ஒரு தலித்தின் வாழ்க்கை பறிக்கப்படும் போது, நாம் ஏன் தவறான கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறோம்?

ஜாதியை பற்றி பேசாமல் இருப்பதால், ஜாதியே இல்லை என பொருளாகாது
ஒரு தலித்தின் வாழ்க்கை பறிக்கப்படும் போது, நாம் ஏன் தவறான கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறோம்?
ஒரு தலித்தின் வாழ்க்கை பறிக்கப்படும் போது, நாம் ஏன் தவறான கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறோம்?
Written by:

ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு பின், கிட்டத்தட்ட எல்லா முக்கிய செய்தி ஊடகங்களும் உடுமலைபேட்டையில் நடந்த சங்கர் கொலை பற்றிய செய்தியை வெளியிட்டு கொண்டிருந்தன. சங்கர் கொலை செய்யப்படும், சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளுடன், அச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள், சங்கர் என்ற தலித் வாலிபர், கௌசல்யா என்ற ஓபிசி பிரிவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் படுகொலை செய்யப்பட்டார் என குறிப்பிட்டிருந்தன.

பெரும்பாலான அந்த செய்திகளின் கீழே உள்ள வாசகர்களின் கருத்து பகுதிகளில் கொஞ்சம் நீங்கள் பார்த்தால், பலரது ஜாதி குறித்த பார்வைகள் வெளிப்பட்டிருப்பதை காண முடியும். அந்த செய்திகளில் கருத்து தெரிவித்தவர்கள், தலித் என்ற அடையாளத்தை ஊடகங்கள் ஏன்  முன்னிறுத்துகின்றன ? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். மேலும், ஊடகங்கள் இப்படி செய்தி வெளியிடுவதால், ஜாதிப்பிரிவினைகள்  நிலைத்து நிற்க காரணமாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர்.

இப்படி ஒரு வகை விவாதம் போய் கொண்டிருக்க, இப்படிப்பட்ட நிகழ்வுகளை காரணமாக வைத்து கலப்பு திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்ற வாதமும் அவைகளில் இருந்தன. இத்தகைய கருத்துக்களை வெளியிடுவோரை பொறுத்தவரை, ஜாதி எல்லைகளை கடந்து செய்யப்படும் இந்த திருமணங்கள், சட்டம் மற்றும் சமூக ஒழுங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதே. இதனால் உருவாகும் வன்முறைகள், இந்த அச்சுறுத்தலின் எதிர்வினைகளாக இருக்கின்றன என கூறுகின்றனர்.

இறுதியாக அவர்கள், ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஜாதி பிரச்சனைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். மாறாக, தம்பதியினரின் குறைந்த வயதினை பற்றியும், அவர்கள் பொருளாதார நிலையையும்  முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட வேண்டும் என கூறுகிறார்கள்.

இதை வாசிக்கும் ஒருவர், இப்படிப்பட்ட இணைய கருத்தாளர்கள், பொதுவான மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தமாட்டார்கள் என கருத கூடும்.தொடர்ந்து கொண்டிருக்கும், ஜாதி ஆவண கொலைகள், அதனை தொடர்ந்து உருவாகும் நீடித்த அமைதி போன்றவை ஒரு பிரச்சினைக்குரியதாகவே மாறி வருகிறது.

முதலாவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் கணக்குப்படி பார்த்தால், 2012-13 இல் 17.1 சதவீதமாக இருந்த தலித்களுக்கு எதிரான வன்முறை, 2013-14 இல் 19.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தலித்களின் வாழ்க்கை அவ்வளவு எளிமையானது அல்ல. 74 சதவீத கிராமங்களில் வாழும் தலித் மக்கள் 0.3 ஹெக்டேர் நிலங்களுக்கும் குறைவாகவோ அல்லது நிலமே இல்லாத நிலையிலோ தான் வாழ்கின்றனர். இரண்டு கோடிக்கும் அதிகமான தலித்துகள் ஒற்றை அறை கொண்ட வீடுகளிலும், 1.4 கோடி பேர் இரண்டு அறைகள் கொண்ட வீடுகளிலும் வசிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.

இரண்டாவதாக, தமிழ்நாட்டை குறிப்பிட்டு பார்த்தோமானால், மாநிலத்தில் நடக்கும் ஒட்டுமொத்த திருமணங்களில் 3 சதவீதம் மட்டுமே கலப்பு திருமணங்களாக நடைபெறுகின்றன .இதே நிலைமையை ஒட்டுமொத்த எஸ்சி மக்கள் தொகையை, கணக்கில் எடுத்து பார்த்தால், இந்த புள்ளிவிபரம் சராசரியாக 1.6 சதவீதம் என்ற பரிதாப அளவை காட்டுகிறது.

இந்த நிலையை, இளவரசன் மற்றும் கோகுல்ராஜ் விவகாரங்களில் நாம் பார்க்க முடியும். இளவரசன் என்ற தலித் இளைஞர், வன்னியர் ஜாதியை சேர்ந்த திவ்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட போது, அவர்கள் இருவரையும் பிரிக்க வைப்பதற்கு கடும் முயற்சிகள் பஞ்சாயத்து சார்பில் எடுக்கப்பட்டு, அவைகள் தோல்வியடைந்த நிலையில், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கலவரம் வெடிக்கிறது. எண்ணற்ற தலித் மக்களின் வீடுகள் கொளுத்தப்படுகின்றன.கடைசியாக இளவரசன், ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு போலீசாரால் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்து, கோகுல்ராஜ் என்ற தலித் இளம் பொறியாளர், கொங்கு வெள்ளாள ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காணப்பட்டார். திருச்செங்கோடு, கோவிலில் தான் அவரை இறுதியாக காண முடிந்தது. கடைசியாக அவரது துண்டிக்கப்பட்ட உடல் ரயில் தண்டவாளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு,காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக விளக்கம் வேறு கூறப்பட்டது. இறுதியில், இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் போலீசில் சரணடைந்தார்.

கோகுல்ராஜ் மற்றும் இளவரசன் சம்பவங்களில், அவர்கள் இருவரது பெயரையும் மாற்றி போட்டு, அமிர்தவள்ளி மற்றும் பழனியப்பன்,விமலாதேவி, அருணா, வைதேகி, முத்துலெட்சுமி போன்றோரின் பெயர்களை போட்டால், இதே கதை தான் சிறுசிறு மாற்றங்களுடன் வரும். இந்த இளைஞர்கள் எல்லாம் கலப்பு திருமணம் தலித் மற்றும் தலித் அல்லாதோருக்கு இடையில் செய்ததற்காக கொல்லப்பட்டவர்கள்.

இன்று பலரும், ஜாதியை பற்றி பேசுவதும், அல்லது சமூக நீதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதும், மக்கள் மத்தியில், ஜாதியை வெளிப்படையாக அடையாளப்படுத்தும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பட்ட மக்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால், தங்கள் ஜாதீய அடையாளங்களை தவிர்த்துவிட்டு ஒரு சமூக நிலையிலிருந்து செயல்படுகிறார்கள்.

இந்த கட்டுரையில் கூறப்பட்ட பலரது வாழ்க்கையிலும், தனிமனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.அவர்களை பொறுத்தவரை, அவர்கள் வாழ்க்கையில் ஜாதி, சக்தியுடன் செயல்பட்டிருக்கிறது. உண்மையில் அவர்களை தாக்கியவர்கள், அவர்கள் மீது கடும் குற்றம் என கூறிய குற்றச்சாட்டுக்களை இந்த இணைய கருத்தாளர்கள் சிறந்தது எனவும், மதசார்பற்ற தன்மை கொண்டது எனவும் முத்திரை குத்துகிறார்கள். அவர்களது குற்றம், அவர்கள் ஜாதிய எண்ணங்களை தவிர்த்தது தான்.

நம்மை பொறுத்தவரை, இந்த தனிநபர்களின் ஜாதியையும், அவர்களை தாக்கியவர்களையும் தவிர்த்து பார்ப்பது, ஒரு தேர்வாக இருக்க முடியாது.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com