டெலிகிராம் செயலியின் ‘ரகசிய உரையாடல்’ஆப்ஷனை தேர்வு செய்து அதன்மூலம் அனுப்பப்படும் செய்தியினை எளிதில் அழித்து விட முடியும்

Tamil Radicalisation Wednesday, July 13, 2016 - 13:46

கேரளாவில் 21 முஸ்லீம் இளைஞர்கள் காணாமல் போன விவகாரத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காணாமல் போன இளைஞர்கள், ‘டெலகிராம் செயலியில்’ உள்ள ரகசிய தேர்வின் மூலம் சேட் செய்த விபரம் வெளியாகியுள்ளது. இதனால், பரிமாறப்பட்ட தகவல் என்ன என்பதை பெற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

காசர்கோடு மாவட்டத்திலிருந்து காணாமல் போன சிலரின் குடும்பத்தினர் இதுகுறித்து கூறுகையில், தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் ‘பொருத்தமான ஷரியத் நாட்டை’ தேடி செல்லப் போவதாக டெலகிராம் செயலி மூலம் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த செயலியானது, ரகசிய உரையாடலுக்கான தேர்வையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை பயன்படுத்தி செய்யப்படும் உரையாடல்களை, தேவை முடிந்த பின், தாமாகவே அழித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

காணாமால் போனதாக கூறப்படும் இளைஞர்களில் குடும்பத்தினர் பலருக்கும் தாங்கள் ஷரியா நாடு ஒன்றில் இருப்பதாக கூறி செய்திகளை அந்த இளைஞர்கள் அனுப்பியுள்ளனர். இத்தகைய செய்திகளை டெலிகிராமில் உள்ள ‘ரகசிய உரையாடல்’ ஆப்ஷன் மூலமாகவே காசர்கோட்டை சேர்ந்த இளைஞர்கள் ஹபீசுதீன், இஜாஸ்,ஷிகாஸ்,ரஷீத் ஆகிய இளைஞர்கள் அனுப்பியுள்ளனர். “ அனுப்பட்ட செய்தி வந்தது. அதன் பிறகு சில மணித்துளிகளில் அந்த செய்தி தானாகவே அழிந்து போனது “ என ஹபீஸின் தந்தை ஹக்கீம் நியூஸ் மினிட்டிடம் கூறினார்.

இந்த செயலியை தங்கள் குடும்பத்தினரிடம் டவுண்லோடு செய்யுமாறு கூறி பின்னர் அதில் இந்த தகவல்களை அவர்கள் அனுப்பியதாக கூறுகிறார் காணாமல் போன மற்றொரு வாலிபரான இஜாஸின் உறவினர் முஜீப்.

காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ஹஃபீசுதீன், இஜாஸ் ஆகியோருடன்  மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 19 பேர் பல்வேறு சூழல்களில் வெவ்வேறு காரணங்களுக்காக காணாமல் போனதாக கூறப்படுகிறது. சிலர் தங்கள் குடும்பத்தினரிடம் இலங்கைக்கு போவதாக கூறியும், மற்றும் சிலர் லட்சத் தீவுக்கு செல்வதாக கூறியும் சென்றுள்ளனர்.

அவர்கள் காணாமல் போய் ஒரு மாதம் கடந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினர் இத்தகைய செய்திகளை இந்த செயலி மூலம் பெற்றுள்ளனர். இதன் மூலம், அவர்கள் அனைவரும் ஒரே இடத்தை சென்று சேர்ந்திருக்க கூடும் என்று போலீசாரும், குடும்பத்தினரும் முடிவுக்கு வர காரணமாக அமைந்துள்ளது.

இதனிடையே, காணாமல் போனவர்களுக்கும், ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்குமிடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என கேரள போலீசாரும், மத்திய உளவு அமைப்புகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.