குழந்தைகளுடன் பொழுது போக்க விரும்பும் மூத்தோர்கள்

குழந்தைகளுடன் பொழுது போக்க விரும்பும் மூத்தோர்கள்
குழந்தைகளுடன் பொழுது போக்க விரும்பும் மூத்தோர்கள்
Written by:

59 வயது நிறைவடைந்த, இரு பெண்களின் தாயான, விஜயலட்சுமியை நோக்கி பலரும் அடிக்கடி கேட்கும் கேள்வி ஏன் நீங்கள் உங்கள் மகள்களுடன் வாழகூடாது என்பது தான். அவரது ஒரு மகளின் வீடு பெங்களூருவில் தற்போது இவர் வசிக்கும் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது.

தற்போது வேகமாக அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கையில் விஜயலட்சுமியும் ஒருவராக மாறி வருகிறார். ஆனால் தனது பேர குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும் ஒரு முழு நேர குழந்தை பராமரிப்பாளராக இருக்க அவருக்கு விருப்பம் இல்லை. விஜயலட்சுமி வீட்டு விவகாரங்களை கவனிக்கும்போது, அவரது கணவர் பாதுகாப்பு துறையில் தனது 32 வருட சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றாலும், இப்போதும் தனது நேரத்தை பயணங்களில் செலவழிக்கிறார். என்ஜினீயராக வேலை பார்த்த அவரது மூத்த மகள் திவ்யா, மூன்று வருடங்களுக்கு முன் தனக்கு ஒரு மகன் பிறந்ததுடன் வேலையிலிருந்து  நின்றுவிட்டு தனது குழந்தையை பராமரித்து வருகிறார்.

“ நான் தன்னந்தனியாக வாழலாம் என நினைக்கிறேன். நானும் எனது மகள் திவ்யாவும் ஒரே நகரத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனாலேயே பலரும் என்னிடம் ஏன் நீங்கள் உங்கள் மகளுடன் வாழ கூடாது ? உங்கள் பேரனை வளர்க்க நீங்கள் அவளுக்கு உதவலாமே என கேட்கின்றனர். “ என்கிறார் விஜயலட்சுமி.

கேரளாவில் உள்ள ஒரு வைதீக குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமி, ஒரு ஆசிரியராக வேலை பார்த்தவர். தனக்கு, கணவன்- பிள்ளைகள் என குடும்பம் ஆனதும் தனது வேலையை விட்டு நின்றார். தனது கணவருக்கு இடமாற்றம் கிடைக்கும் போதெல்லாம் இவரும் அவருடன் சென்றார். “ எனது பெற்றோர் அல்லது எனது கணவரின் பெற்றோரின் உதவியோ இல்லாமல் தான்  அன்று எங்கள் குழந்தைகளை நான் வளர்த்தேன்.கணவரின் ஒற்றை வருமானத்தை நம்பி தான் நாங்கள் எங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தோம். இப்போது குழந்தைகள் அவர்களது வாழ்க்கையை அவர்களாகவே கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிறார் விஜயலட்சுமி.

அவரது உறவினர்களும், நண்பர்களும் அடிக்கடி தேவையற்ற அறிவுரையுடன் வருவதாக விஜயலட்சுமி கூறுகிறார்.” அவர்கள் என்னிடம் நான் என் மகளுடன் போய் தங்கியிருந்தால் பேரனையும் பராமரிக்க முடியும். கூடவே, என் மகளும் வேலைக்கு செல்ல முடியும். இதனால் எனது மகளுடைய கல்வி வீணாவதையும், வீண் செலவுகளையும் தடுக்க முடியும் என கூறுகின்றனர்” என்றார்.

ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய பின், ஒரு குறிப்பட்ட வயதை குழந்தைகள் அடைந்த பின் அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை உண்டு. அவர்களிடம் போய் அதை செய், இதை செய் என கட்டாயப்படுத்துவோ, அவர்கள் விவகாரங்களில் தலையிடுவதோ இருவருக்குமே நன்றாக இருக்கபோவதில்லை என்பதே விஜயலட்சுமியின் நிலைப்பாடு.

விஜயலட்சுமியின் மகளான திவ்யா கூறுகையில் “ தாத்தா- பாட்டிக்கள் தங்களது குழந்தைள் தங்களது வாழ்க்கை பயணத்தில்  சந்திக்கும் அழகினையும், வெற்றியையும்,தோல்வியையும், நெருக்கடியையும் கவனிப்பதில் மகிழ்ச்சியடைய வேண்டும்.அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு தாதியை போன்று இருக்க கூடாது. என்கிறார்.

பல குடும்பங்களில், பாட்டி- தாத்தாக்கள், குறிப்பாக அவர்கள் ஓய்வு பெற்ற பின் பேரகுழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்பது ஒரு கடமையாக பார்க்கப்படுகிறது. வயதானவர்கள் இருக்கும் போது, குழந்தைகளை பராமரிக்க வேறு ஆளை தேர்வு செய்வது ஒவ்வாத காரியமாக கருதி, குழந்தை பராமரிப்பு வேலையை வயது முதிர்ந்தவர்களிடமே விட்டு விடுகின்றனர்.

இதனை சிலர் ஒரு தேவையான உதவி முறையாக கருதினாலும், குழந்தைகளை பாதுகாப்பானவர் கையில் ஒப்படைத்துள்ளோம் என நினைக்கும் தம்பதியினர் தங்கள் பெற்றோரையே இதிலும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

“ எனக்கு குழந்தை பிறந்த முதல் வருடம் என் அம்மா என்னுடன் தங்கி இருந்தனர். அப்போது எனது அப்பா அங்குமிங்கும் சுற்றி கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர்கள் வருடத்தில் சில மாதங்கள் என்னுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.நான் இதனை வெறுத்தேன். பின்னர் அவர்கள் தங்களது வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும், தங்கள் சொந்த இடத்தில் வசிக்க வேண்டும் என்பதை நான் பின்னர் புரிந்து கொண்டேன்” என்கிறார் ஊடகத்துறையில் பணிபுரியும் சங்கீதா.

டெல்லியை சேர்ந்த மஞ்சு காட்சே “ நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கும், பேரகுழந்தைகளுக்கும் 24 மணிநேரமும் தேவையான உதவிக்கு தயாராகவே இருக்கிறோம்..ஆனால் தொந்தரவு செய்யும் வகையில்  எப்போதும் அல்ல “ என்கிறார்.

Manju Khadse (left) 

52 வயதான ஒரு உள் வடிவமைப்பாளராக வேலை செய்யும் இவரும்  இரு பெண்களுக்கு தாயாகவும் 9 மாத குழந்தைக்கு பாட்டியாகவும் உள்ளார்.

நான் எனது பேரகுழந்தைகளுக்கு நேரத்தை  பயனுள்ள வகையில் செலவிடவே விரும்புகிறேன்.” தொடர்ந்து அவர் கூறுகையில் “ நாங்கள் வயதாகி கொண்டே செல்கிறோம். இதனால் பேர குழந்தைகளை கவனிப்பது என்பது சுலபமாக இருக்கபோவதில்லை. அது போன்றே எங்களுக்கு என்றும் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் மற்றும் பொழுதுபோக்குகள் உள்ளன. அவற்றிற்கும் எங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது” என கூறுகிறார்.

விஜயலட்சுமியும் இதே எண்ணத்தை தான் பிரதிபலிக்கிறார். “ எங்கள் கதவுகள் எப்போதுமே அவர்களுக்காக திறந்து இருக்கும், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டியது முக்கியம்”. அவரை பொறுத்தவரை ஒவ்வொரு சூழலும் தனித்தன்மைமிக்கவை அவற்றை பொதுமைபடுத்த கூடாது.” நான்  தங்களது சொத்துக்களை விற்று விட்டு தங்களது பிள்ளைகளுடன் தங்கள் ஓய்வுக்கு பின்னர் சென்று வசிக்கும் எனது நண்பர்கள் பலரை பார்த்துள்ளேன். அடுத்த சில வருடங்களில் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே சென்று விட கேட்டு கொள்வதையும் கவனித்திருக்கிறேன். சிலருக்கு உண்மையிலேயே மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிரச்சினை இருக்கும். பெற்றோர்கள் அத்தகைய சிக்கலான நேரங்களில் உதவவே செல்கின்றனர்.” என்கிறார். மேலும், தொழில்நுட்பம் இன்று நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. எவரையும் எளிதில் தொடர்பு கொண்டுவிட முடியும். அதனால் பிள்ளைகளிடம்  போய் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. “ என கூறுகிறார்.

பெரும்பாலான இளம்பெற்றோர்கள் தங்கள் பொறுப்புகளை தாங்களே நிர்வகிக்க விரும்புகிறார்கள். “ நான் எனது தாயிடமிருந்து எந்த உதவியும் பெற விரும்பவில்லை. நான் எப்போதுமே எனது பெற்றோரை துணி துவைத்தல், குளிக்க வைத்தல் போன்ற குழந்தைதனமான வேலைகளை செய்ய சொல்லுவதில்லை. அதை செய்வது எனது கடமை. நான் வர்களிடம் கேட்பது பேரகுழந்தைகளுடன் விளையாடவும், சந்தோஷமாக நேரத்தை போக்கவுமே..” என்கிறார் பெங்களூரை சேர்ந்த சுதர்சனா ஆசிஸ்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com