மூத்த மகள், தனது தந்தையை கண்டு பயந்து அலறியதால் அவர் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது

news Crime Thursday, March 17, 2016 - 19:03

மகளை பாலியல் ரீதியாக கணவர் துன்புறுத்துகிறார் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர், தனது மகளை கொன்றுள்ளார்.

செகாந்திராபாத்  டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் வினய். இவரது மனைவி ரஜினி (41) இவர்களுக்கு  அஸ்விதா (8), தவிஷ்கா (3) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். வினய் தனது இரு மகள்களையும் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக ரஜினி சந்தேகப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, புதன்கிழமையன்று மாலையில் தனது இரு குழந்தைகளின் கழுத்தையறுத்து படுகொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் “ கடந்த சில நாட்களாக, 41 வயது ரஜினி, தனது இரு மகள்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதாக சந்தேகப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று இரவு 9 மணியளவில், ஒரு கண்ணாடி பாட்டிலை உடைத்து, அதனை கொண்டு, தனது குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தனது மகள்களை கொன்ற பின், ரஜினி, ஹுசைன் சாகர் சென்று, தன்னை சுத்தபடுத்தி விட்டு, போலீஸ் ஸ்டேஷன் வந்து சரணடைந்துள்ளார்.

இதனிடையே, ரஜினி தனது தோழிக்கு, “ அவர்களை கொன்று, விடுதலை பெற்று கொடுத்ததாக” எஸ்எம்எஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர், லட்சுமி நாராயணா, மேலும் கூறுகையில் “ அவர்கள் இரு குழந்தைகளுமே மிகவும் செயலூக்கம் உள்ள குழந்தைகள்.குறிப்பாக மூத்தவள். ஆனால் கடந்த சில நாட்களாக, அவளது தந்தையை காணும் போதெல்லாம் பயத்தில் அலறியுள்ளாள். இதனை தொடர்ந்து, மனைவி தனது கணவர் குழந்தைகளிடம், பாலியில் ரீதியாக தொல்லை கொடுக்கிறார் என்ற சந்தேகத்தில் இந்த கொலைகளை செய்துள்ளார்.” என்றார்.

குழந்தைகளின் தந்தைக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கை மேலும் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் ரஜினியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, தனது குழந்தைகளிடம் அவ்வாறு ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

போலீசார், ரஜினியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.