வறட்சியை தவிர்க்க ஆக்கிரமிப்புகள் விரைந்து அகற்றபடவேண்டும்

news சைக்கிள் பேரணி Sunday, February 07, 2016 - 18:23

இந்த வார துவக்கத்தில் 20 பேர் அடங்கிய குழு ஒன்று சேலத்திலிருந்து சென்னையை நோக்கி ஒரு சைக்கிள் பேரணியை துவங்கியது.340 கிலோமீட்டர்கள் தூரத்தை பிரச்சாரங்கள் செய்து கொண்டே கடக்க உள்ள அவர்களின் ஒரே நோக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட நீதாரங்களை மீட்டு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதுவே.

ஏரிகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்க போராடிவரும் சேலம் சிட்டிசன் போரம் என்ற தன்னார்வ அமைப்பு, ஜனவரி மாதத்தில் நான்கு ஆக்கிரமிப்புகளை பற்றி சேலம் கலெக்டருக்கு ஒரு புகார் மனு அளித்தது. ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து அலுத்துப்போன அந்த அந்த அமைப்பினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி சைக்கிள் பேரணி நடத்தினர். தொடர்ந்து, தமிழக அரசின் கவனத்திற்கு ஆக்கிரமிப்புகளை பற்றிய தகவல்களை கொண்டு செல்லவும், மழை நீர் சேகரிப்பை துவங்கவும் வலியுறுத்தி சேலத்திலிருந்து சென்னையை நோக்கி சைக்கிள் பேரணியை துவங்கினர்.

ஜனவரி,25 – 2016 அன்று சேலம் சிட்டிசன் போரம் அமைப்பினரால் சேலம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள நீர்நிலைகளை  குறிப்பிட்டு ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

 “மூக்கன் ஏரியை சட்டவிரோதமாக பட்டா போட்டு அதனை 13 பிரிவாக ஆக பிரித்து பிரகாசன் என்ற விவசாயி அல்லாத ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பின்னர் தனது சகோதரியான சுசீலாவிற்கு அதனை மாற்றி கொடுத்துள்ளார். அதன் மீதான உரிமையை பெறும்வரை அவர்கள் விவசாயிகள் இல்லை. ஒரு விவசாயி மட்டுமே விவசாய நிலத்துக்கான உரிமையை பெற முடியும்” என அந்த அமைப்பின் அமைப்பாளர் பியுஸ் மனுஷ் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில் இஸ்மாயில் கான் ஏரியை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 16 ஏக்கர் விரிந்துள்ள எந்த நீர்பிடிப்பு பகுதி பிளாட்டாக மாற்றப்பட்டுள்ளது. விவசாய தேவைகளுக்காக வழங்கப்பட்ட இந்த நிலம் தற்போது தேமுதிக எம்.எல்.ஏ ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது.

அந்த நிலங்களை விவசாய தேவைக்காக அல்லது நீர் பிடிப்பு பகுதியாக அல்லாமல் வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி கொள்வது சட்டவிரோதம் என அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.

அத்துடன் பள்ளப்பட்டி ஏரி மற்றும் அதனை சுற்றிய ஓடைகளின் ஆக்கிரமிப்பை பற்றியும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. “ சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஏரியின் தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்டுள்ள அந்த தடுப்புகள் வழியாக ஏரியில் உள்ள தண்ணீர் வெளியே செல்லுகிறது” ஏரிக்கு வரும் சானல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் கரையோரம் இருக்கும் வீடுகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் 2015 இல் இப்பகுதியில் உள்ள பல வீடுகளில் தண்ணீர் புகுந்து இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. ஏரியின் கரையோரம் மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த பத்தாண்டுகளாக சேலம் மாவட்டத்தில் வறட்சி அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க, சேலம் மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் வந்து சேரும் அனைத்து ஓடைகளையும் அளந்து, அவற்றின் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றிட வேண்டும்.

“மாரி அம்மன் உத்தரவு” என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் பேரணி சேலத்திலிருந்து கடந்த செவ்வாய் புறப்பட்டது. நியூஸ் மினிட்டிடம் இதுகுறித்து ” நாங்கள் அரசிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்துகிறோம். ஒவ்வொருவரும் ஆக்கிரமிப்பு தான் வெள்ள பெருக்கம் ஏற்பட்டு அழிவுக்கு காரணமாக இருக்கிறது என ஒத்து கொள்கிறார்கள். ஆனால் ஏன் அதனை அகற்ற மறுக்கிறார்கள் ? ஒருமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் அதன்பின்னர் சமூகத்திற்கு பயன்படும் வகையில் வெள்ள நீரை சேமிக்க முடியும்.” என்றார் பியுஸ் மனுஷ்.

வெள்ளபெருக்கத்தை பற்றியும் அரசின் நடவடிக்கை பற்றியும் அவர் தொடர்ந்து கூறியதாவது “ தொடர்ந்து பல வெள்ள அழிவுகளை சந்திக்க நேர்ந்த பின்னரும் அரசு தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” என்றார்.

இந்த சைக்கிள் பேரணி பிப்ரவரி 15 இல் சென்னை வந்து சேரும்.தொடர்ந்து  கோரிக்கைகளை விளக்கி பிப்ரவரி 21 இல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Translation by John Moses.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.