எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுக்காக போராடிய இரு பெண்களை சந்தித்த 1989 சட்டமன்ற தேர்தல்

அதிமுகவை யார் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்ற யுத்தம் எம்.ஜி.ஆர் இறந்த தினமான டிசம்பர் 24, 1987 அன்றே துவங்கியது எனலாம்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுக்காக போராடிய இரு பெண்களை சந்தித்த 1989  சட்டமன்ற தேர்தல்
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுக்காக போராடிய இரு பெண்களை சந்தித்த 1989 சட்டமன்ற தேர்தல்
Written by :

‘தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தார் காணப்படும் ‘ என்பது திருக்குறளின் வரிகள். திருக்குறளின் இந்த வரிகள் கிட்டத்தட்ட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருந்தும். எம்.ஜி.ஆர் தனது சாதனைகளுக்காக நினைவுகூரப்படுவதோடு மட்டுமல்லாது, தனது அரசியல் வாரிசு ஒருவரை நியமிக்க முடியாமலேயே இறந்து போனதற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.

அதிமுகவை யார் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்ற யுத்தம் எம்.ஜி.ஆர் இறந்த தினமான டிசம்பர் 24, 1987 அன்றே துவங்கியது எனலாம். தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது, அதிமுகவின் ஒரு பிரிவினர் எம்.ஜி.ஆரின் சட்டபூர்வ மனைவியான ஜானகியுடனும், மற்றொரு பிரிவினர் 28 படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் வலம் வந்த ஜெயலலிதா பக்கமும் பிரிந்து நின்றனர்.

திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ஜானகியை பொறுத்தவரை, தனது கணவரின் வாரிசாக வருவதற்கு அரசியலை விட தனிப்பட்ட முறையில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. “ ஜெயலலிதாவுடன் இணங்கி போவதற்கான வாய்ப்பு ஜானகிக்கு இருந்தது” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கபாலன். ஆனால், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், ஜெயலலிதாவை என்ன விலை கொடுத்தேனும் ஓரங்கட்ட முயற்சி எடுத்தனர். அவர்களின் அழுத்தங்களுக்கு ஜானகியும் பணிய வேண்டியதாகிவிட்டது. எம்.ஜி.ஆரின் உடல் அடக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்ட வண்டியில், ஜெயலலிதாவின் படம் உந்தப்படும்போது, அந்த வண்டியின் மேலிருந்த கே.பி.ராமலிங்கம் போன்ற தலைவர்கள் அதனை மோசமாக கையாண்டதை பலரும் நினைவில் கொள்வர்.

1982 இல் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா, அதிமுகவின் முக்கிய பொறுப்புகளை பெற, அதன் அணிகளில் காத்துக்கொண்டிருந்தார். “வாக்காளர்களின் மனதை கவரும் வகையில் பிரபலமான வேறு யாரும் இல்லாததால் தான், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கட்சிக்குள் கொண்டுவருவதற்கான முக்கிய காரணமாக இருந்தது.” என சுட்டிக்காட்டுகிறார் பத்திரிக்கையாளர் கோபாலன். அதேவேளை, எம்.ஜி.ஆர் தனது அரசியல்வாரிசாக ஜெயலலிதா இருக்க வேண்டும் என விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக தலைவராக இருந்த எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர், “ எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தனது அரசியல்வாரிசாக நியமிக்க விரும்பவில்லை. கட்சியும், தொடர்ந்து நிலைத்திருக்க, அவர் விரும்பவில்லை “ என்று தன்னிடம் கூறியதாக கோபாலன் கூறுகிறார்.

தனது கணவர் இறந்து இரண்டு வாரங்களுக்கு பின், ஜானகி தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். மொத்தம் உள்ள 132 அதிமுக எம்.எல்.ஏக்களில் தனது பிரிவில், தனக்கு ஆதரவளித்த 97 எம்.எல்.ஏக்களை கவர்னர் முன் நிறுத்தினார். இதுகுறித்து வரலாற்றாளர் முத்தையா தான் எழுதிய நூலில் குறிப்பிடுகையில், “ தனது கணவரின் அதிகாரமிக்க இடத்தை மனைவி தொடர்ந்து பெறுவது, இந்தியாவிலேயே இதுதான் முதல் நிகழ்வு. ஆனால், தனக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஜானகி கூறுவதை 21 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று கூறி ஆளுநர், அவரை முதலமைச்சராக நியமித்தார். “ என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜானகி ராமச்சந்திரனின் அரசு வெறும் 22 நாட்களுக்கே நிலைத்து நின்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று சட்டமன்றத்தில், பெருமளவில் அமளி ஏற்பட்டது. அதன் 2 நாட்களுக்கு பின், பிரதமர் ராஜீவ்காந்தி, அரசமைப்புச்சட்டம் 356 பிரிவை பயன்படுத்தி அரசை கலைத்து, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதன் பின்னர் ஜனவரி 1989 இல் தேர்தல் நடைபெறும் வரை, தமிழகம் குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது.

1989 இல், நடந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சிக்கு வந்தாலும், அதிமுகவை பொறுத்தவரை, வாரிசு பிரச்சினை இன்னும் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு தேர்தலாகவே அது இருந்தது. எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட  ஜெயலலிதாவுக்கு, தனது வாரிசுரிமையை உறுதி செய்துகொள்ள பிரச்சார களம் ஒரு வாய்ப்பாக இருந்தது. நகரங்கள் முழுவதும், ஜெயலலிதா நடித்த சினிமாக்களை சேர்ந்த படங்களில் உள்ள புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்தாலும், சினிமாத்துறையில் இருந்த சிவாஜி கணேசனின் ஆதரவை ஜானகி பெற்றார். சிவாஜி கணேசன் காங்கிரசிலிருந்து வெளியேறி அப்போது தான் சொந்தமாக ஒரு அரசியல்கட்சியை துவங்கியிருந்தார்.

ஆனால், தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்திருந்த இரட்டை இலை சின்னத்தை எந்த பிரிவு பெறுவதற்கு தகுதியுடையது என்ற கேள்வியும் எழ துவங்கியது. திமுக தலைவர் கருணாநிதியை எதிர்கொள்ள வசதியாக, தங்களை நிலைநிறுத்தி கொள்ள இதுவும் ஒரு வழியாக இருந்தது. “துவக்கம் முதலே, தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி எதிர்ப்பு அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர்” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான மணி. ஆனால் ஜானகியோ, எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரியான கருணாநிதியை புகழ துவங்கினார். இது சராசரியான, அதிமுகவினருக்கு ஏற்புடையதாக தெரியவில்லை என குறிப்பிடுகிறார் அவர். கடைசியாக அந்த தேர்தலில், தனது தீவிர கருணாநிதி எதிர்ப்பால்  ஜெயலலிதா அணியினர் 27 சீட்டுகளையும், ஜானகி அணியினர் வெறும் 2 இடங்களையும் பெற்றனர்.

அந்த தேர்தல் முடிந்து 10 நாட்களுக்கு பின், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, தான் அரசியலில் இருந்து ஒதுங்க போவதாகவும், யாருக்கும் தடங்கலாக இருக்க விரும்பவில்லை எனவும் அறிவித்தார். அத்துடன் அதிமுகவும் ஜெயலலிதா கைவசம் வந்தது.

Also read: 

Elections 2023

No stories found.
The News Minute
www.thenewsminute.com