முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்தது

Tamil Saturday, May 28, 2016 - 16:26

நீண்ட இழுபறிக்கு பின் புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, முதல்வர் ஆவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில்,புதுவை காங்கிரஸ் கட்சியில் இழுபறி ஏற்பட துவங்கியது. முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் மற்றும் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில், மொத்தம் உள்ள 15 எம்.எல்.ஏக்களில் 10 பேர் நாராயணசாமியை ஆதரித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த புதன்கிழமை, நமச்சிவாயமும், நாராயணசாமியும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று நாராயணசாமி முதல்வராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.