திருக்கும் மனோபாவத்தை சுட்டிகாட்டிய மாணிக்கம், தொடர்ந்து கூறுகையில், “ உண்மையில் எங்கள் தலைமுறை யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று, பெற்றோர் உட்பட பலருக்கும் சொல்கிறார்கள். அது கண்ணை மூடி கொண்டு பாரம்பரியமாக வாக்களிப்பது போன்று இல்லை.” என்றார்.

பள்ளிக்கூட ரோட்டிற்கு பின்புறமாக, குறுகிய சந்து ஒன்று கரடுமுரடான நிலப்பரப்பு ஒன்றிற்கு செல்கிறது. அதில் பள்ளங்கள் காணப்பட்டன. அதில் தொடர்ந்து முன்னேறி செல்ல செல்ல அதன் அகலமும், ஆழமும் கூடி கொண்டே சென்றது. அந்த சந்தானது, அதிக அளவில் குடியிருப்புகள் உள்ள ஒரு பகுதியை அடைந்தது. அதன் கடைசி வரிசையில் இருக்கும் குடிசைகள், சரிவர அமைக்கபடாமல், அதிகளவில் தண்ணீர் நிறைந்து காணப்படும் ஒரு சதுப்புநிலத்தையொட்டி அமைந்துள்ளது.

தினக்கூலிகளும், அலங்கார மீன் விற்பனை கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களும் அந்த கூரை வேயப்பட்ட குடிசைகள் அல்லது உடைந்து போன செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் காலனி என்று அதனை அழைக்கின்றனர். இவற்றில், கடந்த 12 ஆண்டுகளாக சுமார் 70 க்கும் அதிகமான வீடுகளுக்கு தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“நாங்கள் இருக்கும் இந்த நிலம்,முன்னர் ஏரியாக இருந்தது. அந்த ஏரியை நிரப்பி, அதனை விற்றார்கள். நாங்கள் இந்த நிலத்தில் வாழ்வதற்கு அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்.” என கூறுகிறார் அப்பகுதியை சேர்ந்த சாந்தி. 50 வயதான சாந்திக்கு, ஸ்டாலினின் செயலின்மை குறித்து அதிருப்தியோ அல்லது தவிப்போ ஏற்படவில்லை. “ அவர் தான் ரோடு போட்ட ரோட்டை சீரமைத்ததாக சொல்கிறார். ஆனால் இங்கே எங்களுக்கு ஒரு ரோடும் இல்லை” என்கிறார் 26 வயது பிரகாஷ்.

எட்டாம் வகுப்புடன் தனது கல்வியை இடைநிறுத்திய பிரகாஷ், அலங்கார மீன்களை பேக்கேஜ் செய்யும் வேலைக்கு செல்பவர். இடையிடையே தண்ணீர் தேங்கி நிற்பதால், அதனால் ஏற்படும் பாதிப்புகளால் உடல்நலம் இல்லாமல் போய்விடுகிறது என்றும் கூறுகிறார்.“மழையால் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் முறையாக வெளியே செல்லும் வகையில் ஒரு வடிகால் அமைப்பும் இங்கு உருவாக்கபடவில்லை. இப்போது அவர்களுக்கு இந்த நிலம் வேண்டும் என்று சொல்கிறார்கள்” என ஆதங்கத்துடன் கூறினார் அவர்.

டிசம்பர் மாத வெள்ளப்பெருக்கு அனைத்தையுமே மாற்றியிருந்தது. புதிதாக செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு அறை கொண்ட இரு வீடுகள் அங்கு அமைந்திருந்தன. அவற்றில் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் சதுப்புநிலத்தை நோக்கி நீட்டி கொண்டு இருந்தன. “ வாழ்க்கையில் நனவாகும் ஒரு கொடுங்கனவு” என புதிதாக திருமணமாகி அந்த காலனியில் வந்திருக்கும் விஜயா, இந்த பகுதியை பற்றி வருணிக்கிறார். குழந்தைகள் பள்ளி கூடத்திலிருந்து திரும்ப வந்தார்கள். அவர்களுடைய தாய்மார்கள் ,  பானைகளில்  தண்ணீரை எடுத்து உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக தெளித்தார்கள். அதனால் உருவாகும் சேற்றில் அவர்கள் கால்கள் முழுவதும் மூழ்கி, தடங்கள் உருவாகுவது அவர்களுக்கு பழக்கமாகி போனது.

“வெள்ளபெருக்கு ஏற்பட்ட காலத்தில் ஸ்டாலின் எங்களை பார்க்க வாரத்தில் குறைந்தது மூன்று தடவை வந்தார். எங்களுக்கு உணவு, உடை, தண்ணீர் கேன்கள் தந்தார். வேறு எந்த அரசியல் தலைவர்கள் இப்படி செய்வார்கள் ? துரைசாமி எதை பற்றியும் கண்டுகொள்ளவில்லை.” என விஜயா கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ இங்கு சுமார் 400 வாக்காளர்கள் இருக்கிறோம். எங்களுடைய வாக்கு யார் வெள்ளபெருக்கு காலத்தில் எங்களை அதிகம் கவனித்தார் என்பதை பொறுத்து கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் நரக வாழ்க்கை வாழ்ந்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. விரைவிலேயே பருவமழை வரபோகிறது. நாங்கள் எப்படிப்பட்ட புதிய நரக வாழ்க்கையை அனுபவிக்க போகிறோமோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் “ என்றார் அவர்.

பெண்கள் உட்பட இந்த பகுதியில் வசிப்பவர்கள் அதிமுக ஆதரவு மனநிலையில் உள்ளது போல் தெரியவில்லை. எவருமே இலவசங்களை மகிழ்வுடன் ஏற்று கொண்டதாகவும் தெரியவில்லை. “ இலவசங்கள் ஒரு மாதம் அல்லது அதிகமாக போனால் ஆறு மாதங்கள் வேலை செய்கின்றன. நாங்கள் அதை பழுது நீக்க அனுப்பினால், மீண்டும் அதே பிரச்சினை வந்துவிடுகிறது. குப்பையான ஒரு பொருளை கொடுத்து, நீங்கள் ஒரு அரசை நடத்தி கொண்டு சென்று விட முடியாது. நாங்கள் முட்டாள்கள் அல்ல.” என்று கூறினார் 63 வயதான பானு என்ற பெண். தொடர்ந்து பேசிய அவர், “ நாங்கள் அம்மாவை விட துர்காவை தான் அதிகம் விரும்புகிறோம். சுவரொட்டிகளில் இருப்பதைவிட, நேரடியாக ஒருவர் வருவது தான் எங்களை பொறுத்தவரை நல்லதாக கருதுகிறோம்” என கடந்த முறை ஸ்டாலினுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலினின் மனைவியை குறிப்பிட்டார் அவர்.

இருப்பினும் ஸ்டாலின் கூட அதிகமாக எதுவும் செய்துவிடவில்லை என தொடர்ந்து கூறினார் அவர்.” எனது வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் வந்துவிடவில்லை. இருப்பினும், பாரம்பரியமாக, எனது பாட்டி, அம்மா என திமுகவுக்கு தான் வாக்களித்து வருகிறோம். அவர்கள் எங்கள் மறுவாழ்வுக்கு எதுவும் செய்யவில்லை என்றால்கூட அவர்களுக்கு தான் வாக்களிப்போம்.” என்றார்.

இதனிடையே அவருடைய பேச்சை குறுக்கிட்டு பேசிய புவனேஸ்வரி “ நாங்கள் அவருடைய முகத்தை பார்த்தோம். அவர் கொடுத்த கலர் டிவி தற்போதும் வேலை செய்கிறது. அது எங்களுக்கு போதுமானது.” என்றார்.

Being KC Venugopal: Rahul Gandhi's trusted lieutenant

SC rejects pleas for 100% verification of VVPAT slips

Mallikarjun Kharge’s Ism: An Ambedkarite manifesto for the Modi years

Political battles and opportunism: The trajectory of Shobha Karandlaje

Rajeev Chandrasekhar's affidavits: The riddle of wealth disclosure