வாக்கு எண்ணும் நாளில் தமிழ் செய்தி சேனல்களை விரும்பி பார்த்த சென்னைவாசிகள்

ஆங்கில செய்தி சந்தையில், டைம்ஸ் நவ், இந்தியா முழுவதுமிருந்து 2.5 லட்சம் இம்பிரசன்ஸ்களை பெற்று முதலிடத்தில் இருந்தது.
வாக்கு எண்ணும் நாளில் தமிழ் செய்தி சேனல்களை விரும்பி பார்த்த சென்னைவாசிகள்
வாக்கு எண்ணும் நாளில் தமிழ் செய்தி சேனல்களை விரும்பி பார்த்த சென்னைவாசிகள்
Written by:

தமிழகம் மற்றும் கேரளா மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த மேய் 19 அன்று ஆங்கில டிவி செய்தி சேனல்களின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், அரசியல் விமர்சகர்களும் காலையிலிருந்தே மிகவும் பரபரப்பாக இருந்து கொண்டிருந்தனர்.

தாங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பு சரியாக இருக்குமா என்ற ஆவலுடன் காரசாரமான விவாதங்களை நடத்தி கொண்டிருந்தனர்.

ஆனால், இந்த ஆங்கில ஊடகங்களின் காரசாரமான  விவாதங்களை எத்தனை பேர் பார்த்தார்கள் ? தமிழக, கேரள மக்கள் உண்மையிலேயே இந்த ஆங்கில ஊடக செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களா ? என்பது தான் சுவாரசியமான விஷயமாக தற்போது உள்ளது.

இதுகுறித்து, ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு குழு நியூஸ் மினிட்டிற்கு அளித்த தரவுகளின் படி பார்த்தால், சென்னைவாசிகள் ஆங்கில சேனல்களை விட தமிழ் சேனல்களையே அதிகம் பார்த்துள்ளனர்.

மேய் 19 அன்று டைம்ஸ் நவ், இந்தியா டுடே டெலிவிஷன், என்.டி.டி.வி 24X7 , சிஎன்என்-நியூஸ்18, நியூஸ் எக்ஸ், நியூஸ் 9 மற்றும் பிபிசி உலக சேனல் உள்ளிட்ட அனைத்து ஆங்கில சேனல்களையும் சேர்த்து மொத்தமாக 2.2 லட்சம் இம்பிரசன்ஸ் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில், சன் நியூஸ், செய்திகள், புதிய தலைமுறை, தந்தி டிவி, பாலிமர் செய்திகள், ஜெயா ப்ளஸ், நியூஸ் 7 தமிழ், சத்தியம் மற்றும் ராஜ் செய்திகள் உட்பட உள்ள அனைத்து தமிழ் சானல்களும் சேர்த்து 13 மில்லியன் இம்பிரசன்ஸ்களை பெற்றுள்ளன.

ஆங்கில செய்தி சேனல்கள், சென்னைவாசிகளுக்கு தெளிவான தேர்வாக இல்லையென்றாலும்,  ஆங்கில செய்தி சந்தையில், டைம்ஸ் நவ், இந்தியா முழுவதுமிருந்து 2.5 லட்சம் இம்பிரசன்ஸ்களை பெற்று முதலிடத்தில் இருந்தது.

சிஎன்என்-நியூஸ்18 செய்தி சேனல் 0.87 லட்சம் பார்வைகளை பெற்று இரண்டாமிடத்திலும், இந்தியா டுடே 0.62 லட்சம் இம்பிரசன்ஸ்களை பெற்று மூன்றாமிடத்திலும் இருந்தது.

என்.டி.டி.வி சேனல் 0.42 லட்சம் பார்வைகளையும், நியூஸ் எக்ஸ் 0.16 லட்சம் பார்வைகளையும், பெங்களூருவை மையமாக கொண்ட நியூஸ்9 சேனல் 0.15 லட்சம் இம்பிரசன்ஸ்களை பெற்றுள்ளன.

அதற்கு முந்தைய வியாழக்கிழமையை ஒப்பிடும்போது ஆங்கில செய்தி சேனல்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்திருந்தது.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com