இயக்குனர் ராஜமௌலி, பாகுபலி மன்னரை பாதுகாக்க வேண்டிய கட்டப்பா ஏன் திடீரென அவரை கொன்றார் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.

news Entertainment Friday, April 01, 2016 - 15:31

2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி சினிமாவின் தொடர்ச்சியாக பாகுபலி 2 இந்த ஆண்டு வெளிவர போகுதாம். பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் உள்ளிட்ட, நமது மண்டையை பிச்சி கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கும் இந்த பாகுபலி 2 இல் விடை கிடைக்கும் என நாமனைவருமே நம்பி கொண்டிருக்கிறோம்.

ஆனால், நமது நியூஸ் மினிட் வாசகர்களாகிய நீங்கள் அதுவரை சினிமா வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

மன்னரை பாதுகாக்கும் உறுதியுடன் இருந்த கட்டப்பா என்ற மனிதர் கையால், ஏன் பாகுபலி கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான விடையை  நமது நியூஸ் மினிட் வாசகர்களுக்காக இயக்குனர் ராஜமௌலி, ஒரு சிறப்பு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

அனுஷ்கா கதாபாத்திரமாக நடித்த தேவசேனாவை அடைய பாகுபலிக்கும், பல்லதேவாவிற்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது என நியூஸ் மினிட்டிடம் ராஜமௌலி கூறினார்.

இதனை தொடர்ந்து பல்லா, தன்னிடமிருந்த அரியணை, பெண், தனது அம்மா சிவகாமியின் ஆதரவு என அனைத்தையும் பாகுபலியிடம் இழந்தார். ஆனால், அதன்பிறகு தந்தை – மகன் ஜோடியான பல்லதேவாவும், பஜ்ஜலதேவாவும் பாகுபலிக்கு எதிராக சிவகாமியை திருப்ப சதி செய்கிறார்கள். அவர்கள் அதனை திறமுடன் செய்யும் போது மற்றொரு அரசுடன் போர் உருவாகிறது. இந்த நிலையில், சிவகாமி கட்டப்பாவிடம் போர் களத்தில் பாகுபலியை கொன்று விடும்படி உத்தரவிடுகிறார்.

இது ஒரு விரிவான விளக்கம். ஆமாம். ராஜமௌலி எங்களிடமே முதன்முதலாக இதனை பகிர்ந்து கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் கூறி கொள்கிறோம். இதை வாசிக்கும் நீங்களும் கூட இதனை மெய் மறந்த நம்புவீர்கள்  என்றே நினைக்கிறோம். ஏனென்றால் இன்று முட்டாள்கள் தினம்.!

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.