இரவு உணவின் போது, அவர் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.

Tamil Thursday, May 12, 2016 - 11:07

உடுமலைப்பேட்டையில் கடந்த மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

ttஇதனை தொடர்ந்து, கௌசல்யாவை உடுமலைபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு , மேல்சிகிச்சைக்காக கோயம்பத்தூர் அரசு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேவர் சமூகத்தை சேர்ந்த கௌசல்யா  தலித் வாலிபர் சங்கரை திருமணம் செய்து கொண்டதற்காக, கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி,உடுமலைப்பேட்டையில் வைத்து நடந்த தாக்குதலில் படுகாயமடைந்தார். அவரது கணவர் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன்பின்னர் சிகிச்சை முடிந்த கௌசல்யா, தனது கணவர் சங்கர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.இந்நிலையில் மேய் 11 அன்று, இரவு உணவின் போது, அவர் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தரப்பில் விசாரித்த போது, கௌசல்யா தனது கணவர் கொலைக்கு பின்னர் சட்ட ரீதியான விசாரணை குழுக்களால் அதிக அளவில் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் எனவும், சங்கரின் சமுதாயத்தினர் மற்றும் குடும்பத்தினரில் சிலர் சங்கரின் கொலைக்காக அடிக்கடி அவரை திட்டியதாகவும் அவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலால் கௌசல்யா இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினர்.

 

 

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.