தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சந்தேகம் – வெளியிட்ட டிவி தொகுப்பாளர்கள் ட்வீட்

திமுகவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கருத்து கணிப்பு முடிவையொட்டியே சந்தேகம் அதிக அளவில் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சந்தேகம் – வெளியிட்ட டிவி தொகுப்பாளர்கள் ட்வீட்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சந்தேகம் – வெளியிட்ட டிவி தொகுப்பாளர்கள் ட்வீட்
Written by:

தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 19 ஆம் தேதியன்று வெளிவருகிறது. இந்நிலையில், தேர்தல் நடந்த மேய் 16 மாலையில் வெளிவந்த பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து டிவிட்டர்வாசிகள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

இந்த கருத்துகணிப்புகளில் 3 திமுக வெற்றி பெறும் எனவும், ஒன்று தொங்கு சட்டசபை உருவாகலாம் எனவும் மற்றொன்று அதிமுக வெற்றி பெறும் எனவும் கணித்து கூறியிருந்தன.

இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பை தொகுத்து ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், திமுக வெற்றி பெறும் என்ற தங்களது சர்வேக்களின் மீது தங்கள் சந்தேகத்தை தெரிவித்ததோடு, அதிமுக வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, இந்தியா டுடேவை சேர்ந்த, ராஜ்தீப் சர்தேசாய் டிவிட்டரில் கூறுகையில், “ ஆக்சிஸ் மை இந்தியா எடுத்துள்ள ஒரு கருத்து கணிப்பு தவறாக போய்விடுமோ என பயப்படுகிறேன். ஆனால், அது எந்த மாநிலம் என கேட்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “ அம்மாவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மேய் 19 வரை காத்திருப்போம்” என மற்றொரு டிவிட்டரில்கருத்து கூறியுள்ளார்.

சிஎன்என் – நியூஸ் 18  ன் புபேந்திர ஸௌபேயும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட கூடும் என கருத்து தெரிவித்துள்ளார். “ உற்சாகமிக்க தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு. ஒரு மாநிலம் மட்டும் தவறாக போக கூடும் என நினைக்கிறேன். அது எந்த மாநிலம் என பார்ப்போம். “ என டிவிட்டரில் கூறியுள்ளார். மேலும், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ட்ரென்ட்கள் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், ஆனால், தமிழ்நாட்டை யாராலுமே சரியாக கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ள அவர், இந்த தேர்தல், விவாதிக்க பிரச்சினைகளே இல்லாத தேர்தலாக இருந்ததா ? என கேட்டுள்ளார்.

அரசியல் விமர்சகரான சுமந்த் ராமனும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெறும் குழப்பத்தை கூட்டும் ஒன்றாக இருந்ததாகவே கூறுகிறார். வாக்கு விகித அளவுகள் கூறாமல், இந்த ஆய்வு ஒரு குறுகிய வட்டத்தில் நின்றதாக கூறுகிறார்.

பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாது, வேறு சில அரசியல் விமர்சகர்களும், கருத்து கணிப்புகள் கூறிய தொகுதிகளின் எண்ணங்களை சந்தேகத்துடனேயே கூறுகின்றனர்.அவர்களில் பலரும், மக்கள் நல கூட்டணி மற்றும் பாமக போன்ற மூன்றாவது அணியின் வாக்கு சதவிகிதங்களை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். மேலும் திமுகவுக்கு கிடைக்கும் என அவர்கள் கூறும் வாக்கு சதவீதம் மிகவும் அதிகமாக உள்ளது என கூறுகின்றனர். அனைத்து சர்வேக்களின் அடிப்படையிலும், போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் என தெரிந்தாலும், அவற்றில் கூறப்படும், தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசப்பட வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

தந்தி டிவியின் தேர்தலுக்கு முந்தைய கணிப்பை வைத்து பார்த்தால், இது கடும் போட்டியுள்ள தேர்தலாக இருந்துள்ளது. அதிமுகவுக்கு 102 சீட்டுகளும், திமுக கூட்டணிக்கு 72 சீட்டுகளும், பாமகவுக்கு 1 தொகுதியும், 52 தொகுதிகளில் கடும் போட்டியும் இருக்கும் என தந்திடிவி கூறியிருந்தது.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com