தினமும் திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும்

Tamil Thursday, May 26, 2016 - 16:01

தலித் இளைஞர் கோகுல்ராஜ்  கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கோகுல்ராஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், விசாரணை கைதியாக யுவராஜ் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாக வாதாடினர்.

இதனையடுத்து, திருநெல்வேலி போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் யுவராஜிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

21 வயதான கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. திருச்செந்தூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், தனது பெண் தோழியுடன் அவர், கடந்த ஜூன் 23, 2015 அன்று கடைசியாக காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.