டீக்கு பதில் மோர். கேரளாவில் பிரச்சார உத்தியை மாற்றி அமைக்கும் பிஜெபி 
Tamil

டீக்கு பதில் மோர். கேரளாவில் பிரச்சார உத்தியை மாற்றி அமைக்கும் பிஜெபி

இந்த நிகழ்ச்சியானது பிரதமர் நரேந்திர மோடி ‘ சாய் பீ சர்ச்சா ‘ (தேநீருடன் உரையாடல்) என்ற நிகழ்ச்சியின் கேரளா வடிவம் தான் என்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர்

Written by : Shilpa Nair

கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை வாக்காளர்களை கவரும் வகையில் பிஜெபியினர் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். அவற்றில் முக்கியமாக ஒன்றாக,  “சம்பார சம்வாதம்” ( மோர் குடித்தபடி உரையாடல்) என்ற நிகழ்ச்சியை அக்கட்சியினர்  நடத்தி வருகின்றனர்.

இதன்படி, அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் மோர் கோப்பையுடன் பொதுமக்கள் மத்தியில் உரையாடலுக்காக கலந்து கொள்வர்.  பெங்களூருவை மையமாக செயல்படும் “ நான் கும்மனத்திற்கு ஆதரவளிக்கிறேன் “ என்ற பெயரில் இயங்கும் குழு  இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த குழுவானது  பெங்களூருவில் வசிக்கும் அக்கட்சியின் கேரளாவை சேர்ந்த உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. கும்மனம் ராஜேந்திரன் தற்போது  கேரளா மாநில பிஜெபியின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான பினு பத்மம், இந்த நிகழ்ச்சியானது பிரதமர் நரேந்திர மோடி ‘ சாய் பீ சர்ச்சா ‘ (தேநீருடன் உரையாடல்) என்ற  நிகழ்ச்சியின் கேரளா வடிவம் தான் என்கிறார். “ நான் நரேந்திரமோடியை ஆதரிக்கிறேன்” என்ற நிகழ்ச்சி இங்கு “ நான் கும்மனத்தை ஆதரிக்கிறேன்” என மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2014 இல் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்ட போது, கேரளாவில் பல இடங்களிலும் அது  கைகொடுத்ததாக இந்த அமைப்பின் பல உறுப்பினர்களும் பெருமையுடன் கூறி கொள்கின்றனர்.

இந்த பிரச்சாரத்தை பிஜெபியின் மங்களூரு எம்.பி நளின் குமார் கதீல், ஆறன்முழா தொகுதியில் துவக்கி வைத்தார். அனுராக் சிங் தாக்கூர், மீனாக்ஷி லேகி உள்ளிட்ட அக்கட்சியின் தேசிய தலைவர்களை கொண்டு இது போன்று நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய ஊடக தலைவர் நுபுர் சர்மா, இதன் அடுத்தக்கட்ட நிகழ்ச்சியை கோழிக்கோடு, வடகரை, கூத்துபறம்பு உள்ளிட்ட பகுதிகளில் துவக்கி வைக்க உள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி  மற்றும் விகே சிங் உள்ளிட்டோரை அடுத்த கட்டத்தில் இது போன்ற பிரச்சாரத்திற்கு அழைக்க அதன் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இளைஞர்களிடம் செல்வாக்குமிக்க தலைவர்களை அழைக்க இந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர். “ இந்த தலைவர்களை கேரளாவிற்கு பிராச்சாரம் செய்ய அழைக்க எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. இந்த தேசிய தலைவர்கள் எங்கள் சில மாநில தலைவர்களை விட எளிதில் அணுகத்தக்க நிலையில் இருப்பவர்கள். இருப்பினும், மாநில தலைவர்கள் எங்களுக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்த முழு ஆதரவு தருகின்றனர்.” என்றார் பினு.

“ நரேந்திர மோடி தலைமையில் ஏற்படும் வளர்ச்சியை குறித்து எங்கள் தலைவர்கள் பேச வேண்டும் என்றும், மத்திய அரசு நடைமுறைபடுத்தும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பற்றி கேரளா வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். முக்கிய ஊடகங்கள் இந்த வளர்ச்சி திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க  கவனம் செலுத்துவதில்லை.” என்றார் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஜினீஸ்.

இதற்காக, இந்த குழுவினர் ஒரு இணையதளத்தையும் உருவாக்கியுள்ளனர். அதில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளனர். “ இந்த இணையதளமானது, தேர்தலை மட்டும் மனதில் கொள்ளாமல், மத்திய அரசின் சாதனைகளை வெளியிடுவதற்கான நீண்டகால திட்டத்துடன் துவங்கப்பட்டுள்ளதாக  கூறுகிறார் ஜினீஸ்.

கடந்த 11 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வரும் ஜினீஸ் ஏன் பிஜெபியை ஆதரிக்கிறார் என கேட்டபோது “ கேரளாவில் வேலை வாய்ப்பு இல்லாததால் நான் ஒருபோதும் அங்கு திரும்பி செல்லவில்லை. நிறைய இளைஞர்களின் நிலையும் இதுதான். அந்த வளர்ச்சியை கொண்டுவர மூன்றாவது ஒரு அரசியல் சக்தி கேரளாவிற்கு தேவைபடுகிறது. அது பாரதீய ஜனதாவால் தான் முடியும்.” என்றார்.

பினுவும் இதே போன்றதொரு கருத்தையே கூறினார். “ அரசு வேலையை தாண்டி கேரளாவில் எதுவும் இல்லை. கேரளா மக்களுக்கு எது உண்மையான வளர்ச்சி என்று கூட தெரியவில்லை. பிஜெபி ஆட்சிக்கு வரும்போது அதனை கேரள மக்கள் புரிந்து கொள்வார்கள்.” என்றார் அவர்.

பிஜெபியின் கேரள மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாக ஜினீஸ் கூறுகிறார்.” நாங்கள் பல்வேறு சமூக வலைத்தள பிரச்சாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்கினோம். அவர் மோசமான பதிவுகள் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறினார்.” என்றார் ஜினீஸ்.

News, views and interviews- Follow our election coverage.