காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், தேர்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தவில்லை என குற்றச்சாட்டு

Tamil TN 2016 Monday, May 16, 2016 - 14:19

தமிழ்நாடு 2016 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவில் மும்முரமாக  ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குகளுக்காக வழங்கப்படும் இலஞ்சம் அதிகரித்திருப்பது பலரையும் விழி பிதுங்க வைத்துள்ளது.

மேய் 16 அன்று காலை, காங்கிரஸ் தலைவர் பா. சிதம்பரம், வாக்குகளை பெற அதிமுகவினர்  பணம் கொடுத்ததாகவும், அதனை தேர்தல் ஆணையம்  கண்டு கொள்ளவில்லை எனவும் கடுமையாக விமர்சித்தார். ஆளுங்கட்சியினர், ஏராளமான பணத்தை விநியோகித்தது ரகசியமானது ஒன்றும் அல்ல என்றும், தேர்தல் ஆணையம், அந்த பண விநியோகத்தை தடுத்து நிறுத்த தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டினார் அவர்.

திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில் ,” தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் திருபதிகரமாகவே இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில் பண விநியோகம் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் பணம் கைப்பற்றும் நிகழ்வுகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையம் பணம் கைப்பற்றப்பட்டவர்கள் மீது தக்க நடடிக்கை எடுக்குமா ? “ என கூறியிருந்தார்.

வாக்குக்கு பணம் கொடுக்கும் அதிமுகவின் நடவடிக்கையை முக ஸ்டாலினும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ எந்த பணமும், மக்கள் மனதில் இருக்கும் அதிமுகவுக்கு எதிரான மனநிலையை அகற்ற உதவாது.” என்றார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், அரசியல் கட்சிகள், தேர்தல் நெருங்கும்போது தேர்தல் ஆணையத்தின் கடுமையான சோதனைகளை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே  தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்பே பணம் விநியோகத்தை துவங்கிவிடுகின்றன. இதனை தடுக்க தேர்தல் ஆணையம்   நீண்ட நாட்களுக்கு முன்பே சோதனையை துவங்க வேண்டும் என்றார்.

மேய் 15 அன்று தேர்தல் ஆணையம் தஞ்சாவூர் தொகுதியில், வாக்குபதிவை மேய் 23 க்கு மாற்றி வைப்பதாக அறிவித்த பின் தான் வாக்கிற்கு பணம் கொடுக்கும் இந்த பிரச்சினை, அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதற்கான அறிவிப்பில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டதாவது  “ தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதமான கண்காணிப்பு முயற்சிகளையும் மீறி இந்த தொகுதியில், வாக்காளர்களுக்கு 6 கோடி ரூபாய் அளவிலான பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது “ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கை கூறுகையில்”  தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் இத்தொகுதியில் 21 லட்சம் ரூபாய் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிடிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரிய விஷயம் “ என்றும் கூறுகிறது.

திமுக பொருளாளர் ஸ்டாலின், ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே நகர் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும், அதிமுக தோல்வியடையவே வாய்ப்புகள் உள்ளன என கூறினார். இரு தொகுதிகளில் தேர்தல் மாற்றி வைக்கப்பட்டது குறித்து கேட்டபோது, தேர்தல் ஆணையம், இந்த இரு தொகுதிகள் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளிலும் பண விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பண விநியோகம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.